Oct 13, 2011

நல்லவனா இருந்தா ஓட்டுப்போடு! இல்லேன்னா 49 'O ' போடு!

OCT 13, " தேர்தல் என்பது தன்னைத்தானே விலைப்பேசி விற்க மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு" ,இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது இந்தியாவின் தேர்தல்கள்.

ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர்,  அடுப்பு, தொலைகாட்சி பெட்டி,  அரிசி, குவார்ட்டர், அம்பது, நூறு, ஆயிரம், பிரியாணி...... விலைப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த அறிதல் அவசியமாகின்றது.

தமிழகத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சென்னை, கோவை, திருச்சி,  மதுரை,  திருநெல்வேலி,  ஈரோடு, சேலம், வேலூர்,  திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 962 பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் என்பது மற்றைய பதவிகளைப் போலல்லாமல் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய பதவி ஆகும், அரசியலமைப்பின் அடிப்படை அலகும் ஆகும்." பிரசிடென்ட் " என ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அழைக்கப்படும் தகுதி பெற்றவர் கிராமசபைத் தலைவரே ஆவார்.

கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அவற்றை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசியல் வியாபாரம் கொடிகட்டிப் பறப்பது ஆரோக்கியமான விடயமே அல்ல. உள்ளாட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும், குதிரை பேரங்கள் நடப்பதாகவும் வரும் செய்திகள் நாம் அறிந்ததே. தேர்தல் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாடுவதும், அல்லது விலை போவதுமான நடவடிக்கைகளை இனியும் தொடர்வோமானால் அதன் விளைவுகள் மிகவும் கொடியதாகவே இருக்கும் என்பதனை உணர்வோம்.

மாப்பு;  கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காக கொடுத்தான், ஒருத்தருக்காகொடுத்தான்... இல்லை ஊருக்காக கொடுத்தான் ...
ஆப்பு;  சும்மாவா குடுத்தான்?  உன் ஓட்டுக்காக குடுத்தான்.
மாப்பு;  அட ஆமா! வாங்க வேணாங்கறியா?
ஆப்பு;  வாங்கு மாப்பு வாங்கு, உன் வூட்டு காசுதான ...
மாப்பு;  இப்ப என்னாங்கற?
ஆப்பு;  100 குழி நிலம் வெச்சிருந்தா?
மாப்பு;  விவசாயி
ஆப்பு;  100 ஏக்கர் நிலம் வெச்சிருந்தா?
மாப்பு;  பண்ணையாரு
ஆப்பு;  ஊருக்கு 100 ஏக்கரா வெச்சிருந்தா ?
மாப்பு;  யாரு?
ஆப்பு;  அரசியல்வாதி! இன்னும் சொல்றேன் கேளு மாப்பு,
ஒருத்தனக்கொன்னவன்...
மாப்பு;  கொலைகாரன்
ஆப்பு;  10 பேரக்கொன்னா?
மாப்பு;  தாதா
ஆப்பு;  100 பேரக்கொன்னா?
மாப்பு;  அட ஆமா, அரசியல்வாதி!
ஆப்பு;  10 ரூவா திருடினா ..
மாப்பு;  திருடன்
ஆப்பு;  10000 கோடி திருடினா?
மாப்பு;  பழுத்த அரசியல்வாதி!!
ஆப்பு;  10 நிமிஷம் ஓய்வெடுத்தா ..
மாப்பு;  உழைச்ச களைப்பு ..உழைப்பாளி
ஆப்பு;  மாசத்துல 4 வாரம் ரூம் போட்டு ரெஸ்ட் எடுத்தா?
மாப்பு;  சந்தேகமேயில்ல ..சத்தியமா அரசியல்வாதி !!!
ஆப்பு;  உனக்கு 100 கோடி கொள்ளைக்காரன் வேணுமா, 1000 கோடி கொள்ளைக்காரன் வேணுமா?
மாப்பு;  நரிக்கி நாட்டாமை குடுத்தா கெடைக்கி நாலு ஆடு கேட்ட கதையால்ல இருக்கு, என்ன செய்ய நான் ?
ஆப்பு;  ஓப்போடு!
மாப்பு;  என்னங்கறே ?
ஆப்பு;  நல்லவன் கெடைச்சா ஓட்டுப்போடு, இல்லேன்னா 49 'O ' போடு, நாட்டை அவன் 'ஆ' போடுமுன்ன .. நீ 'ஒ' போடு ....

நம்மை நாமே ஆண்டுகொள்வதும் ஆப்பினைத் தேடிப்போய் அமர்வதும் நம் கையில். அழியாத மை நம் விரலில் வைக்கப்படட்டும், முகத்தில் அல்ல.
ரௌத்திரம் பழகு
...யாழினி...

7 comments:

Anonymous said...

நீண்ட நாள்களுக்கு பின் யாழினியின் வரிகள் படிக்க கிடைகின்றன. வாழ்த்துக்கள் யாழினி. நட்புடன் - தமிழ் செல்வி.

Anonymous said...

ஆப்பு மாப்பு இந்த எதுகை மோனை எந்த மொழி, தமிழா வேற எந்த மொழியுமா? ரவுத்திரம் பழகு என்று அழகா பேரை வைத்து கொண்டு ஆப்பு மாப்பு என்று மெட்ராஸ் பாசையில் ஒரு பதிவா? சும்மா விடைத்தேன். நல்லா இருக்கு. நன்றி. .................ரேவதி.

Anonymous said...

யாழினி உங்களுக்கு என்ன ஆச்சி கேப்டன் விஜயகாந்த் மாதிரி மாறிடீங்கள். அவரல்லவோ இதுபோல் தமிழகத்தில் எத்தனை வார்டு தெரியுமா? என்று கணக்கு சொல்லுவார்....... நீங்களுமா?.............. *********************** மகேஷ்*******************

Anonymous said...

தேர்தலுக்கு ஒரு ஒ போடு!!

Anonymous said...

நிச்சயமா நான் யாருக்கும் ஓட்டு போடபோவது இல்லை. இந்த அரசியல் என்றாலே கண்ணை கெட்டுது!!!!!!!!! ஈழ மைந்தன்.

suryajeeva said...

49 'O' போட்டுட்டேன்

Anonymous said...

இண்டர்நேஷனல் கொரில்லா திரைப்படம் காணத்தவறாதீர்கள்.

பறக்கும் குரான்கள் பாய்ந்து வந்து காஃபிர் சல்மான் ருஷ்டியை அழிக்கும் இறுதிக்காட்சி. கலிமா சொல் என்று பர்தா போடாத பாண்டிட் குவின் முஸ்லிமா சல்மான் ருஷ்டியை மிரட்டும் காட்சி, முஸ்லிமாக்கள் டைட்ஸ் போட்டுகொண்டு டப்பாங்குத்து போடும் கண்ணுக்கினிய காட்சிகள். உங்கள் ஈமான் பலப்பட, காஃபிர்கள் வெருண்டோட இன்றே காணத்தவறாதீர்கள்

காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான்