Nov 5, 2011

புரிந்த மணிப்பூர் மக்களும்! புரியாத தமிழக மக்களும்!

NOV 06, இம்பால்: 2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். 

இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இவரின்  உண்ணா விரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வது ஆண்டை எட்டியது.

ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.   வெறும் தண்ணீரை மட்டும் உணவாக உட்கொண்டு அவர் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகள் பல உயர்ந்த விருதுகளை வழங்கியுள்ளன.

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின், தனிமாநிலமானது. கடந்த பல ஆண்டுகளாக, தனி நாடு கேட்டு நக்சலைட்களும், மக்களும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல்,  நக்சலைட்களையும், மக்களையும்
ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ வழங்கப்பட்டது.  இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது.  இதே அநியாயம்தான் காஷ்மீரிலும் இந்திய ராணுவத்தால் அரங்கேற்றப்படுகிறது.

சிந்திக்கவும்: தமிழக மக்களே சிந்தியுங்கள் இதே நிலைமைதான் உங்களுக்கும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாத படை தொடர்ந்து சுட்டு கொன்று வருகிறது அதை வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு. ஈழத்திலே தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர்கள் ஒருசில நாட்களில் கொல்லப்பட்டார்கள் இந்தியாவின் துணையோடும், இந்தியாவின் கனரக ஆயுதங்களோடும்.

மணிபூர் மக்கள் நமக்கு முன்பே தெரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்கு கோவணம் கூட மிஞ்சாது என்று. அதனால்தான் தனி நாடு கேட்டு ஒரு போராட்டத்தை துவைக்கி உள்ளார்கள்.  தமிழர்களுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் இதை நாம் புரிந்து கொள்ள  கொடுத்திருக்கும் விலையோ மிக மிக அதிகம்.

ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஒரு நாட்டையும், வீரம், மானம் உள்ள இலட்சக்கணக்கான  தமிழர்களின் உயிர்களையும், சுனாமியை கக்கும் கடலின் கோரத்தை கண்டு அஞ்சாது தினம் தினம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தும் நம் மீனவ மக்களின் உயிர்களையும் விலையாக கொடுத்து நாம் இப்போது பாடம் கற்றிருக்கிறோம் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று. நமக்கு இந்த படிப்பினையை தர தங்கள் உயிர்களை கொடுத்த மாவிரர்களுக்கு சுதந்திர தமிழகத்தில் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்படும். அவர்களது வீர வரலாறு தமிழர்களுக்கு பாடமாக ஆக்கப்படும் என்று நம்புவோம்.
-நட்புடன்: மலர்விழி-

13 comments:

Anonymous said...

NICE POSTING THANK YOU.

..இ.. மு.. கி ... said...

கருணை உள்ளம் கொண்ட இறைவன் நம் மக்களை காப்பாற்று வானாக தனித் தமிழகம் அமைந்தால் ஹிந்து மக்கள். முஸ்லிம் மக்கள். கிருஸ்தவர்கள்.அனைவர்க்கும் அனைத்திலும் சம உரிமை கொடுப்பிர்களா இல்லை இந்துக்களை தவிர மற்றவர்கள் தமிழன் இல்லை என்று சொல்விர்களா இதை முதலில் அறுவித்து பிறகு ஒரு தாய் மக்கள் வாழும் தனித் தமிழகம் உருவாக்குவோம்...தனித் தமிழகம் உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.... by ..இ... மு... கி...

Anand said...

தமிழர்களுக்கு தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும். இந்த சுயநலத்தால்தான் எல்லா இழிவுகளும்.

Sathiyanarayanan said...

/* முஸ்லிம் மக்கள். கிருஸ்தவர்கள்.அனைவர்க்கும் அனைத்திலும் சம உரிமை கொடுப்பிர்களா இல்லை இந்துக்களை தவிர மற்றவர்கள் தமிழன் இல்லை என்று சொல்விர்களா இதை முதலில் அறுவித்து பிறகு ஒரு தாய் மக்கள் வாழும் தனித் தமிழகம் உருவாக்குவோம்... */

தமிழன் எப்பொழுது இந்து ஆனான், உங்க இந்து மத வேதம் தான் எங்கள் தமிழர்களை சூத்திரன் என்று சொல்லுது, தமிழன் பிரம்மா காலில் இருந்து பிறந்தான் என்று சொல்லுது, தமிழர்களை வேசிக்கு பிறந்தவர்கள் என்று சொல்லுது.

எனவே உங்களிடம் கேட்கிறேன் தமிழன் எப்பொழுது இந்து ஆனான்?

Sathiyanarayanan said...

/* தமிழர்களுக்கு தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும். இந்த சுயநலத்தால்தான் எல்லா இழிவுகளும். */

அப்போ நீ தமிழன் இல்லை அப்படிதானே, உன்னோட பெருந்தன்மையை வைத்து அல்லது உன்னோட தேசப்பற்றை வைத்து தமிழனுக்கு அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணி வங்கிக் கொடு, எங்க மீனவர்களை காப்பாத்து. இல்லை தன்னலம் அற்றவன் என்றல் காசுமீர் கொடுமையை தடுத்து நிறுத்து, தண்டகரானிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாத்து முடியவில்லை என்றல் தன்னலம் பற்றிப் பேசாதே

இ ...மு.... கி said...

கருணை உள்ளம் கொண்ட இறைவன் நம் மக்களை காப்பாற்றுவானாக...அன்பிற்குரிய என் தமிழ் சகோதரன் சத்தியநாராயணன் அவர்களுக்கு தாங்கள் எனது பதிவை தவறாக புரிந்துள்ளிர்கள் , மன்னிக்கவும் [தமிழன் எப்பொழுது இந்து ஆனான்] இன்னும் தமிழன் தான் ஒரு இந்து என்று நம்பும் மக்கள் இல்லை என்று தாங்களால் சொல்ல முடியுமா.
[தமிழர்களுக்கு தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும். இந்த சுயநலத்தால்தான் எல்லா இழிவுகளும்.] ............உண்மைதான்........... [அப்போ நீ தமிழன் இல்லை அப்படிதானே, உன்னோட பெருந்தன்மையை வைத்து அல்லது உன்னோட தேசப்பற்றை வைத்து தமிழனுக்கு அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணி வங்கிக் கொடு, எங்க மீனவர்களை காப்பாத்து. இல்லை தன்னலம் அற்றவன் என்றல் காசுமீர் கொடுமையை தடுத்து நிறுத்து, தண்டகரானிய ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாத்து முடியவில்லை என்றல் தன்னலம் பற்றிப்பேசாதே] ......இந்திய மண்ணில்..இத்தனை கொடுமைக்கும் கவலைப்படும் உங்களைப்போல் நானும் ஒருவன்தான் ...என் பதிவுகள் தவறாக புரியும் படி இருந்தால் மன்னிக்கவும் தாங்கள் நினைப்பது போல் நான் [RSS மத தீவிரவாதி ] இல்லை அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லும் சன்மார்க்கவாதி

Anonymous said...

..இ.. மு.. கி ... said... கருணை உள்ளம் கொண்ட இறைவன் நம் மக்களை காப்பாற்று வானாக தனித் தமிழகம் அமைந்தால் ஹிந்து மக்கள். முஸ்லிம் மக்கள். கிருஸ்தவர்கள்.அனைவர்க்கும் அனைத்திலும் சம உரிமை கொடுப்பிர்களா இல்லை இந்துக்களை தவிர மற்றவர்கள் தமிழன் இல்லை என்று சொல்விர்களா இதை முதலில் அறுவித்து பிறகு ஒரு தாய் மக்கள் வாழும் தனித் தமிழகம் உருவாக்குவோம்...தனித் தமிழகம் உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.... by ..இ... மு... கி...

.இ.. மு.. க... நீங்கள் இப்னு ஷாகிர் என்கிற பெயரிலும், அனாமதயம் பெயரிலும் வந்து எழுதும் ஆர்.எஸ்.எஸ். காரர் என்பது தெரியும். தேவை இல்லாமல் நல்ல சிந்தனை பதிந்த பதிவுகளில் வந்து பின்னோட்டம் இட்டு அந்த பதிவின் தரத்தை குறைக்க வேண்டாம். தனி தமிழகம் என்பது எல்லா மதத்தினரையும், இனத்தினரையும் உள்வாங்கியதே. தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள். - முஸ்தபா.

Anonymous said...

தொடர்ந்து தமிழர்கள் சிந்தனை பதிப்புகளை வெளியிட்டு வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

masthan....

..இ.. மு.. கி said...

அஸ்ஸலாமு அலைக்கும்...சகோ முஸ்தபா உங்களின் கவனத்திற்கு இ..மு..கி.. [இந்து முஸ்லிம் கிருஸ்துவர் ] ஒற்றுமைக்காக பதியப்பட்டது நான் RSS .. அல்ல

Anonymous said...

தமிழர்களின் நினைவிடங்களை திட்டமிட்டு சிங்கள இனவாத அரசு அழித்து வரும் சூழலில் சுதந்திர தமிழகத்தில் அவர்களுக்கு குண்டு முழங்க ராணுவ மரியாதை செய்யப்படும் என்கிற வரிகள் அருமையானது காலத்தால் அவசியமானதும் கூட. நல்லபதிவை வெளியிட்ட சகோதரி மலர்விழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.மன்மதன்.

Anonymous said...

நல்ல செருப்பால் அடித்த மாதிரி பதிவு போட்டு இருக்கீங்கள். தமிழர்கள் எல்லாம் புரிந்து கொண்டு இந்தியாவை விட்டு விலகுவார்கள் சீக்கிரம்.... இந்த கனவு பகல் கனவு இல்லை பலிக்கும்.

by: RAJA

தமிழ் மாறன் said...

தமிழா! தனிதமிழ் நாடு நமது இலட்சியம் என்று சங்கே முழங்கு!!!!!!!!!!!!!

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.