Oct 30, 2011

அவமதிக்கப்பட்ட அபுல்கலாமும் தூக்குமேடையில் தமிழர்களும்!

OCT 31, அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்ட ஒரு விடயம்தான் சாந்தன், பேரறிவாளன், முருகன் கருணை மனு நிராகரிப்பு. மறந்த மக்களுக்கு நினைவுபடுத்தவே இந்த பதிவு.

கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச கட்ட ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டு தயாரிக்கத்தான் இதை வாங்கி கொடுக்கிறோம் என்று.

அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித்தான். ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. எத்தனை கொலைகள்? எத்தனை கற்பழிப்புக்கள்? எத்தனை பேரை சுட்டு கொன்றார்கள்? எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்? செய்தது யார் எமக்கு அமைதி தேடித்தர வந்த அமைதிப்படை.

இதே கொலையாளிகள் என்று சொல்லப்படுபவர்களின் கருணை மனுவை மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதியால் பதவியில் இருக்கும் போது அங்கிகரிக்கப்பட்ட ஒரு கருணை மனுவை அவர் பதவியை விட்டு விலகியதும் நிராகரிப்பது எந்த வகையில் நியாயம். இதுதான் இந்தியாவின் அணுசக்தி தந்த மேதைக்கு இந்தியா கொடுக்கும் மரியாதையா?

OH MY GOD! என் மறதியை என்னவென்று சொல்வது நமது ஜனாதிபதி தமிழன் ஆச்சே! தமிழனை என்று வடநாட்டுக்காரன் மதித்தான். தனது தேவைக்கு கறிவேப்பிலை போன்று பயன்படுத்தி கொள்வான் அவ்வளவே. வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் தமிழர்களில் அதிகம். உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகளை சொல்லலாம். தமிழனுக்கு பிரச்சனை வரும்போது வடநாட்டுகாரன் வாய்மூடி மவுனம் காப்பான் என்பது ஈழத்து பிரச்சனை முதல் மீனவர் பிரச்சனை வரை நிரூபனம் ஆகியது.

அதனால்தான் பெரியார் முதல் அண்ணா வரை எல்லோரும் தனி தமிழ்நாடு என்பதையே தங்கள் லட்சிய கனவாக கொண்டிருந்தார்கள். சாந்தன், பேரறிவாளன், முருகன், இவர்களை தூக்கில் போட அனுமத்தித்தால் தமிழா உனக்கு மனம், சூடு, சுரணை என்பதே இல்லை என்று ஆகும். சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் சிறையில்வாடும் தமிழர்களை மீட்க்க ஒவ்வொரு தமிழனும் முன்வரவேண்டும். மறதி மக்களின் நியதி நினைவூட்டுவது எங்களது கடமை. மீண்டும் மீண்டும் நாம் போராட்டங்களை நடத்தினாலே நம்மால் அவர்களை வெளியே கொண்டுவர முடியும்.

இலட்ச்சக்கணக்கில் போராளிகளையும், பொதுமக்களையும் நம் கண்ணெதிரே சிங்கள பயங்கரவாதிகள் கொல்வதை வேடிக்கை பார்த்து மவுனம் காத்தோம். இப்போது நம் கண்ணெதிரே தூக்கிலிட துடிக்கும் கயவர்களிடம் இருந்து நம் தமிழ் மக்களை மீட்ப்போம். இது ஒவ்வொரு தமிழனும் ஏற்கவேண்டிய உறுதி மொழி. இதுவே நாம் நம் உறவுகளின் காயங்களுக்கு நாம் இடும் முதல் மருந்து. அப்போ இரண்டாவது மருந்து என்ன வென்று கேட்கிறீங்களா? அதுதான் இந்தியா நமது அண்டைய நாடு? இதுதான் ஒன்றரை இலட்சம் உறவுகளை துடிக்க துடிக்க கொல்ல காரணமாக இருந்த இந்தியாவுக்கும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் நாம் இடும் நல் மருந்து.
-மலர்விழி-

13 comments:

Anonymous said...

தமிழர்களின் இதயத்தை தொடும் பதிவு. வாழ்த்துக்கள் தோழி.

நட்புடன்: ரேவதி.

Anonymous said...

தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திந்தித்து நினைவில் நிறுத்த வேண்டிய செய்தி. நன்றி மலர்.

நட்புடன் தோழி. மாலதி.

Anonymous said...

நிச்சயம் தமிழர்கள் போராட்டம் வெற்றிபெறும். ஒவ்வொரு தமிழனும் நம்பிக்கையோடும், ஒற்றுமையோடும் போராட வேண்டும். BY - RAJA

Anonymous said...

இந்திய அரசின் முட்டாள்தனமான வெளிநாட்டு கொள்கையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஒவ்வொரு தமிழனும் சிந்திப்பான....

tamilan said...

CLICK THE LINK AND READ

>>>> ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால். <<<<<


..

யோஹன்னா யாழினி said...

போராடி தான் அம்மூவரையும் மீட்க வேண்டும் என்றால் எத்தகைய போராட்டத்திற்கும் தமிழர்கள் தயாராக வேண்டும்.அது நடக்கும் என்று நம்புகிறேன்...தமிழனுக்கு இப்பவாவது சூடு,சொரணை , வரவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை.

Anonymous said...

இந்த முண்டம் மல்ர்விழிக்கு ஓண்ணரைக் கண்ணா?பார்வையே சரியில்லையே.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
இதே கொலையாளிகள் என்று சொல்லப்படுபவர்களின் கருணை மனுவை மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதியால் பதவியில் இருக்கும் போது அங்கிகரிக்கப்பட்ட ஒரு கருணை மனுவை அவர் பதவியை விட்டு விலகியதும் நிராகரிப்பது எந்த வகையில் நியாயம். இதுதான் இந்தியாவின் அணுசக்தி தந்த மேதைக்கு இந்தியா கொடுக்கும் மரியாதையா?
//
காங்கிரஸ்க்கு அவர்கள் செய்வது மட்டும் தான் நியாயம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

Anonymous said...

போலி தேசபக்தி தமிழர்களின் முகங்களை மூடி இருக்கிறது. அந்த அதேசபக்தி முகமூடியை கழட்டி எறிந்தால் மட்டுமே
தமிழர்கள் எல்லா பாதிப்புகளையும் உணர முடியும்.

- musthafa- nellai.

Anonymous said...

நல்லபதிவு வாழ்த்துக்கள்: நிரஞ்சன்

Anonymous said...

சிந்திக்கவும்.
அருமையான பதிவு.

இப்படியே மாவு தமிழர்களை உசுப்பேற்றி ஒரு ரத்த ஆற்றை ஓட விட்டால்தான் நமது எண்ணம் ஈடேறும்.

வாழ்த்துக்கள்.

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

- குலாம் ஹூசைன்

Anonymous said...

குலாம் ஹுசைன் உங்கள் புத்தி ஏன் இப்படி சிந்திக்குது. தமிழர்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக திரள வேண்டும் என்று எண்ணுவது தவறா?