Jul 13, 2011

கல்லூரி வாசல்களிலே கலக்கும் வைகோ!

JULY 13, தெற்கு சூடான் நாடு புதிதாக உருவாக்கப்பட்டது போல மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.,யை, சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்களுக்கு வைகோ 12.07.2011 அன்று வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த லட்சக்கணக்கான குறுந்தகடுகள் (சி.டி.) தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குறுந்தகடுகளை பார்த்து விட்டு சாப்பிட முடியாது, தூங்க முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.

 சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது; பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட அவலம், தமிழ் இளைஞர்கள் அம்மணமாக இழுத்து வரப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தினர் எட்டி மிதித்து சுட்டு படுகொலை செய்கின்ற கோரக்காட்சிகள்; உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள்.

அதில் இசைப்பிரியா என்ற இளநங்கை சிங்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை ஆங்கில தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை சிங்கள ராணுவம் மறுத்துள்ளது. இந்த காட்சிகள் போலிக்காட்சிகள்; புலிகள் அதை செய்தார்கள் என்ற சகிக்க முடியாத பொய்யை சிங்கள ராணுவ பிரதிநிதி கூறியுள்ளார்.

சிங்கள பெண்ணிடம் விடுதலைப்புலிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இது வரை எந்த குற்றச்சாட்டையும் சிங்களவர்கள் கூட சொன்னதில்லை.
நம் தொப்புள் கொடி உறவுகள் இப்படி கொல்லப்பட்டார்களே என்பதை மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ள காணொலியை ஒவ்வொரு கல்லூரி
வாயிலிலும் நேரில் சந்தித்து கொடுத்துள்ளேன்.

மாணவர் சமுதாயத்தினருக்கு நான் கேட்பதெல்லாம் இந்த குறுந்தகடுகளை உங்கள் சக்திகேற்ப பிரதி எடுத்து மற்றவர்களுக்கு தாருங்கள். ஒவ்வொருவரும் இதை செய்தால் கோடிக்கணக்கான மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியும்.

நிச்சயமாக இந்த படுகொலைகளை செய்தவன் தப்ப முடியாது. குழந்தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் படுகொலை செய்தவன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவது உறுதி. கொலைகார ராஜபக்சே கூட்டம் தண்டிக்கப்படுவது உறுதி.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான். சுதந்திர தமிழ்ஈழ தேசம்தான் தீர்வு. பொது ஜன வாக்கெடுப்பின் மூலமாக தெற்கு சூடான் உருவானது போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்பதை உலகநாடுகள் முன்வைக்க வேண்டும் என்றார்.

5 comments:

மகேந்திரன் said...

வைகோ நல்ல பேச்சாளர்
மற்றும் அறிவுசார்ந்த அரசியல்வாதி.
அவரைப் பற்றிய பதிவு அருமை.


http://ilavenirkaalam.blogspot.com/

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன மகேந்திரன் அவர்களுக்கு நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

மர்மயோகி said...

வைகோ என்ற இந்திய தேச துரோகி செய்வது அப்பட்டமான துரோகம். இந்தியாவிலேயே பயங்கரவாதி மோடி என்பவனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து இந்தியாவுக்கு தேச துரோகம் செய்யும் இந்த துரோகிகள் கேட்காதது ஏன்? குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் மனித இனத்தில் சேராதவர்களா? ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் இந்த விடுதலைப்புலிகளின் ஏவல் நாய்கள் மோடி என்ற மிருகம் வரும்போது வாயையும் சூ.......தையும் பொத்திக்கொண்டிருப்பது ஏன்?
இந்த துரோகிகளுக்கு - இலங்கையில் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களிடம் கொள்ளையடித்த பணம் பிச்சை போடப்படுகிறது.
அதனால்தான் இந்த தேச துரோகிகளுக்கு இலங்கை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.
இந்த கபட நாடக மிருகங்களை புறக்கணியுங்கள்...

PUTHIYATHENRAL said...

மறுதலிப்பதும் அறிவுடைமை அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே நல்ல பத்திரிகை தருமம். உங்கள் மர்ம யோகி என்பது இணையதளமா உங்கள் பெயரில் சொடுக்கினால் உங்கள் இணையதளத்தை பார்க்க முடியவில்லை அதனால் நீங்கள் என்ன சொல்கிறீங்கள் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பு உங்களுக்கு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம். மேலும் சிந்திக்கவும் இணையத்தளம் தொடர்ந்து மோடி குறித்தும், ஹிந்துத்துவா பயங்கரவாதம் குறித்தும் எழுதி நடுநிலை பேணி வந்துள்ளது என்பதையும் உங்களக்கு அன்போடு தெரிவித்து கொள்கிறேன். தீமைகளுக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்களை அன்போடு அழைக்கிறோம். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வணக்கம் .

PUTHIYATHENRAL said...

மோடிக்கு எதிராக வைக்கோ குரல் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் வைக்கோ ஈழத்தமிலர்களுக்கு குரல் கொடுப்பதை தவறு காண முடியாது. எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. மோடியை எதிர்க்க வில்லை என்ற ஒரு காரணத்திற்க்காக வேண்டி நீங்கள் ராஜபக்சேயை ஆதரிக்க தலைபடுவதோ, அதன் காரணமாக ராஜபக்சேக்கு எதிராக செயல்படுவது தவறு என்று சொல்வதோ நடுநிலை இல்லை என்பதை அமைதியாக யோசித்து பாருங்கள் புரியும்.