Oct 25, 2011

தமிழர்களின் கனவு பலிக்குமா?

மெல்போர்ன், அக். 26: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகர நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக போர்க் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ள ஓய்வுபெற்ற பொறியாளர் ஜெகன் வாரன் என்பவர் இந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பெர்த் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2009 மே மாதத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகளிலும் மக்கள் தங்கவைக்கப்பட்ட முகாம்களிலும் நடந்த கொடுமைகளை நான் நேருக்குநேர் கண்டேன். அவை இன்னமும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.

மக்கள் புழங்கும் இடங்களை குறிவைத்துத் தாக்கியது ராணுவம். மருத்துவமனை, பொதுமக்களின் முகாம்கள் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இன்றைக்கும் இலங்கையில் தமிழர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அது உண்மையில் அதிசயம்தான். அவர்கள் மரணத்திலிருந்தோ படுகாயங்களிலிருந்தோ எப்படியோ தப்பிப் பிழைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் கொல்லப்பட்டனர்; சிகிச்சை பெறக் காத்திருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறை தகர்க்கப்பட்டது. ஆம்புலன்ஸýகள் நொறுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் நான் நேரில் கண்டேன். 2008 கிறிஸ்துமஸ் தினத்திலும் மருத்துவமனைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சம்பவங்கள்தான் இலங்கை அதிபருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய என்னைத் தூண்டியது. ஏனெனில் அவர் அந்நாட்டின் அதிபர் மட்டுமல்ல: அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தளபதியும் ஆவார். எனவே, அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. நடந்த போர்க்குற்றங்களுக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார் என்றார் ஜெகன் வாரன்.

சிந்திக்கவும்: பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடி வரும் வேளையில் நமது தமிழகத்து உறவுகள் அதை மறந்து வழக்கம் போல தீபாவளிக்கு வெளிவந்த படங்களை காண திரையரங்குகளில் நிறைந்து வழிகின்றனர். இப்படியாக தங்கள் இனத்தின் மீது நடந்த நாசகார தாக்குதல்களை தமிழர்கள் மறந்து போனார்கள். ராஜபக்சேயை தண்டிக்க நீதிமன்றங்கள் போதாது மீண்டும் ஒரு போராளி குழு தோன்றி அவர்கள் செய்த கொடூரங்களுக்கு பழி தீர்த்திட வேண்டும். இதுவே தமிழர்களின் கனவு.

7 comments:

Anonymous said...

ராஜபக்சே என்று கொல்லப்படுகிரானோ அன்றுதான் உண்மையான தீபாவளி. - ராஜன்.

Anonymous said...

whose children going to be recruited?? yours or vanni people's

Anonymous said...

தமிழா ஒன்று படு! சிங்கள வந்தேரிகளியும், இந்திய பார்பன வந்தேறிகளின் தேசபக்தி
முகமூடியையும் ஒழித்து தனி தமிழ்நாடு அமைப்போம். - குருஜி

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழீழ போராட்டம் மீண்டும் கட்டி அமைக்கப்படவேண்டும். ராஜபக்சே கூட்டாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் கனவு. by - Raja.

Unknown said...

ராஜபக்சே கூட்டத்தை ஒழிக்க அணி திரள்கிறார்கள்!!! இப்படி ஒவ்வொருவரும் எழுத்துக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சும்மா சினிமா செய்திகளை போட்டு பொழுதை போக்காமல். எல்லா இணையதளங்களும் தமிழர் சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பை பற்றி எழுதினால் நலம். நன்றி வணக்கம்.

Unknown said...

ராஜபக்சே கூட்டத்தை ஒழிக்க அணி திரள்கிறார்கள்!!! இப்படி ஒவ்வொருவரும் எழுத்துக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சும்மா சினிமா செய்திகளை போட்டு பொழுதை போக்காமல். எல்லா இணையதளங்களும் தமிழர் சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பை பற்றி எழுதினால் நலம். நன்றி வணக்கம்.