Jun 1, 2011

பாவப்பட்ட கோடீஸ்வரன்!

JUNE 2, பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.

எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி, தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.

மக்களை ஏமாற்றி தான் சம்பாதித்த பணங்களை பாதுக்காத்து கொள்ள கொலைகாரர்களின் கூடாரமாகிய ஆர் எஸ் எஸ் இன் "யோக" ஆசிரியராகவும் மாறினார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இன்று உலகம் முழுவதும் தெரியக்கூடிய அஸ்தா டிவி சொந்தமாக உள்ளது.

தனித்திருந்து இருந்து தியானம் செய்ய என்று காரணம் சொல்லி  ஸ்கட்லாந்து உள்ள கும்ப்ரை என்ற தீவையே ரெண்டு மில்லியன் பவுண்டிற்கு விலைக்கு வாங்கினார்.

இதுவல்லாமல் நாற்பதுக்கு மேற்பட்ட யோக கேந்திரங்கள், ஐநூறு படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனைகள், யோக ரீசெர்ச் சென்டர்,  ஆயுர்வேத காலேஜ், ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை, ஏக்கர் கணக்கில் தோட்டங்கள்,  இப்படி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள்.

இவர் பயணம் செய்வது எல்லாம் சார்ட்டர் விமானத்திலும், ஹெலிஹோப்டரிலும்,  மட்டும்தான்! இவருடைய மருந்து கம்பனிகளில் தயாரிக்க கூடிய மருந்துகளில் மனிதர்களுடைய எலும்புகள் பயன்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் லேப் ரிப்போடுடன் கூடிய கம்ப்ளைன்ட்டை CPM உடைய பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், அனுப்பி உள்ளார்.

இவருடைய மருந்து கம்பெனி மூலமாக எயிட்ஸ், கான்செர், போன்ற நோய்களுக்கு மருந்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி உள்ளார். யோக மூலமாக இந்த நோய்களை மாற்றலாம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துவந்தார்.

இதற்க்கு எதிராக இந்திய சுகாதார கட்டுப்பாடு நடவடிக்கை தொடக்கிய போது,  நான் அப்படி சொல்லவே இல்லை என்று மழுப்பினார். படிக்ககூட வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது,

என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அகிலபாரதிய அகண்ட பரிசத் என்ற இயக்கம் பிரதமருக்கும்,  ஜனாதிபதிக்கும்,  கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பது தெரிந்த உடன் முதலில் அதை மறுத்து பகிரங்கமாக அறிக்கை வெளிவிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வங்கியில் உள்ள கள்ளப்பணத்தை வெளி கொண்டு வரும் நடவடிக்கையே தள்ளி வைத்து விட்டு,  இந்த சங்பரிவார சாமியார்களிடம் இருக்கும் கள்ளப்பணத்தை முதலில் வெளி கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசநல விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள்.

இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் தான் லஞ்சத்தை ஒழிக்க அன்ன ஹசாரேவின் மாடலில் அரங்க பிரவேசம் செய்ய போகிறானாம். இந்திய ஹிந்துத்துவா பத்திரிக்கைகள், இயக்கங்களும் முன்னிறுத்தும் ஒரு மாயாவிதான் இந்த பாபா ராம் தேவ்.

2 comments:

Anonymous said...

romba nalla irukku intha pathivu, rss kaara payaluval pannum attooliyam thaangalappaa

Anonymous said...

இந்த சாமியார் எல்லாம் இப்படித்தான் எஜமான் குத்துங்க எஜமான் குத்துங்கள்.