Dec 7, 2011

பாபர் மசூதி உடைப்பும்! அது தரும் படிப்பினையும்!

DEC 07: பாபர்  மசூதி என்ற முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை ஹிந்து பயங்கரவாதிகள் 1992  டிசம்பர் 6 தேதி உடைத்து தரைமட்டம் ஆக்கினர். இது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகி போனது.

பயங்கரவாதி அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்றபெயரில் ஒரு ரத்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை போன இடமெல்லாம் முஸ்லிம்களின் இரத்தம் ஒட்டப்பட்டது.

இறுதியாக முஸ்லிம்களின் 450 வருட பாரம்பரிய மிக்க மசூதி, ஆயிரகணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் ஹிந்து தீவிரவாத இயக்கங்களால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அத்தோடு இந்தியாவின் மதச்சார்பின்மையும் உடைந்து போனது.

இதை செய்ய அவர்கள் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் எடுத்திருகிறார்கள். ஹிந்து பாசிஸ்டுகள்  பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. பாபர் மசூதி தொடங்கி 3600 அதிகமான பள்ளிகளை இந்தியா முழுவதும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்தியாவின் நீதி மன்றங்களில் நிறைந்திருக்கும் காவி நீதிபதிகள் உலகமே பார்க்க உடைக்கப்பட்ட ஒரு மசூதியை சர்ச்சை கூறிய இடம் என்று பெயரிட்டது. பின்னர் ஹிந்துக்களின் நம்பிக்கை அடிப்படையாக கொண்டு  குரங்கின் கையில் கிடைத்த பூமலைபோல் ஒரு  தீர்ப்பை கொடுத்தது அலகாபாத் காவி மன்றம்.

முஸ்லிம்கள் இப்போது உச்ச நீதி மன்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். உச்ச நீதிமன்றம் எப்படியும்  நமக்கு நீதி வழங்கும் என்று. காவரி நதிநீருக்கும், முல்லை பெரியார் அணைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும், சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்கும், காஷ்மீருக்கும், போபால் விசவாய்வு கசிவுக்கும் பதில் சொல்லாத உச்ச நீதி மன்றமும், மத்திய அரசும்  உங்கள் பாபர் மசூதி விசயத்திற்கு மட்டும் எப்படி பதில் சொல்லும் என்று நம்புகிறீர்கள் என்பதுதான் புரியாத புதிர்.

ஆர்.எஸ்.எஸ். சொன்ன மாதிரி முஸ்லிம்களுக்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று கபர்ஷ்தான் ( அடக்கஸ்தலம்). கோழைகளாக இருத்தால் அதை இரண்டையும் தேர்ந்தெடுங்கள் வீரர்களாக இருந்தால் இதை எதிர்த்து போராட முன்வாருங்கள். வருடா வருடம் பாபர் மசூதி பெயரை சொல்லி ஊர்வலம் நடத்துவதால் எந்த பிரோஜனமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த அநியாய ஆட்சிகாரர்களை, பாசிச பயங்கரவாதிகளை  எதிர்த்து நீங்கள் போடும் வேற்று கோஷங்களால் எந்த பயனும் ஏற்ப்பட  போவதில்லை. ஒவ்வொரு வருடமும்  டிசம்பர் 6 தேதி நீங்கள் நடத்தும் போராட்டங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது. குஜராத், பாகல்பூர், நல்லி, மும்பை இப்படி கலவரங்களை பார்த்தும் இன்னும் ஏன் உறக்கம்.  ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள்  துப்பாக்கி சுடும் பயிற்சிகளை எடுத்து ஒரு சிறந்த படையணியாக உங்களை காவு கொள்ள காத்திருகின்றன. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இதுவே உங்கள் முன் நிற்கும் கேள்வி.
*மலர்விழி* 

14 comments:

Anonymous said...

அருமையான பதிவு! முஸ்லிம்கள் உறங்கியது போதும் என்பதை தெளிவா சொன்னதற்கு நன்றி!

ஆசாத்- நெல்லை.

Anonymous said...

இந்தக் கட்டுரையில் தனித்தமிழ்நாடு கேட்கவேயில்லையே...ஒருவேளை வேற சைட்டுக்கு நான் வந்திட்டேனா...வழக்கமா எங்கே சுத்தினாலும் அதுக்குதான் வருவீங்க...ஒருவேளை தனித்தமிழ்நாடு கேட்டா முஸ்லிம் அதுல தனிநாடு கேட்டா என்ன பண்றதுன்னா...நல்ல காமெடி...

மலர்விழி said...

அனோனி தோழரே வணக்கம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஈழத்தமிழர்கள் விசயத்தில் செய்தது அநீதி. தாங்கள் வல்லரசாக வேண்டும் என்பதற்காவும், ஈழம் அமைந்தால் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் தனி தமிழ் நாடு கேட்டு விடுவார்களோ என்ற பயத்திலும், சீன இலங்கைக்கு உதவி செய்து விடும் என்று சொல்லி ஒரு இனத்தின் சுதந்திர போராட்டத்தை நசுக்க காரணமாக அமைந்தது இந்தியா. அதற்க்கு நிச்சயம் இந்தியா ஒரு விலையை கொடுத்தே ஆகவேண்டும். அதற்க்கான சரியான விலை தனி தமிழ் நாடு அமைவது என்பதே எனது கருத்து மற்றும் நம்பிக்கை. இரண்டரை இலட்சம் மக்களை கொல்வதற்கு காரணமாக அமைந்தது மிகபெரிய துரோகம். அதனாலேயே பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கு எப்போதும் நான் குரல் கொடுப்பேன். இதை தான் எங்களது நண்பர் மற்றும் சிந்திக்கவும் ஆசிரியர் புதியதென்றலும் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதனாலேயே அவரும் எனது சிந்தனைகளை ஒட்டியே எழுதியும் வருகிறார். எனது பதிவுகளை அப்படியே வெளியிட்டும் வருகிறார்.

வழக்கமா எங்கே சுத்தினாலும் தனி தமிழ் நாட்டு கோசத்துக்கு வந்து விடுவீங்களே என்று சொல்லி இருக்கீங்கள். அப்படித்தான் தனிதமிழ் நாடுதான் எங்களது முழக்கம். அது ஏன் என்றால் தமிழகத்தின் மீது ஹிந்தி மொழி திணிப்பு, முல்லை பெரியாறு அணை, தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்படுதல், கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற நச்சு ஆலைகள், காவிரி நதிநீர் பிரச்சனை, இப்படி அடுக்கி கொண்டே போகலாம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதே உண்மை. ஒரு பழமையான மொழி, மற்றும் காலசாரத்தை சார்ந்த தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்பதே எங்களது சித்தாந்தம். தமிழர்கள் தொடந்து வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது நம் முன்னோர்களின் வழிவந்த சிந்தனை ஓட்டமே. அதையே நாமும் செய்கிறோம் விரைவில் மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் இதை உணர்வான் செய்வான்.

//தனித்தமிழ்நாடு கேட்டா முஸ்லிம் அதுல தனிநாடு கேட்டா என்ன பண்றதுன்னா...நல்ல காமெடி...//

இப்படி ஒரு வாசகத்தை சொல்லி இருக்கீங்கள். தனி தமிழ் நாடு என்பது ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை உள்ளடக்கியதே. அவர்களும் இந்த தனிதமிழ் நாட்டு போராட்ட சிந்தனைகளில் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே அது. அவர்களும் உங்களை போல் போலி தேசபக்தி பேசி இந்திய ஹிந்தி அரசு ஏதாவது தங்களுக்கு உதவும் என்று எதிர்பார்த்துள்ளனர். அதற்காக சொல்லப்பட்டதே அது. உடனே நீங்கள் தமிழர்களை பிரிக்க சூழ்ச்சி செய்யவேண்டாம்.

உங்களை மாதிரி சினிமா, பொழுதுபோக்கு, காமடி இப்படி பேசி திரிந்து சக மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல் போவதும் அதே நேரம் அது நமக்கு நடக்க வில்லையே என்று நினைப்பதும் போன்றோருக்கு இதுவெல்லாம் காமடிதான். இன்று மற்றவர்களுக்கு நடக்கும் அதே தான் நாளை நமக்கும் என்று யோசிக்க வேண்டும். அநீதிகளுக்கு எதிராய் நாங்கள் முடிந்த அளவு ரவுத்திரம் பழகுகிறோம். பாரதி சொன்னது போல் புதுமை பெண்ணாக தீமைகளுக்கு எதிராய் ரவுத்திரம் பழகுகிறோம்.

எங்களுக்கு ஒன்றும் நேரம் போகாமல் சினமா, மற்றும் நடிகைகளை பற்றி கிசுகிசுப்பு எழுதி, பாலன வற்றை எழுதி வக்கிர உணர்வுகளை தூண்டி விடுவது, சும்மா வீண்கதை பேசி கூடி கும்மி அடிப்பது, கருத்துக்கள் என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் மாறி புகழ்ந்து கருத்து சொல்லி மகிழ்வது, சாக்கடை அரசியல் வாதிகளை நம்பி வர்கள் பின்னால் போஸ்டர் ஓட்டுவது, கொடி பிடிப்பது, அநியாங்களை, அக்கிரமங்களை கண்டு வேடிக்கைபார்ப்பது, செல்வந்தர்களுக்கு துதிபாடுவது, ஏழைகளை வஞ்சிப்பது, வெறுப்பது இவைகள் அனைத்திற்கும் நாங்கள் எதிரானவர்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு விலையாக் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடு காண்பதை ஒவ்வொரு மானம் உள்ள தமிழனும் ஆதரிக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தை நசுக்க இந்தியா உதவுவதற்கு முன் வரை எனக்கு இந்த கருத்து இல்லை. என்று ஈழத்தில் எம் குல மக்களின் இனைத்தை அழிக்க இந்தியா உதவி செய்ததோ அன்றில் இருந்து ஒரு உறுதி மொழி எடுத்துள்ளேன். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிப்பது என்று இதை என் தாய் தடுத்தாலும் விடமாட்டேன்.

இந்த கருத்தை சொல்ல வாய்ப்பு கொடுத்த அன்னோனி அவர்களுக்கு நன்றி. நட்புடன்: மலர்விழி.

தமிழ் மாறன் said...
This comment has been removed by the author.
தமிழ் மாறன் said...

//காவரி நதிநீருக்கும், முல்லை பெரியார் அணைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும், சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்கும், காஷ்மீருக்கும், போபால் விசவாய்வு கசிவுக்கும் பதில் சொல்லாத உச்ச நீதி மன்றமும், மத்திய அரசும் //

கண்டிப்பாக பதில் சொல்ல மாட்டார்கள்! இந்த பிரச்சனை எல்லாம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போது தானே இவர்கள் ஆட்சி கட்டில் அமர்ந்திருக்க முடியும். காலம் ஒருநாள் திரும்பும் மக்கள் எழுச்சி கொள்வார்கள் அப்போது புரியும் இவர்களுக்கு.

தமிழ் மாறன் said...

//இந்தக் கட்டுரையில் தனித்தமிழ்நாடு கேட்கவேயில்லையே...ஒருவேளை வேற சைட்டுக்கு நான் வந்திட்டேனா...//

ஏன் நண்பரே தனி தமிழ் நாடு கேட்பது என்ன தவறா? ஏன் கேட்க்க கூடாது என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கா? வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கே. வரலாற்றில் துரோகத்திற்கும், கீழறுப்பு வேலைக்கும், நயவஞ்சகத்துக்கும், ஒரு விலை இருக்கிறது. அதன் வெளிப்பாடே தனிதமிழ் நாடு கோரிக்கை. அதை ஆதரித்து சிந்திக்கவும் போன்ற நல்ல தமிழ் இணையம் எழுதுவது உங்களுக்கு பொறுக்க வில்லையா நண்பா! அதையும் கெடுக்க கருத்து போடுறியே! நீ வாழ்க! உன் குலம் வாழ்க! உன் போலி தேசபக்தி ஒழிக! நீ தமிழனாய் மாற என் வாழ்த்துக்கள்.

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

தயவு செய்து பொறுமையுடன் காணொளியை முழுமையாக கேளுங்கள்.

எல்லா விசயங்களுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்க‌ள் இருப்ப‌த‌னால் தான் உலகில் நாம் ப‌ல‌ முன்னேற்ற‌ங்க‌ளை பெற்றுக்கொள்ள‌ முடிகிற‌து

இஸ்லாம் ம‌ட்டும் மாறாம‌ல் இருப்ப‌தும், மாறவும் கூடாது. ஏன்? மாற்றுவதற்கு அவசியம் எங்கே?

ஆஸ்திக‌ர்க‌ளே, நாத்திக‌ர்க‌ளே, ப‌குத்தறிவாள‌ர்க‌ளே சிந்தியுங்க‌ள்.

முல்லை பெரியார் அணை விவகாரம் மற்றும் அதை போன்ற விவகாரங்கள் உருவாக விஷ வித்து என்ன?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

***** மாறாத‌ இஸ்லாமும்! மாறும் உல‌க‌மும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க‌ !!!! – ******

.
.

UNMAIKAL said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.
தினமலர் தீக்குளித்து தற்கொலை


.

rishvan said...

அருமையான பதிவு! .. thanith tamilnaadu vendaam.. thamizhargalai adutha maanilangal avamathikkaamaal irunthaal pothum www.rishvan.com

மலர்விழி said...

தினமலரை எத்தனை முறைதான் செருப்பால் அடிப்பது! அது திருந்தாத ஜென்மம்.

Anonymous said...

RSS want to make india hindu rastiram..... We have to support them////// Ram.

RMY பாட்சா said...

சிந்திக்கவேண்டிய தருணம் இது,
மதம் சாதியை ஒதுக்கி வைத்துவிடு,திராவிடண் என்ற மாயையை தூக்கிஎறிந்துவிட்டு,நாம்தமிழனாய் சிந்திக்கவேண்டிய தருணம்.
தமிழன் அழித்தது எல்லாம் தோல்வியால் அல்ல,துரோகதால்தான்.
சிந்திதமிழா......சிந்தி.சிந்திதுஒன்றுபடு இதுதான் தருணம்.நாளை வெடியல் நமதே வாழ்கதமிழ்.

Anonymous said...

Tamil people we are all brothers we have to hand together and fight against the sri Lanka government .... By/ raja.

Anonymous said...

Parpaniyam RSS both are same.