Sep 8, 2011

ராஜகோபாலன் கொலை! நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!

SEP 09, மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. இதில் அன்றைய ஆளும் கட்சியினர் ஆதரவோடு தான் கடையை வைத்துள்ளோம் என்று கடை வைத்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர் ராஜகோபாலன் தலைமையில் கடைகளை அப்புறப்படுத்துமாறு போராட்டம் நடத்தி, சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் கோபப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படையை தயார் செய்தது. அதிகாலையில் வீட்டில் செய்தி தாள் படித்துக்கொண்டிருந்த ராஜகோபலனை, பால் கொடுக்கப் போவதாக கூறி வீட்டினுள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தனர்.

சம்பவ இடத்திலேயே ராஜகோபாலன் பலியானர். அப்போது இந்தியாவின் துணை பிரதமராக இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் மதுரைக்கு நேரில் வந்து ராஜகோபலன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் நடந்த 10.10.1994 அன்று முதல் 3 மாதம் பதட்டமாகவே இருந்தது மதுரை.  இந்த வழக்கு தொடர்பாக அன்றைய ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரை போலீசார் விசாரணை செய்தனர். (நன்றி: நக்கீரன்)

சிந்திக்கவும்: ஹிந்து முன்னணி ராஜகோபாலன் கொல்லப்பட்டதும் அப்பாவி முஸ்லிம் இளஞசர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பார்ப்பன ஏடுகள் இந்த கொலையை செய்தது முஸ்லிம்கள் என்று பக்கம் பக்கமாக கவர் ஸ்டோரி போட்டார்கள். இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையில் பலவருடங்கள் அடைக்கப்பட்டார்கள். பல முஸ்லிம் இலஞசர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இப்பொழுது உண்மை வெளிவருகிறது இது கோவில் நிலத்தில் கடை வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் செய்த கொலை என்று. அதற்குள் முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் என்று தினமணி, தினமலர் போன்ற ஏடுகள் எழுதி முஸ்லிம்களை குற்றப்பரம்பரை ஆக்கி வேடிக்கை பார்த்தார்கள். என்று மதவெறி ஒழிந்து மனித நேயம் மலருமோ!

13 comments:

Anonymous said...

சரியா சொன்னீங்கள் எந்த குற்றம் நடந்தாலும் உடனே அதை முஸ்லிம்கள் தலையில் போடுவதிலேயே இருகிறார்கள் உளவுத்துறையும், மற்றும் உள்ள துறையினரும் இந்த நிலை மாறவேண்டும். இந்தியா, பாகிஸ்தான், சீன இவர்களுக்கிடையே ஒரு பனி போர் நிலவுகிறது. இந்தியாவும் தேவையில்லாமல் அந்நிய நாட்டு விசயங்களில் தலையை நுழைத்து தன்னை தாதாவாக காட்டி கொள்கிறது. அதற்க்கு அவர்களும் பதிலுக்கு சில நடவடிக்கைகளை பண்ணுகிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களின் தலை உருளுகிறது. இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தும் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் இளஞ்சர்கள் செய்யும் பதில் நடவடிக்கைகளை மட்டும் ஹிந்துத்துவா நாளேடுகள் ஊதி பெரிதாக்குகின்றன. இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு பங்களாதேஷ் என்று ஒரு நாடு பிரிய காரணமாக அமைந்தது அதனால் அவர்களும் பதில் நடவடிக்கைகளை இந்தியா மீது செய்கிறார்கள். இது போல் இலங்கை விசயத்தில் தலையை நுழைத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கெடுத்து, தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஆப்கானிதானில் இருக்கும் ஆயுததாரிகளுக்கு ஆயுதம் கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக கலகம் பண்ண தூண்டியது இந்தியா, இப்படி ஒரு குழப்பத்தின் அழிவின் பயன் அடுத்து நாம் சந்திக்கும் அழிவுகளும், குழப்பங்களும். நன்றி - தமிழன்.

suryajeeva said...

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!! . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.


2. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல்.

3.
ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?.4.
இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க?


5.
நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க.


.

Anonymous said...

இதில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிற்கும்போதே, இவர் இஸ்லாமை விமர்சித்தார், ஆகையால் இவரை கொன்றோம் என்று சொன்னார்களே..
இவரது நெஞ்சில் பிறை வடிவில் வெட்டி எடுத்தார்களே?

அதெல்லாம் சும்மனாச்சிக்குமா?

Anonymous said...

Nalla pathivu. Vaalththukkal.

Anonymous said...

Tamila dont buy dinamalar, dinamani and India today.

Anonymous said...

Mr. Suryajeeva say Tru. We are tamilan We have to together like this. We don't wanna fighting each other.

Anonymous said...

Police adiththu appadi solla solli irukkum.

ராஜ நடராஜன் said...

ஒரு பக்கம் இஸ்லாமிய தீவிரவாதம்,மறுபக்கம் இந்துத்வா தீவிரவாதம் என்று ஒன்று மற்றொன்றுக்கு சோடை போனதில்லை.முந்தைய கால கட்டங்களிலும்,ஏன் இப்போதும் கூட இஸ்லாம் தவிர வேறு பிரச்சினைகளே நமக்கு இல்லையென்ற பதிவுகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.பழனிபாபாவின் கொலைக்கும் பின்ணணி என்ன என்பதையும் கூட தெரிந்தவர்கள் யாராவது பதிவு செய்து வைக்கலாம்.

முதல் பின்னூட்டம் சிறப்பாகவே இருக்கிறது.நல்ல பின்னூட்டங்கள் கூட அனானி பெயரில் ஒழிந்து கொண்டு வரவேண்டிய அவசியமென்ன?

இந்துத்வா,இஸ்லாமிய தீவிரவாதம் இரண்டுக்கும் எதிரான பின்னூட்டம் இது.இரண்டுமே நம்மை திசை திருப்பும் விசக்கிருமிகள்.

Anonymous said...

Satiyaa sonneenga nadarajan

Anonymous said...

Peyarodu varuvatharkku google ac thevai I have only yahoo...

Anonymous said...

கொலை பண்ண வருபவன் தன்னை யார் என்று அடையாளம் காட்டி கொண்டா வருவான்! கொலைசெய்தவன் பிறை சின்னத்தை போட்டு விட்டு சென்றான் என்று சொல்வது வேண்டுமென்றே அந்த பலியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது தூக்கி போட பார்ப்பன பத்திரிக்கைகள் செய்த சதி.----- பெரியார் தாசன்.

Anonymous said...

please read www.tamilhindu.com.. jaihind..