Jul 26, 2011

RSS வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கும் வீடியோ!

JULY 27, புதுடெல்லி: ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டு வீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு (பா.ஜ.க) தலையிடுகிறது.  இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார். தீவிரவாதத்தை வகுப்பு வாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

3 comments:

Anonymous said...

இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்து பாசிசத்திற்கு துணை
போனவர்கள்தான். இன்று தலைக்குமேல் சென்ற பிறகு, மூச்சு முட்டுது என்றால் என்னய்யா பொருள்? ஓட்ட வெட்ட
வேண்டிய எத்தனையோ அதி தீவிர கால கட்டங்களில்கூட இடைக்காலத் தடையோடு நிறுத்திக்கொண்டது நம்
அரசு. நம் அரசே எல்லா வகையிலும் நாடு துண்டாக எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
காலம் என்ன சொல்லும் என்று பார்ப்போம்.

- தலித் மைந்தன்

Anonymous said...

வேறு வழியில்லை. தமிழ்நாட்டை பிரித்து முஸ்லீம்களுக்கு தனிநாடு கொடு என்று கேட்க வேண்டியதுதான். முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளை தனியே கொடுத்தால் நாம் தனிநாடாக இருக்கலாம். அதே போல, மல்லப்புரமும் தனிநாடாக ஆனால், தமிழ்நாட்டின் இருபக்கமும் பாகிஸ்தான் பங்கலாதேஷ் போல இருக்கலாம். நம் பகுதிகளில் இருக்கும் அஹ்மதியாக்களையும் ஷியாக்களையும் அப்புறப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. இந்த முயற்சியை முதலில் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்றோர் முன்னெடுக்க வேண்டும்.

Muna Dave said...

ரஜினி உறுப்பினர்கள் அவர்கள் சட்டவிரோத பொருள் போன்ற பணம் சம்பாதிக்க என்று பதிலாக வேலை உறுதி வழங்கப்படும் அரசியலில் சேர தயாராக உள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR