Jul 4, 2011

கோவில் சொத்து யாருக்கு சொந்தம்?

July 05, கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளிலிருந்து 90000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக்குடங்கள், வெள்ளிக் குடங்கள் என்று அளவிடற்கரிய பொக்கிஷங்கள் கிட்டியுள்ளன.

சிலர் அந்த பொக்கிஷம், தனவந்தர்களுக்கோ, அரசுக்கோ, குபேரர்களுக்கோ சொந்தமல்ல, குசெலர்களுக்குத்தான் (ஏழைகளுக்குத்தான் சொந்தம்) என்று சொல்கின்றனர். சிலரோ மற்ற மதத்தினரின் வழி பாட்டுத்தலங்களில் இப்படி பொக்கிஷங்கள் கிடைத்தால் இது போல் பங்கு வைப்பீர்களா? என்று கேட்கின்றனர்.

கேரளா முதல் அமைச்சர் உம்மன் சாண்டி இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்ப்போம்அதுவரை கோவில் வளாகத்திலேயே நிரந்தரமாக காவல் சாவடி அமைத்து பொக்கிஷங்களை ரகசிய அறைகளிலேயே பாதுகாப்போம். என்று முடிவு செய்திருக்கிறார்.
திருவிதாங்கூர் ராஜ பரம்பரையோ கோர்ட் தீர்ப்பு வரும்வரை நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

பொக்கிஷங்களை ஏன் அந்தக்காலத்தில் கோவில்களில் பாதுகாத்தனர்? பொதுவாக அந்தக்காலத்திலே இரு நாடுகளுக்கு போர் மூண்டால் அரண்மனை கஜானாக்களை கொள்ளை அடிப்பதில்தான் எல்லா ராஜாக்களும் கவனமாக இருப்பார்கள். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் என்ற பேதம் எல்லாம் இல்லை,

எனவே அடுத்த நாட்டு அரசனுக்கு பயந்தும் உள்ளூர் திருடர்களுக்கு பயந்தும்(அரண்மனை திருடர்களுக்கு பயந்தும்) கோவிலில்தான் எல்லா அரசர்களும் ரகசிய அறைகளை உருவாக்கி பொக்கிஷங்களை பாதுகாத்து வந்திருக்கின்றனர். நம் இந்திய வரலாற்றை புரட்டி பார்த்தோமானால் கஜனி முகமது சோமநாதர் ஆலயத்தை தகர்த்தார் என்ற செய்தியை பார்க்கலாம்.

கஜனி முகமதுவும் எல்லா மன்னர்களையும் போல் தனத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாகத்தான் சோமநாத ஆலயத்தின் ரகசிய அறைகளை உடைத்து பொக்கிஷங்களை கொள்ளை அடித்தானே தவிர கோவிலை உடைத்து நாசம் செய்யவேண்டும் என்றல்ல.
ஆர்.எஸ்.எஸ் சொல்வதுபோல் முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை இடித்தார்கள் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தார்கள் என்பதெல்லாம் திரிக்கப்பட்ட செய்திகளை வரலாறு என்று தொகுக்கப்பட்டவற்றிலிருந்து எடுத்தது.

13 comments:

Anonymous said...

எங்கள் இந்துக் கோவில்களிலே இருப்பதுபோல் முஸ்லிம்கள் மசூதிகளிலே பொக்கிஷங்களை பாதுகாக்க அறைகளெல்லாம் இல்லையா? அல்லது அறைகள் இல்லை என்று பொய் சொல்கிறார்களா?
- PARTHIBAN

Anonymous said...

இந்த பணம் பொது மக்களுக்கு உரியதே! இது அந்த கால மன்னர்களின் கருவூலத்தில் உள்ளபணம். இது மக்களிடம் இருந்து மன்னர்கள் வரி வசூலித்து அதை கோவில்களில் பாதுகாத்து வந்தார்கள் என்பதே உண்மை. இந்த பணத்தை வைத்து ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் விதம் மருத்துவமனைகள், மற்றும் கல்வி கூடங்கள் அமைக்க செலவு செய்யலாம். - RAJESH

Anonymous said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான்! இந்த பணத்தை கொண்டு மக்கள் பயன்படும்படி நல்ல நலத்திட்டங்களை தீட்ட வேண்டும். இந்த பணத்தை வைத்து நதிநீர் இணைப்பு திட்டத்தை ஏற்படுத்த பயன்படுத்தலாம். எதிர் காலத்தில் தண்ணீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எனவே தண்ணீர் சேமிப்புக்கு வேண்டி உள்ள திட்டங்களுக்கு செலவிடலாம்.

YOURS - SENTHAMARAI KANNAN

Anonymous said...

பார்த்திபன் அவர்களே, முஸ்லிம்களுக்கு சொந்தமான மசூதியில் கடவுளை வழிபட காணிக்கைகள் இல்லை! ஒருவர் கடவுளை வழிபட வேண்டும் என்றால் நீங்கள் மசூதிக்கு வெறும் கையை வீசிக்கொண்டு போகலாம். பிராத்தனைக்காக மலரோ, பழமோ, தேங்காயோ எதுவும் எடுத்துச்செல்ல வேண்டாம். மசூதி என்பது எந்த ரகசிய அறைகளும் இல்லாத திறந்த ஒரு ஹால் அதில் எந்த உருவமோ அலங்காரமோ எதுவம் கிடையாது. வெளிச்சத்திற்கு லைட், காற்றுக்கு மின்விசிறி, இவைதவிர முகம் கைகால்களை, சுத்தம் செய்ய தண்ணீர் வசதி, அது தவிர வேறு ஏதும் அங்கு இல்லை. நீங்கள் ஒரு தகவாலாக அதை அறிந்து கொள்ள கேட்கிறீர்கள் என்று நினைத்து பதில் சொல்லி இருக்கிறேன். நன்றி சகோதரரே- அன்புடன் - சலீம்.

Anonymous said...

பார்த்திபன் அவர்களே, முஸ்லிம்களுக்கு சொந்தமான மசூதியில் கடவுளை வழிபட காணிக்கைகள் இல்லை! ஒருவர் கடவுளை வழிபட வேண்டும் என்றால் நீங்கள் மசூதிக்கு வெறும் கையை வீசிக்கொண்டு போகலாம். பிராத்தனைக்காக மலரோ, பழமோ, தேங்காயோ எதுவும் எடுத்துச்செல்ல வேண்டாம். மசூதி என்பது எந்த ரகசிய அறைகளும் இல்லாத திறந்த ஒரு ஹால் அதில் எந்த உருவமோ அலங்காரமோ எதுவம் கிடையாது. வெளிச்சத்திற்கு லைட், காற்றுக்கு மின்விசிறி, இவைதவிர முகம் கைகால்களை, சுத்தம் செய்ய தண்ணீர் வசதி, அது தவிர வேறு ஏதும் அங்கு இல்லை. நீங்கள் ஒரு தகவாலாக அதை அறிந்து கொள்ள கேட்கிறீர்கள் என்று நினைத்து பதில் சொல்லி இருக்கிறேன். நன்றி சகோதரரே- அன்புடன் - சலீம்.

தலைத்தனையன் said...

அன்பர் பார்த்திபன் அவர்களுக்கு, எமக்கு தெரிந்தவரை இந்து கோவில்களில் இருப்பதுபோல் மசூதிகளில் நிலவறைகள், இரகசிய அறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஸ்ரீ பத்பநாப சுவாமி கோவில் கிட்டத்தட்ட 400 வருட புராதன கோவில். இப்பொழுது கட்டும் கோவில்களில் அதுபோல் இல்லை. அதற்க்கான அவசியமும் இல்லை.

Anonymous said...

என்னய்யா நினச்சுக்கிட்டிருக்கீங்க? நாங்களெல்லாம் ஒண்ணுமே தெரியாத பேயன்களா என்ன? ஒவ்வொரு

தர்க்காவிலும் எவ்வளவு பெரிய உண்டிகள் அதுவெல்லாம் வசூல் இல்லையா. கேட்டால் எங்களுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பீர்கள். வானொலியில் சேக் அப்துல்லா என்பவரோ சித்திக் அவ்துல்லா என்பவரோ தர்க்காவில் உள்ளவருக்கு சக்தி உண்டு என்று பேசியதை பார்த்து இருக்கிறேன். ஜரிகை வேலைப்பாடு உள்ள குல்லா போட்டிருப்பார். ** பார்த்திபன்

Anonymous said...

சாரி வானொலி இல்லை காணொளி - **பார்த்திபன்

balasundaramk said...

நாம் இங்கே விவாதிப்பது நல்ல முடிவுகளுடன் நமது செய்கைகளை நகர்த்துவதர்க்காகவே தவிர நான் சொல்வது மட்டும்தான் சரி என்று வாதிடுவதற்கு அல்ல.

உங்கள் அனைவருடைய விவாதங்களும் பழைய வரலாற்று தவறுகளை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சற்றே பொறுமையுடன் விவாதிக்கலாமே.

Anonymous said...

dear parthiban, தர்காவில் உண்டியல் இருக்கிறது சரியாகத்தான் சொல்றீங்கள் நீங்கள் சொல்வது மாதிரி அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. அங்கே அந்த லெப்பைமார்கள் வசூலிக்கும் பணத்தை வைத்து அவர்கள் வயிறு வளர்க்கவே பத்தாது. உண்டியலில் பணமும் ஒன்றும் யாரும் பெரிசா பணம் போடுவது இல்லை. வருசத்திற்கு ஒரு முறை அந்த உண்டியலை துறந்து பணத்தை எடுப்பார்கள் அந்த தர்கா கமிட்டியை சார்ந்தவர்கள் அதை வைத்து அந்த தர்காவுக்கு பெயின்ட் அடிக்க வசதி இல்லை என்று சொல்லி மக்களிடம் வேறு வசூலிப்பார்கள். அது போல் தார்காக்களின் உண்டியலையும் அரசு உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து பொது நலனுக்கு செலவிடட்டும் என்பதே எங்கள் கருத்தும். தர்க்கா கமிட்டி காரன் கொள்ளை அடிப்பதை நாங்கள் யாரும் விரும்பவில்லை அது ஏழை எளிய மக்களுக்கு அரசு செலவிட்டால் முதலில் சந்தோசப்படுபவர்கள் நாங்களே. by - saleem

Anonymous said...

DEAR PARTHIBAN, தர்காவில் உண்டியல் இருக்கிறது சரியாகத்தான் சொல்றீங்கள்! நீங்கள் சொல்வது மாதிரி அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை.! அங்கே உள்ள முஸ்லிம் குருமார்கள் வசூலிக்கும் பணத்தை வைத்து அவர்கள் வயிறு வளர்க்கவே போதாது. உண்டியலில் பணமும் ஒன்றும் பெரிதாக சேருவதில்லை . வருசத்திற்கு ஒரு முறை அந்த உண்டியலை துறந்து பணத்தை எடுப்பார்கள் அந்த தர்கா கமிட்டியை சார்ந்தவர்கள் அதை வைத்து அந்த தர்காவுக்கு பெயின்ட் அடிக்க வசதி இல்லை என்று சொல்லி மக்களிடம் வேறு வேறு வசூலிப்பார்கள். அது போல் தார்காக்களின் உண்டியலையும் அரசு உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து பொது நலனுக்கு செலவிடட்டும் என்பதே எங்கள் கருத்தும். தர்க்கா கமிட்டிகாரன் கொள்ளை அடிப்பதை நாங்களும் விரும்பவில்லை அது மக்கள் சொத்து பக்தியை காரணம் காட்டி பணம் வசூலித்து ஒருசிலர் உண்டு கொழுப்பதை நாங்களும் விரும்பவில்லை. அந்த பணத்தை மாவட்ட ஆட்சிதலைவர் முன்னிலையில் திறந்து மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதே என் கருத்தும்.

BY - SALEEM.

PUTHIYATHENRAL said...

balasundaramk உங்கள் கருத்துக்களுக்கு ரொம்பவும் நன்றி! சரியாக சொன்னீங்கள் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு! அதனால் ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி நல்ல வார்த்தைகளை கொண்டு அமைதியுடன் விவாதிக்கலாம்! அன்புடன், நட்புடன் ஆசிரியர். புதியதென்றல்.

Anonymous said...

அன்பர் பார்த்திபன், நான் அறிந்தவரை இஸ்லாத்தின் சட்டங்கள் இரண்டு வழிகளால் பெறப்படுகின்றன. ஓன்று இறைவனால்
முஹம்மது நபி அவர்களுக்கு அளித்த இறை செய்தி அதுதான் திருமறை குர்'ஆன், இரண்டு முஹம்மது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம். இதற்க்கு அப்பார்ப்பட்ட செயல் முறைகள் இஸ்லாத்தின் வரையரைக்குள் வராது. அப்படி செய்பவர்கள் இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்கள்தானே தவிர முஸ்லிம்கள் அல்ல. இதை பின் வரும் முஹம்மது நபி அவர்களின் வார்த்தைகளாலேயே கேட்போம். "உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச்செல்கிறேன் அவை இரண்டையும் பின்பற்றும் காலமெல்லாம்
வழி தவறவே மாட்டீர்கள் அவை இறைவனின் கட்டளையான (குர்'ஆனும்), எனது வழி முறையும்.

நீங்கள் சொன்ன சேக் அப்துல்லா போன்றவர்கள், அவர்கள் யாரை தங்களின் குருநாதர் என்று எடுத்துக் கொண்டார்களோ அவர்களுக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை மேற்கண்ட நபி மொழிக்கு கொடுப்பதில்லை. எவர் பெரியவர் என்றும், குறு நாதர் என்றும், பண்டிதர் என்றும் முக்கியத்துவம்
கொடுத்து குரானுக்கும், நபி மொழிக்கும் மாற்றமாக இருந்தாலும் அந்தப் பெரியவர் தவறாக சொல்லி இருக்க மாட்டார் என்று சுயமாக
முடிவெடுத்து பாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறார்கள்.

நபி மொழியை தொகுக்க நபிகளாரின் நண்பர்களும், அவர்களை வழியொற்றி வந்தவர்களுமாக கிட்டத்தட்ட 500000 நபர்களுடைய வரலாறு அஸ்மா''உர்ரிஜால் என்ற நூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபர்களுடைய பெயர் அவர் தகப்பனார் பெயர், எந்த வம்சா வழியில் வந்தவர், எந்தக்கோத்திரத்தை சார்ந்தவர், என்ன தொழில் செய்தார், அவருடைய சொந்த வாழ்க்கையில் எந்த அளவு கண்ணியத்துடன் நடந்து கொண்டார். கொடுக்கல் வாங்கலில் தூய்மையாக இருந்தாரா, அவருடைய கல்வி தகுதி, அவர் யாரிடம் கல்வி கற்றார், அவருடைய ஞாபக சக்தி எப்படி இருந்தது இப்படியே அவர் மூலமாக வரக்கூடிய நபிகளாரைப் பற்றி வரும் செய்தியின் தன்மையை சீர்தூக்கி பார்க்க அது வரும் வழிகளை அலசி ஆராய்ந்து, அந்தக் குறிப்பிட்ட நபரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற மக்கள் என்ன சொல்கிறார்கள், அப்படிச்சொல்லும் மக்களின் தன்மை எப்படி இருந்தது அதையும் அமிலப் பரிசோதனை செய்து தான் பிறகு நபிகளாரின் செய்திகளாக தொகுத்தார்கள்.

நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய தொகுப்பை ஹதீஸ் என்று சொல்வார்கள். குர்'ஆனுக்கு அடுத்தபடியாக புஹாரி எனப்படும் நபிகளாரின் வழிகாட்டுதலை உடைய புத்தகம் இஸ்லாமிய உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதை தொகுத்தவர்கள் ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரைசார்ந்தவர்கள். அவர்களின் ஊர்பெயர் காரமாக அந்த புத்தகத்திற்கு புஹாரி என்று அழைக்கப்படுகிறது. முதலில் அவர்களுக்கு கிட்டிய நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் 300000 அதிகம் ஆனால் அவற்றிலிருந்து மேற்சொன்ன எல்லா அமில பரிசோதனைகளுக்கும் பிறகு அவர்கள் சரி என்று எடுத்துக்கொண்டது 2602 மட்டுமே. மேற்கொண்டு இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இஸ்லாமிய பெரியவர்களை அனுகுவதோடு, குர்'ஆனுடய தமிழ் மொழி பெயர்ப்பை கேட்டு வாங்கி படித்து பயன் பெறுங்கள்.

நன்றியுடன் - தமீம்