Nov 8, 2011

ராஜபக்சே வீட்டுக்கு சேவகம் செய்யும் இந்திய கடல்படை!

NOV 11: கச்சத்தீவு கடல் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை 6 மணிக்கு, நான்கு கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர் தாசன் படகு உட்பட, 10க்கும் மேற்பட்ட படகிலிருந்த வலைகளை வெட்டி, கடலில் வீசினர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், மீனவர் விக்டருடைய படகின் முன்பகுதி சேதமடைந்தது. இலங்கை கடற்படையினர் வெறிச்செயல் தொடர்ந்து அரங்கேறுவதால், மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.

சிந்திக்கவும்: இந்தியாவே உனது கப்பல் படை எங்கே போனது. ராஜ்பக்சே வீட்டு கழிவறையை கழுவவா? உனது நீர்மூழ்கி கப்பல்களும், ராடார்களும் எங்கே போனது. ஈழத்திலே  கடைசி கட்ட யுத்தத்தின் போது தமிழ்  போராளிகள் கடல்வழியே தப்பி செல்லவோ அல்லது ஆயுதம் கொண்டுவரவோ விடாமல் பாதுகாத்து முற்றுகை போட்டு ராஜபக்சேவுக்கு விசுவாசமாக வலை ஆட்ட தெரிந்ததல்லவா இப்போது எமது மீனவர்களை பாதுக்காக்க முடியவில்லையா.

உனது விசுவாசம் எல்லாம் ராஜபக்சே உடந்தானா? ஓ.... தமிழர்கள் உனக்கு அந்நியர்கள் ஆச்சே.. சீக்கிரம் தனிதமிழ் நாடு அமையும் அதன் கப்பல்படை சிங்கள கயவர்களை ஓட ஓட விரட்டும். தனிதமிழ் நாட்டின் கப்பல்படையை சேர்ந்த கப்பல்களும், நீர் மூழ்கி கப்பல்களும் தமிழக மீனவர்களை பாதுகாக்க களமிறக்கப்படும் என்று நம்புவோம்.

நட்புடன்: மலர்விழி.

9 comments:

UNMAIKAL said...

சகோதரி மலர்விழி !

//இந்தியாவே உனது கப்பல் படை எங்கே போனது. ராஜ்பக்சே வீட்டு கழிவறையை கழுவவா? உனது நீர்மூழ்கி கப்பல்களும், ராடார்களும் எங்கே போனது.? //

இப்படி விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு விட்டீர்களே !!!.

உங்களுக்கு ஒரு ராயல் ஸல்யூட்.
…………………………………………….

இங்கே

சுட்டியை சொடுக்கி ப‌டிக்க‌வும்

>>>> நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! ஊடகங்களை விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார் உண்மை வார்த்தைகள் மூலம்..! நீதிபதி மார்கண்டேய கட்ஜு. <<<<<<

.

Anonymous said...

நல்லபதிவு தோழி, தமிழர் சிந்தனை களத்தில் தொடர்ந்து முத்திரையான செய்திகளை பதிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள் என்றும் நட்புடன் தோழி மாலதி.

Anonymous said...

இப்படி விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு விட்டீர்களே !!!. உங்களுக்கு ஒரு ராயல் ஸல்யூட்.
சரியா சொன்னீங்கள் வாஞ்சூர்..... நல்ல வார்த்தைக்களை கொண்டு எனது தோழிக்கு ஊக்கம் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். நட்புடன் - மாலதி.

Anonymous said...

அருமையா சொன்னீங்கள் மலர்விழி இந்திய கடல்படை மட்டும் சேவகம் செய்யவில்லை மொத்த ராணுவமும், உளவுத்துறையும்தான் சேவகம் செய்கிறது.

pmk2k7 said...

தனி தமிழ்நாடுக்கான கருத்து மட்டும் உள்ளது.அதற்கான களம் தான் இல்லை. தலைமையும் அமையவில்லை. நல்ல பதிவு.

தமிழ் மாறன் said...

முதலில் கச்சத்தீவை மீட்கவேண்டும். இதை யாரிடம் கேட்டு கொண்டு தானம் கொடுத்தார்கள் இந்த சிங்கள பயங்கரவாதிகளுக்கு. நாம் தானம் கொடுத்த பகுதிக்கு அருகாமையில் கூட நமக்கு மீன் பிடிக்க அருகதை இல்லை. தமிழர்களின் நிலை இதுதான். இந்தியாவை தமிழகத்தில் இருந்து உடைப்பதே இதற்க்கு சிறந்த தீர்வு.

தமிழ் மாறன் said...

நல்ல பதிவை பதிந்துள்ளீர்கள்! நன்றி மலர்விழி.

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.

Anonymous said...

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.