Jun 15, 2011

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!

JUNE 16, டேராடூன்: கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.

இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: ஆளும் பி ஜேபி அரசு இவரது உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு இவரை கொன்று விட்டது என்றே சொல்லலாம். ஹிந்து மதத்தினர் புனிதமாக கருதும் கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஒரு சாமியார் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமும் அடைந்துள்ளார்.

இவர் உண்ணவிரதம் இருந்ததை எந்த பத்திரிக்கையும் தலைப்பு செய்தியாக போடவில்லை. இப்படியாக கங்கை நதியை பாதுக்காக்க சாமியார் நிகமானந்தா உயிர் தியாகம் செய்து வீரத்துறவியானார். இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்பன பத்திரிக்கைகளும் "இவரை பற்றி செய்திகளை போட்டு மக்கள் ஆதரவை" இவருக்கு தேடிக்கொடுக்கவில்லை. இப்படி, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது எத்தனை மக்களுக்குதான் தெரியும்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் அனுதாபிகளும் யோகா சாமியார் ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவரது உண்ணாவிரதத்திற்கு கொடுக்கவில்லையே அது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடி பி.ஜே.பி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இப்படி நடந்திருப்பது இவர்களுக்கு ஹிந்து மக்களின் நலனில் ஒன்றும் சிறப்பான அக்கறை கிடையாது என்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களின் நோக்கம் ஹிந்து மக்களுக்கு நன்மை செய்வது என்பதில் இல்லை. பாபா ராம்தேவ் என்கிற மோசடி சாமியாரின் உண்ணாவிரதத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி, மத்திய அரசை கொடுத்த நெருக்கடி இருகிறதே அது சொல்லி மாளாது. பாபா ராம்தேவ்வின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூவினார்கள் இந்த பி.ஜே.பி. காரர்கள் அப்படி பட்டவர்கள் தங்கள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு ஹிந்து சாமியார் இறந்துவிட்டார், அதுவும் மர்மமான முறையில் இதற்க்கு இவர்கள் பொறுப்பேற்று ஆட்சி துறப்பார்களா?.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை கட்டி அமைத்தவர்கள் பிராமணர்களே. ஹிந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே இவர்களது முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதன் உயர் உயர்பதவிகளில் இருப்பது அனைவரும் பிராமணர்களே என்பது! மிகச்சிறுபான்மையினரான யூதர்கள் சூழ்ச்சியின் மூலம் எப்படி உலகத்தை ஆளுகின்றனரோ?, அதுபோல் இந்தியாவில் மதமாச்சாரியாங்களை உண்டாக்கி அதன்மூலம் 'இந்த பார்பனர்கள்' ஆட்சி மற்றும் அதிகார பீடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அத்வானி, ராம கோபாலன் வகைறாக்கள் "ஹிந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்ப்படுத்த" ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, காசி, மதுரா இப்படி புதுபுது பிரச்சனைகளாக உண்டாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஏன் இவர்கள் பாபா ராம்தேவையும், அன்னா ஹசாரவையும் மட்டும் தூக்கிப்பிடித்தார்கள் என்றால்? ஒன்று இந்தியாவின் ஆட்சியை பிடிக்க, மற்றொன்று இவர்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க. தொடர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்கு வெட்டவெளிச்சமாகி உள்ள இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க ஆட்சியை பிடித்தால் மட்டுமே முடியும், என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் ஊழல் ஒழிப்பு, அந்நிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றவர்களை வைத்து நடத்திய நாடகம். இவர்கள் இந்தியாவை ஆளும் பொழுது இதையெல்லாம் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இந்த வக்கற்றவர்கள் செய்த ஊழலை சொன்னால் இந்தியாவே நாறும். கார்க்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வாங்கிய சவபெட்டியில் ஊழல் செய்தவர்கள்தான் இந்த தேசபக்த வேடதாரிகள்.

கங்கை நதியை சுற்றி கல்குவாரி வைத்திருந்தவர்களில் பெரும்பகுதியினர், பி.ஜே.பி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்பதும், அதானால்தான் இவர்கள் சுவாமி நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு முறையான சிகிச்சை அழைக்கப்படவில்லை, இவரது உண்ணாவிரதத்தை யாரும் முடித்து வைக்க முயற்ச்சிக்கவில்லை இவரை பரிதாபமாக சாகவிட்டுவிட்டார்கள் என்று கடும் குற்றச்சாட்டு இவர்கள் மேல் எழுந்துள்ளது.

மேலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள் வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை. மேலும், இவருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் பொழுது இவரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாக மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநில ஆளும்கட்சியான பாரதிய ஜனதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் காங்கிரஸ் இவர் மரணமடைய காரணமே பி.ஜே.பி ஆட்சியின் மெத்தன போக்கே என்று குற்றம் சாட்டியது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது. கல் குவாரிகாரர்களோடு அரசுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு, இவரது தொடர் உண்ணாவிரதத்தை அனுமத்தித்தது, முறையான சிகிச்சை கொடுக்காதது ஆகியவையே இவரது மரணத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாடியுள்ளது.

2 comments:

தலைத்தனையன் said...

எந்த கட்சியுமே இந்தியாவை பொறுத்தவரை சுய நலத்துடன்தான் செயல்படுகிறது. பா.ஜ.க. வகுப்புவாதத்தை முன்னிறுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் கட்சியை வலுப்படுத்தப் பார்க்கிறது. எல்லா இயக்கங்களுமே மக்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான். காலப்போக்கில் சேவை மனப்பான்மை அற்றுபோய் சுயநலத்துடன் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதற்காக எல்லா வகையான தில்லு முல்லுகளும் செய்ய ஆரம்பித்துவிட்டன.

RSS மற்றும் அதன் கிளை அமைப்புகளும் எல்லா வகையிலும் நம் தேசத்தின் நலன்களை காலில் போட்டு மிதித்து உலக அரங்கிலும் நம் தேசத்தின் பெருமையை இழக்கச்செய்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களால், ஒரு நல்லவர் எப்படிப்பாராட்டப்படுவார். 114 நாட்கள் இந்த நாடும் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளும், ஹிந்து மதத்தை எல்லா வகையான அக்கிரமங்களையும் செய்து முட்டுக்கொடுத்து காப்பாற்றப் போவதாக சொன்ன மேற்படி RSS ம் அதன் குடும்ப அங்கத்தினர்களான பிஜேபி, V .H .P ., பஜ்ரங் தல் போன்ற கட்சிகளும்
நிகமானந்தா போன்ற உண்மை வீரத்துறவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது.

அவரிடம் பாபா ராம்தேவ் இடம் இருப்பதுபோல் மில்லியன்கள் டாலர்களில் இல்லை. அவரை லைட் அடித்துக் காட்ட
வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பத்திரிகைகள் இல்லை.

இதுபோன்ற நல்ல சாதுக்கள் நம் தேசத்தில் இறப்பதர்கேயன்றி இருப்பதற்கு பிறக்கவில்லை.

எங்கே செல்கிறது என் தேசம் ?

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

Share