Jul 18, 2011

சனாதன் சன்ஸ்தா நடத்திய தீவிரவாத பயிற்சி முகாம்!

JULY 19, கொச்சி: கோவா குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தேசத்திற்கு விரோதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம். இவ்வியக்கத்தின் சார்பாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பகிரங்கமான பயிற்சி முகாமிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இப்பயிற்சி முகாமின் பெயர் குருபூர்ணிமா மஹோட்சவ் என்பதாகும். சுவரொட்டியில் கூறப்பட்டிருந்த வாசகங்களே இந்நிகழ்ச்சி பகிரங்கமான தேசத்திற்கு எதிரானது என்பதை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவது எப்படி என்பதை சிந்திக்கும் வகையிலான மூளைக்கு வேலை அளிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தற்காப்பு நிகழ்ச்சி என்ற பெயரால ஆயுத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எர்ணாகுளம் எஸ்.எஸ் கலாமந்திர் அருகிலுள்ள டி.டி கோயிலில் வைத்து நடைப்பெற்றுள்ளது. ஆனால் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசோ போலீஸாரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

முன்பு பானாயி குளம் என்ற இடத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்திய முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் கைதுச் செய்தனர். ஊடகங்கள் இந்நிகழ்ச்சியை குறித்து மாநில முழுவதும் தொடர்ந்து கட்டுக்கதைகளை பரப்பி வந்தன. ஆனால், பகிரங்கமாக ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தப்படும் தேசவிரோத நிகழ்ச்சி குறித்து எந்த ஊடகமும் பரபரப்பு செய்தியை வெளியிடவும் இல்லை.வாய் மூடி மெளனிகளாக உள்ளனர்.

இதுக்குறித்து எர்ணாகுளம் டிவிசனின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஷியாது கூறுகையில்,’இம்மாதிரியான தேசவிரோத நிகழ்ச்சிகள் மக்களிடையே வெறுப்பையும், சந்தேகத்தையும் பரப்பவே உதவும்.  சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு சந்தேகத்திற்கு இடமில்லாத தீவிரவாத அமைப்பாகும். இவ்வமைப்பின் உறுப்பினர்களை கோவா மாநிலம் மட்கான் குண்டுவெடிப்பு வழக்கில் கோவா தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி அளித்ததன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.’ என்று கூறினார்.

2 comments:

ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள சிந்திக்கவும் அவர்களே ......இந்த பதிவை எழுதின நீங்கள் முதலில் நன்றாக சிந்திக்கவும் ......
அமெரிக்காவில் 9 /11 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலிற்கு பிறகு வேறெந்த பெரிய உயிரழப்பு தாக்குதல்கள் இதுவரை நடக்கவில்லை .....அந்த அளவிற்கு அரசாங்கம் மக்களின் உயிர்மேல் கவனம் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் உண்மையாக இருக்கிறது......ஆனால் நம் இந்திய தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை நீர் நன்றாக பார்த்து கொண்டுதானே இருக்கீறீர்கள் ......அப்படி அரசாங்கம் மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு கொடுத்தால் இதை போன்ற எந்த சங்கமும் இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று சொல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் தானே போகும்.....அதை பற்றி நீங்கள் முதலில் எழுதி விடை கண்ட பிறகு.....இந்த பதிவை எழுதுவது தான் சரியாக இருக்கும்

Anonymous said...

ஸ்ரீகாந்த் நீங்கள் சரியாதான் சிந்தனை பண்ணுறீங்களா? நீங்கள் ஹிந்து இயக்கங்களை ஆதரிக்கிறீர்கள் அவர்கள் இந்தியாவை பாதுகாக்க பயிற்சி எடுப்பதாக சொல்கிறீர்கள். அவர்கள் இந்தியாவை சீனாவிடம் இருந்தோ, பாகிஸ்தானிடம் இருந்தோ பாதுகாக்க பயிற்சி எடுக்க வில்லை முஸ்லிம்களை இனகலவரம் நடத்தி கொல்வதற்கு, அதை புரிந்து கொள்ளுங்கள் தோழரே. ஹிந்துத்துவா ஆரம்பித்து வைத்த தீவிரவாதத்தின் விளைவே மற்றைய தீவிரவாதங்கள் தோன்ற காரணம்.