Jul 10, 2011

நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?

JULY 11, அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், ஜெயசந்திரன், வேலுச்சாமி மற்றும் போலீசார் காசிதர்மம் குளத்தின் கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற வாலிபரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது, 10 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 10 ஜெலட்டின் குச்சிகள், 3 கட்டு சுருள் கம்பி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் வெடிபொருட்களை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த இ.சுப்பையாபுரத்தை சேர்ந்த ஞானதாஸ் (29) மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் வெட்ட வெளிச்சமானது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் வெடிக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்காசி பகுதியில் ஏற்கனவே வகுப்பு வாத வெறியை கிளறிவிட்டு கலவரத்தை தூண்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பல முயற்சிகளை முன்பு மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்நிலையில் தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூரில் ஞானதாஸ் என்ற வாலிபர் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரிடம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவருக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புபடை அதிகாரிகள் நெல்லை விரைகின்றனர்.

4 comments:

senthil said...

are u loose,daily u wrote HINDUS are worst fellow,stop that nonsense

Anonymous said...

Mr. Senthil, if you can not observe things which are taking part in recent period in India, you must be an outdated man or you are one of those millions of brainwashed hindu extremists.

But still there are much more million Hindu brothers are not brainwashed. They are peace loving real indians. If you want to be a justice loving Indian, open your mind and look arround then you will know that what is going-on in our country.

Please try to understand and be a just and peace loving Indian.

Dont you see? The most of the Sadhus and saints are caught red handed and imprisoned for their plot in bomb planting and blasting. But they have done and put the blame on Muslims. Please Senthil, we should not support bad elements whoever it might be.

Thank you - Thameem

Anonymous said...

Mr.Senthil u r misunderstood regarding
which are they wrote news.they are not
taking about hindu people.they taking
about Hindu extremists only.why they are keep write that. because for example did you read the news about neelai dist. fireworks things same thing happened by muslims what you are saying all media muslim extremists carring kill to innocent people.if same thing did hindu people not saying hindu extremists that meant they ae wrote hindu extremists .muslims and hindu are brothers but some vhp and rss people seprated religious.so mr.senthil take it easy make it brotherhood. thanks mulakkam

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன செந்தில் மற்றும் பெயரில்லாமல் கருத்து சொல்லியவர் ஆகியோருக்கு முதற்கண் என் வணக்கத்தையும், கருத்து சொல்லியதற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இதற்க்கு முன்னாள் ஒரு சம்பவம் ஆர்.எஸ்.எஸ். காரர்களால் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஆர்.எஸ்.எஸ் நடத்திய சதித்திட்டம் வெட்ட வெளிச்சமானது. என்பது நான் இட்டு கேட்ட வில்லை இது உண்மை சம்பவம். நீங்கள் நெல்லை செய்திகளிலோ, அல்லது உளவு துறை வட்டாரங்களிலோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். நெல்லை தென்காசி பகுதியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முஸ்லிம்களிடம் வம்பு சண்டையை இழுத்து ஏதாவது மதகலவரத்தை உண்டாக்கி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை கெடுக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பதே தென்காசி மக்களின் கருத்து. உங்களுக்கு தென்காசியில் நண்பர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா என்பது ஹிந்துகளை குறிக்காது. ஹிந்து மக்கள் நல்லவர்கள், அதுபோல் முஸ்லிம் ஒருசிலர் செய்யும் தீவிரவாத நடவடிக்கைக்கும் முஸ்லிம்களும் சம்மந்தம் இல்லை. இது போல்தான் கிருஸ்தவர்களும். இதை புரிந்தால் குழப்பம் இல்லை. நன்றி தொடர்ந்து வருகை தாருங்கள்.