Sep 11, 2011

இவர்கள் போலீஸா! பயங்கரவாதிகளா!

SEP 11, பரமக்குடியில் இமானுவேல்‌ சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .

ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் மறியல், கலவரம் ஆகியவை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கலவரத்தை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து வன்முறை நீடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களில் பாதுகாப்புக்காக 3ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  போலீஸ் வாகனம் எரிப்பு, துப்பாக்கிச் சூடு, 144 தடை உத்தரவையடுத்து பரமக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

1, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு வைகோ கண்டனம்!  அமைதி காக்க வேண்டுகோள்!

2, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று துப்பாக்கி சூடு: காவல்துறை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

சிந்திக்கவும்: இப்படியாக குடிமக்களை கொன்று பயங்கரவாத போலீஸ் துறை சாதனை படைத்துள்ளது! மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதை சமாளிக்க கண்ணீர்புகை, தடியடி, ரப்பர் குண்டு பிரயோகம், தண்ணீரை பீச்சி அடிப்பது இப்படி நடத்துவது தவறல்ல அதை மீறி துப்பாக்கி சூடு நடத்துவது வடிகட்டிய அயோக்கியத்தனம் பயங்கரவாதம்.

வெறும் கையேடு கலவரம் செய்யும் மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல உங்கள் கைகளில் துப்பாக்கிகள்  கொடுக்கப்பட்டிருப்பது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பயங்கரவாதம்.

கலவரம் செய்யும் மக்களை கலைக்க  தண்ணீரை பீச்சி அடிக்கும் வாகனம், ரப்பர் தோட்டாக்கள், கற்களை கொண்டு அடித்தால் அடி மேலே விழாமல் தடுக்க பைபர் தடுப்புகள் என்று இவர்களுக்கு மக்கள் வரிபணத்தில் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கும் கவசங்களோ ஏராளம். இப்படி இவர்கள் நோகாமல் நொங்கு திங்க!  கல்லடி படாமல், சுலபமாக கொஞ்சபேரை சுட்டு கொன்று கலவரத்தை அடக்கி விட நினைகிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்ச்சிகளும், சம்பளமும் வீண்தான்.  வீணாக மக்கள் பணத்தில் மக்களை கொல்ல ஒரு பயங்கரவாத படை உருவாக்கப்பட்டிருகிறது என்பதே  உண்மை.
நட்புடன்: புதியதென்றல்.

13 comments:

Anonymous said...

சரியாக சொன்னேன்கள் தென்றல் இவர்கள் போலீஸ் இல்லை பொருக்கிகள்!!

Anonymous said...

ஒரு கலவரத்தை அடக்க 6 உயிர்களா? இவர்கள் மேல் ஒரு தூசி, துரும்பு கூட படாமல் ஈசியாக மக்களை கொன்று கலவரத்தை அடக்குவார்கலாம் இப்படி பட்ட ஒரு பயங்கரவாத துறையே நமக்கு தேவையில்லை. ........ சுந்தர்

Anonymous said...

கிட்டத்தட்ட மணிக்கணக்கில் இந்த (சிரிப்புபோலீசுகளுக்காக,அம்மை (நோயல்ல) ஜெயலலிதா சட்டசபையில் வக்காலத்து வாங்கி பேசியதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். "போலிசுகளை எந்த வகையிலும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்", என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். அந்த வாய் கொழுப்பின் விளைவாக கிடைத்த பரிசுதான் இந்த 6 மனித உயிர்களின் பறிப்பு

தலித் மைந்தன்

Immanuel Sakaran said...

if rowdies are killed no need to cry...
didn't you morons set fire to police vehicles?
start learning to protest in peaceful manner.
do NOT disturb others..
understand????

ரிஷி said...

இமானுவேல் சேகரனின் நினைவுநாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் லாரிகளிலும், வேன்களிலும், கார்களிலும் பறக்கின்றனர். அவர்களது ஒற்றுமைக்கு என் பாராட்டுக்கள். ஆனால், கனத்த இதயத்துடன் அமைதியாகத்தானே போகவேண்டும். ஏன் விசிலடித்துக்கொண்டு.. ஊய் ஊய்..னு கத்திக்கிட்டு, அசிங்கமாகப் பேசிக்கொண்டு போகணும்? தங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தத் தானே செல்கிறார்கள்? அவர் இறந்தநாளைத் தானே குருபூஜையாகக் கும்பிடுகிறார்கள். அவரது நினைவிடத்தை கோயிலாக மதித்துதானே கும்பிடச் செல்கிறார்கள்? அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஒரு மனிதன் செத்த நாளன்று அமைதியாய் அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யவேண்டுமா? அல்லது சந்தோஷக் கூச்சல் போட்டுக்கொண்டு "ஒருவழியாய் ஒழிஞ்சாண்டா.." என்பது போல கூத்தாடிக்கொண்டு போகவேண்டுமா? ஏன் இப்படி செய்கிறார்கள். அனைத்து தரப்பினரும் புருவம் உயர்த்தி வியக்குமளவிற்கு ஒழுங்கைப் பேணிக்காப்பதை விட்டுவிட்டு தலைவர் எனும்போர்வையில் சில வெறி பிடித்த ரவுடிகளின் கைப்பாவைகளாக ஆகி இப்படி உயிர் விடுவதேன்?????? இந்தக் கேள்விகளுக்கு அவரவர் மனசாட்சி பதில் சொல்லட்டும். மனிதம் வாழட்டும்!

Anonymous said...

CLICK THE LINK AND READ


>>> இந்து மதத்தைவிட்டு நீங்க வேண்டும்?. பன்றியை விட‌ கேவ‌ல‌மா?
அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயமல்லவா இது...?.

ஹைதர் அலி said...

ஒரு பக்க சார்பு கட்டுரை இது

John Pandiyan said...

this article writer is trying to show that he feels for these dalits..but the main aim is to recruit people for coversion into Islam.
but the morons who convert will never be able to do this "குருபூஜை"
once converted ...

muslim conversion efforts at its best....

மகேஸ் said...

நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன், கமுதியில் படித்தேன், இராமநாதபுரம் நகரில் வசிக்கிறேன்.
நடந்தவை இவைதான்.

முதல் சம்பவம்:
பரமக்குடியில் சாலைமறியல் போராட்டத்தை விலக்க பேச்சுவார்த்தைக்குச் சென்ற காவல்துறை டி.ஸ்.பி அதிகாரியை கலவரக்காரர்களில் ஒருவர் சட்டையைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் போலீசார் மேல் நடவடிக்கை எடுத்து தடியடி நடத்தியுள்ளனர்.

இரண்டாம் சம்பவம்:
கலவரக்காரர்கள் போலீசாரை கற்களால் தாக்கியுள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் சம்பவம்:
கலவரக்காரர்களை போலீசர்ர் விரட்டிச் சென்ற போது, டெய்ஸி என்ற பெண் போலீசார் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார்.

நான்காம் சம்பவம்:
காவல்துறை மற்றும் தீயணைப்பு வாகனங்களை கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளன்ர்.

ஐந்தாம் சம்பவம்:
நிகழ்வகள் கட்டுக்கடங்காமல் சென்ற்றதால், போலீஸ் துப்பாக்கிச் சூடடு நடத்தியது.

போலீஸ் கல்வரக்காரர்களிடம் அடி வாங்கிச் சாகணுமா என்ன?

1. முதலில் தேவர் குருபூஜை மட்டுமே நடந்தது. தற்போது சில ஆண்டுகளாக அதற்குப் போட்டியாக தலித் மக்களால் இமானுவேல் சேகரன் குருபூஜை நடத்தப் படுகிறது.

2.அனைவருமே வாகனங்களில் செல்லும் போது அமைதியாகச் செல்வதில்லை. சிலர் பஸ்ஸின் ஜன்னலில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சென்றதை நான் நேரில் பார்த்தேன்.

3. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வின் ஓட்டுக்ளைப் பிரிக்க திமுக செய்யும் சதி தான் இது.

அக்டோபர் 30 தேவர் குருபூஜையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. யாராவது ஒரு தலித் குருபூஜைக்கு வரும் வாகனதை உடைத்தால் இது ஜாதிக் கலவரமாக மாறும்.

ஆனால் ராமநாதபுர மாவட்டக்காரர்களுக்கு இதெல்லாம் பழகிப் போய்விட்டது.

Anonymous said...

please read www.tamilhindu.com.. jaihind...

karuppu said...

@ மகேஷ்

நீங்கள் ஒரு சார்புடையவர் இல்லையென்றால் இதையும் எழுதி இருக்கலாம்.

1) 9 தேதி அப்பாவி தலித் பள்ளி மாணவன் ஒரு சமூகத்தினரால் கொல்லபட்டார்.

2) லட்ச கணக்கில் கூடும் குருபூஜை அன்று அதன் சமூக தலைவர் ஒருவரை கைது செய்தது (இதே போன்று தேவர் குருபூஜை அன்று செய்யுமா இந்த அரசு?)

3) போலீஸ் அடிவாங்கியெல்லாம் சாக வேண்டாம் ,ஏன் கைது செயத அவர்களுக்கு இத்தனைபேர் கூடுமிடத்தில் கலவரம் வர வாய்ப்பிருக்கும் என தெரியாதா?,எந்த அடிப்படையில் மதுரையிலும் ,இளையான்குடியிலும் துப்பாக்கி சூடு நடத்தபட்டது.
இது அரசியல் வாதிகளால் தூண்டப்பட்டு நடந்த ஒரு செயல்.முழுக்க முழுக்க இது சதி...

மதுரை சரவணன் said...

oru pakka saarpu katturai... makkal enna seithaalum muraippadi karra viththaikalai thaan payanpaduththa vendum enpathu polavum, makkal atiththaal athai esuvai poola vaangki kondu uyir viduvathu thaan arasu uliyanaana police velai enpathai ennaal erruk kolla mudiyavillai... !

RAM said...

rOWDY POLICE AND CRIMINAL PEOPLE.WHEN YOU GO FOR DEATH REMEMBARENCE ,AS HUMAN YOU SAID BE SAD.NOT GIVING TRUPLE TO OTHERS.SEE THE PEOPLE ACTIVITIES???????????????how worst .SO THIS POLICE AND THIS PEOPLE ARE MADE FOR EACH OTHERS.BUT KILLING IS VERY BAD.