Nov 16, 2011

எங்கே தேடுவேன்! தமிழனை எங்கே தேடுவேன்!

எங்கேதேடுவேன்.. 
தமிழனை எங்கே தேடுவேன்..
முள்ளி வாய்க்காலில் முடிந்துபோனாயோ..
குண்டடிக்கு தப்பி ஐரோப்பா சென்றாயோ..
குடும்பத்தோடு அகதியானாயோ..
மானங்கெட்ட தமிழ்அரசியல்வாதிப்  பேச்சில் மயங்கிப்போனாயோ..
போன இடத்தில் தமிழீழம்  மறந்து
செட்டில் ஆன தமிழா..
 
எங்கே தேடுவேன் ஈழ தமிழனை எங்கே தேடுவேன்..
Mc Donalds - ல் மேய்கின்றாயோ.. 
saturday nights -ல் களிக்கின்றாயோ..
இரவல் மொழிகளில் கதைக்கின்றாயோ.. 
அந்நிய இரவல் மொழிகளில் கதைக்கின்றாயோ..
டொலர் வாசத்தில் தமிழ் மண்ணின்மணம் மறந்த தமிழா...
 
எங்கே தேடுவேன்..உனை எங்கே தேடுவேன்..
சுவிஸ்- ன் சுகங்களில் மூழ்கிப்போனாயோ..
சூப்பர் மார்க்கெட்டில் அலைகின்றாயோ..
ஹைப்பர் மார்க்கெட்டில்தான்  தொலைந்து போனாயோ..
கிரெடிட் கார்டைத்தேய்த்தே தேய்ந்துபோன தமிழா...
 
எங்கே தேடுவேன் தமிழனை எங்கே தேடுவேன்...
உறவுகள் மரணம் மறந்துபோனாயோ.. உன் பண்பாடு அழிவதை  நீயறியாயோ..??
இன்டெர் நெட்டில் சிக்கிக்கொண்டாயோ - தொல்லைக் காட்சிப்பெட்டியைத்தான்  கட்டிக்கொண்டாயோ
போலிச் சாமியார்மடிகளில் புதைந்துபோனாயோ..
சிங்களப் பேயின் வெறி அறிந்த தமிழா....
 
எங்கே தேடுவேன்... ஈழத் தமிழனை எங்கே தேடுவேன்..
நம் குடிசிதைந்ததை மறந்துவிட்டாயோ...
விடுதலைஉணர்வைத் துறந்துவிட்டாயோ..
சிங்கள வெறியனையும் மன்னிப்பாயோ..???
உன் நரம்புகளில் தான் தமிழ்வலி இல்லையோ..??
மாவீரர் தியாகங்கள் உன் நெஞ்சில் இலையோ..??
பிரிவினை சக்திகையில் சிக்கிச்சிதைந்து... 
KFC மொறுமொறுப்பில் நமுத்துப்போன தமிழா...
 
எங்கே தேடுவேன்...தமிழனை எங்கே தேடுவேன்...
எமை விடுவிக்கும் இறைத்தமிழனை எங்கே தேடுவேன்..
'எம் மக்களைக் கொன்றவனைக்  கொல்லும்'
தமிழ்மகாத்மாவை எங்கே தேடுவேன்..
சிவப்புத்தமிழனை எங்கே தடுவென்.. 
எங்கள் "சே"  வின் பிள்ளைகளை எங்கே தேடுவேன்..
 
 ரௌத்திரம் பழகு
...யாழினி...

12 comments:

மலர்விழி said...

நல்ல பதிவு தோழி! தமிழர்களின் துயரங்களை வலிகளை சுமந்த அருமையான பதிவு. சிறப்பான பதிவுகளை உணர்ச்சி பொங்க எழுதி வாறீங்க உங்கள் எழுத்துக்களை படித்தால் எனக்கே வீரம் வருது. நன்றி நட்புடன் தோழி மலர்.

Anonymous said...

யாழினி என்றால் ரௌத்திரம் என்று ஆயிட்டீங்க.... நீங்கள் பெண் புலியாய் சீறுவதை பார்க்கும்போது வியப்ப இருக்கு. எமது தமிழின பெண்கள் எல்லாம் வீரம் நிறைந்தவர்கள் என்பதை விளக்குகிறது. புலியை முறசை கொண்டு விரட்டியவர்கல்தானே நமது வீரப்பெண்கள். அந்த வரிசையில் உங்களை பார்க்க முடிகிறது. தமிழர்களின் துயரங்களை, வலிகளை சுமந்த அருமையான பதிவு ஒன்றை தந்திருக்கீங்க நன்றி யாழின்...

by.......... RAJA.........

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி இதையும் படியுங்கள்.

*** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
****

.

Anonymous said...

sariyaa sonneengal vanjoor.

Anonymous said...

பிரபாகரனை விட்டு தேடச் சொல்லுங்களேன்...'ஏதோ தனக்கு மட்டும்தான் பிரச்னை இருக்கு மத்தவங்களுக்கு எதுவுமே இல்லை' என்கிறமாதிரி கதைக்கிறது இலங்கைக் கூட்டம்.அரசியல் தீர்வுக்கு முயலாத, அதுக்கு லாயக்கில்லாத ஒருத்தலை தலைவனாக ஆக்கிக் கொண்டு இப்போது உலகத்தில் உள்ள எல்லாரையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறது இந்தக் கூட்டம்.இலங்கையில் தமிழீழம் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடும். புலம் பெயர்ந்து நாடுகளில் கிடைக்கிற அகதிப்பணம் தமிழீழத்தில் கிடைக்குமா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?

Sathiyanarayanan said...

/* பிரபாகரனை விட்டு தேடச் சொல்லுங்களேன்...'ஏதோ தனக்கு மட்டும்தான் பிரச்னை இருக்கு மத்தவங்களுக்கு எதுவுமே இல்லை' என்கிறமாதிரி கதைக்கிறது இலங்கைக் கூட்டம். */

அதை நாங்க சொல்லிக்கிறோம், உனக்கும் பிரச்சினை இருக்கு இல்ல அதை போய்ப் பாரு இங்க உனக்கு என்ன வேலை?

/* அரசியல் தீர்வுக்கு முயலாத, அதுக்கு லாயக்கில்லாத ஒருத்தலை தலைவனாக ஆக்கிக் கொண்டு இப்போது உலகத்தில் உள்ள எல்லாரையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறது இந்தக் கூட்டம். */

வா வந்து அரசியல் தீர்வு வங்கிக்கொடு, வாயலே வடைச் சுடதிங்கடா, அது சரி கொசுவுக்கு இரும்பு அடிக்கிற என்ன வேலை. போய் உங்க பிரச்சினையை பாருங்கடா எங்க பிரச்சினையை நாங்க பார்த்துக்கிறோம்.

/* இலங்கையில் தமிழீழம் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடும். புலம் பெயர்ந்து நாடுகளில் கிடைக்கிற அகதிப்பணம் தமிழீழத்தில் கிடைக்குமா? */

பேரோட வாங்கடா

Anonymous said...

/* பிரபாகரனை விட்டு தேடச் சொல்லுங்களேன்...'ஏதோ தனக்கு மட்டும்தான் பிரச்னை இருக்கு மத்தவங்களுக்கு எதுவுமே இல்லை' என்கிறமாதிரி கதைக்கிறது இலங்கைக் கூட்டம். */

இப்படி சொல்பவனுக்கு நிச்சயமாக மனசாட்சி என்பதே இருக்காது. இவனது அக்காள் தங்கைகள் கற்பழிக்க படவில்லை, இவனது மனைவி மக்கள் கொல்லப்படவில்லை, இவனுக்கு வலியும் இல்லை வேதனையும் இல்லை. எல்லா வற்றையும் நாம அனுபவித்துதான் தெரிந்து கொள்ளணுமா என்று நீங்கள் கேட்டால் அப்படி இல்லை. பக்கத்தில் ஒரு அச்சிட்டேன்டை பார்த்தால் மனிதாபிமானம் உள்ளவன் உடனே போயி உதவுவான், கேடு கெட்டவன் தனக்கு என்ன வென்று ஓடுவான். அதுபோல்தான் இது.

இரண்டு லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் அதை கண்டு மானம் உள்ள சூடு உள்ள சுரணை உள்ள தமிழன் குரல் கொடுத்தால் உனக்கு என்ன பொத்திகிட்டு போவியா? வந்துட்டான் பெருசா பதில் சொல்ல. நீயாரு இந்த "ரா" வின் ஏஜென்டா, அல்லது பார்பனனா" அல்லது ஹிந்துத்வாவா" இந்த மூன்று பேருக்கும் ஈழத்தமிலர்களுக்கு ஆக குரல் கொடுத்தால் பிடிக்காது.

"ரா' இதில் முழுக்க முழுக்க பார்பனர்களும், மலையாளிகளும் என்று உயர்ஜாதி காரர்கள் நிறைந்த துறை. இயல்பிலேயே பார்பனர்களுக்கு நாட்டில் என்ன நடந்தாலும் அவர்களுக்கு பரவாயில்லை அதைவைத்து எப்படி பணம் பண்ணலாம் தனது பார்பனர்களை எப்படி உயர்பதவிக்கு அனுப்பலாம் என்றே குறியாக அதற்க்கு தகுந்தாற்போல் பேசுவார்கள். அடுத்து ஹிந்துத்துவா இவர்களுக்கு என்பயம் என்றால் இந்தியா மொத்தமும் நமக்கு என்று திட்டம் போட்டுலோமே ஆனால் இவர்கள் தமிழர்கள் பலம் பெற்றால் தனிநாடு கேட்பார்களே நம்ம வர்ணாசிரம கொள்கையை பேச நமக்கு அடங்கி போக மக்களும் தேசமும் வேண்டுமே அது இப்படி பிறந்து போனால் என்ன செய்ய. அதுவும் தமிழ் நாட்டில்தான் நமது ஹிந்த்துதுவா பருப்பு வேகவில்லை என்கிற பொறாமை இப்படி போகிறது இந்த பிரச்சனை.

பிரபாகரன் ஒத்தை ஆளா இந்த போராட்டத்தை உருவாக்கினார். இந்த நூட்டண்டில் மானம் உள்ள சூடு சுரணை உள்ள ஒரு தமிழனை பார்க்கவேண்டும் என்றால் பிரபாகரனை பார். எதிரிகூட சொல்ல தயங்குகிற வார்த்தையை சொல்லும் நீ நிச்சயமாக முட்டாளாகத்தான் இருப்பாய். தமிழக மீனவர்கள் உன்ஜாதி இல்லை, ஈழதமிழர்களும் உன் ஜாதி இல்லை என்றால் நீயார் ? கண்டிப்பாக நீ தமிழன் இல்லை வடநாட்டு செட்டுவின் பையனாய் இருப்பை தமிழகத்தில் படித்து தமிழ் தெரிந்திருக்கும், இல்லை மலையாளியாக இருப்பாய் சுத்த தமிழன் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டு மவுனம் காக்க மாட்டான் புரிந்து கொள்.

by: AZAD , MALAPALAYAM, NELLAI DIS.

புகல் said...

//"எங்கே தேடுவேன்! தமிழனை எங்கே தேடுவேன்!"
//
இந்தியா என்ற இருள் தமிழ்நாட்டை விட்டு விலகும்போது ,
இந்தியா என்ற கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தமிழ்நாடு விடுபெறும்போது
தமிழ், தமிழன் உயிர்பெரும்
உயர பறக்கும்.

தமிழ்நாட்டில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக
கொண்டுவர தில்லியிடம் கையேந்த வேண்டிய அவலநிலை என்றால் என்ன சொல்ல.
இது ஒரு பதம் மட்டுமே இப்படி எண்ணற்ற எ-டு உள்ளன
நம் மக்களின் வரி பணமும், நம் தமிழ் மொழியும் அந்நியர்களால் சுரண்ட படுகின்றன.

தமிழகத்தில் இருக்கும் நிறைய மென்பொருள் துறையில், வானூர்தி நிலையங்களில் பணி செய்யும் பாதுகாப்பு அலுவலருக்கு() இந்தி மட்டுமே தெரிந்திருக்கிறது, தமிழ்நட்டில் வேலை செய்யும் இவர்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்ற கவலை மேலாண்மைக்கு இல்லை, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தனக்கு தமிழ் தெரியவில்லை என்ற வெட்கமோ, குற்ற உணர்ச்சியோஇவர்களுக்கு இல்லை மாறாக இவர்களிடம் மாட்டி கொள்ளும் நம்மவர்கள் அய்யய்யோ இவனுக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குதேனு புலம்புகிறார்கள், என்ன ஒரு கொடுமை .
இவனுங்கிட்ட இந்தில பேசமுடியலைனு,
அதற்க்கும் காரணம் தி.மு.காதான்னு குறை சொல்லுவார்கள்போல.

தமிழனை இலங்கைகாரன் கொல்லுகிறான், கன்னடகாரன் அடிக்கிறான், மாராத்திகாரன் விரட்டுகிறான், மலையாளத்தான் தமிழனை சுரண்டுகிறான் வடநாட்டவர்கள் உதாசிணபடுத்துகிறார்கள்
இப்படி ஒரு கீழ்நிலையில்தான் தமிழ் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் தழைக்க வேண்டுமானால் தமிழ்நாடு விடுதலை அடைந்தால் மட்டுமே முடியும்

தமிழ் மாறன் said...

//பிரபாகரனை விட்டு தேடச் சொல்லுங்களேன்...'ஏதோ தனக்கு மட்டும்தான் பிரச்னை இருக்கு மத்தவங்களுக்கு எதுவுமே இல்லை' என்கிறமாதிரி கதைக்கிறது இலங்கைக் கூட்டம்.அரசியல் தீர்வுக்கு முயலாத, அதுக்கு லாயக்கில்லாத ஒருத்தலை தலைவனாக ஆக்கிக் கொண்டு இப்போது உலகத்தில் உள்ள எல்லாரையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறது இந்தக் கூட்டம்.

இலங்கையில் தமிழீழம் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடும். புலம் பெயர்ந்து நாடுகளில் கிடைக்கிற அகதிப்பணம் தமிழீழத்தில் கிடைக்குமா?//

அட யாருப்பா இந்த பெயரில்லாத மனிதர்! தன் சொந்த பெயரை கூட சொல்ல தயங்கும் இவர் இப்படி பெரிய அரசியல் மகான் மாதிரி பேசுறார். அரசியல் தீர்வு என்கிறார், புலம்பெயர் மக்களை பற்றி அவதூறு செய்கிறார்.

ஏன்யா உனக்கு மனசாட்சியே இல்லையா? ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டது மாதிரி உனக்கு என்னையா பிரச்சனை நடந்தது. உனக்கு வயிறு நிறைய திங்கமுடியலையே என்று பிரச்சனை, கார், பங்களா என்று வாங்க முடியலையே என்று பிரச்சனை. உன் சொந்த பிரச்சனைக்கும் ஒரு இன அழிவுக்கும் என்னையா சம்மந்தம்.

அன்று வெள்ளைகாரனாக இருக்க போயி உனக்கு சுதந்திரம் கொடுத்தான். ராஜபக்சே வை எதிர்த்து ஒரு காந்தி இல்லை ஓராயிரம் காந்தி வந்து போராட்டம் நடத்தினாலும் அஹிம்சை வெல்லாது. அதுவும் காந்தியின் அஹிம்சையை கண்டா இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தான் வெள்ளைக்காரன் என்று நினைக்கிறாய்! அதுதான் இல்லை மக்களே! இந்தியாவை சுரண்டி எடுத்த வெள்ளையனுக்கு மேலும் சுரண்ட ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு பிச்சையா போட்டு விட்டு போனது புரிந்து கொள்.

மேலும் நிறைய லாபம் இல்லாமல் ஒரு சாம்ராஜியத்தை வெகு துரத்தில் இருந்து வழி நடத்துவது ஆட்சி செய்வது அவர்களுக்கு சிரமாக இருந்தது அதனாலேயே அவர்கள் அதை விட்டு விட்டு போனார்கள். இன்னும் முக்கியமா சொல்லணும் என்றால் காந்தி மட்டும் போராடி இருந்தால் இன்னும் நூறு வருஷம் ஆகி இருக்கும் உங்களுக்கு சுதந்திரம் கிடைக்க.

நேதாஜி, திப்பு சுல்தான், மருதுபாண்டி, கேரளா மாப்பிள்ளைமார், வேலு நாச்சியார், கான் சாஹிப் மருதநாயகம், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்ட பொம்மன் இப்படி ஆயுதம் தாங்கி போராடிய மக்களினால் வெள்ளையனுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளும், பொருளாதார நஷ்டமுமே உங்களுக்கு சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்தது என்பதை மறக்க வேண்டாம்.

நல்ல புரியிறமாதிரி சொல்லவா அதே முன்னோர்கள் வழியில் இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு சுதந்திரம் வாங்க ஒரு புதிய சுதந்திர போராட்டத்தை வெகு விரைவில் தமிழர்கள் தொடகுவார்கள். தமிழன் இனி இந்தியாவுக்கு அடிமை இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். தமிழகம் இந்தியாவுக்கு அந்நிய நாடே. இந்தியா தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு இந்தியாவோடு தமிழகம் இல்லை என்பதை தமிழர்கள் வெகு சீக்கிரம் அறிவிப்பார்கள்.

இது போல் கோமாளிதனமா கமெண்ட்ஸ் எழுதி ஒன்றும் செய்ய முடியாது புரிந்ததா. ஈழத்திலே வீழ்ந்த ஒவ்வொரு மக்களும் விதைகள் முளைப்பர். அவர்கள் எங்கே விதைகளாக முளைக்க போகிறார்கள் என்று சொல்லவா? நம்ம தனி தமிழ் நாட்டின் முளைவும் விதைகள் அவர்கள்தான். ஈழத்து இரண்டு இலட்சம் மக்கள் தங்கள் இன்னுயிரை தந்து, தமிழக மீனவர்கள் தங்கள் இன்னுயிர்களை தந்து உங்களுக்கு ஒரு சுதந்திர போராட்டத்திற்கான வித்தை கொடுத்திருகிறார்கள் என்பதே உண்மை.

நீங்கள் அடிமை பட்டு கிடப்பதை கூட அறியாத ஒரு சமூகமாகவே நீங்கள் இருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

We are Tamil peoplewhale to fight aginnst India and Sri Lanka