Dec 29, 2011

தமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி!

’அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது’’ என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான இந்திரன் படத்துக்கு இவர் பெற்ற சம்பளம் மட்டும் நூறு கோடி என்று பேசப்பட்டது. அது மட்டும் இல்லாம் இவர் நிறைய படங்களுக்கு சம்பளம் போக சில ஏரியாக்களில் வெளியிடும் உரிமையையும் பெற்றுக்கொள்வார்.

சரி உங்கள் அறிவை கொஞ்சம் தீட்டுங்களேன்! இந்த பணத்துக்கு எல்லாம் இவர் முறைப்படி வருமான வரி செலுத்தினார் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக இருக்காது. அதனாலேயே கொட்டிக்கிடக்கும் பணமும், சொத்துக்களும் அதை பாதுகாத்து கொள்ள, கணக்கு சொல்ல வழக்கம் போல நமது பணக்காரர்கள் பின்பற்றும் அதே டிரஸ்டி, அன்னதானம், அரசியல் பிரவச பூச்சாண்டி இதுவெல்லாம்.

இதே ரஜினிகாந்த் முல்லை பெரியாருக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை, காவேரி நதி நீர் விசயத்தில் பாசாங்கு செய்து நடித்தார், ஈழமக்கள் படுகொலையில் மவுனம், தமிழக மீனவர்கள் படுகொலையில் மவுனமோ மவுனம், கூடங்குளம் அனுமிநிலயம் விசயத்தில் நீண்ட மவுனம். இப்படிப்பட்ட இவர் ஏன்? அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

அன்னா ஹசாரே கேட்க்கும் லோக்பால் மசோதாவில்
தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்க்கவில்லை. இதனால் ஹாசரே கொண்டுவரும் லோக்பாலில் ரஜினியும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, போன்றவர்கள் தப்பித்து கொள்ளலாம் என்கிற சுயநலம்தான்.

இப்படிப்பட்டவர்தான் தமிழகத்தின் விடிவெள்ளி, நிறைய பேருக்கு கடவுள், சில பேருக்கு கடவுளை விட மேலானவர் என்றும் அழைக்கப்படுகிறார்.   இப்படி இவரை அழைக்கும் அறிவை அடகு வைத்த  சினிமா பைத்தியங்கள்  தங்கள் தாய், தந்தை, உறவினர்கள் இவர்களில் பலபேர் நோய்வாய் பட்டவர்களாக இருப்பார்கள் அல்லது பரம ஏழையாக ஒருவேளை சாப்பாடுக்கு வழியில்லாமல் இருப்பார்கள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் ரஜினி படம் வெளியானதும் கட் அவூட்க்கு மாலை, பால் அபிசேகம், முதல் நாள் படத்தை பார்க்க பலநூறு ரூபாய்கள் செலவு என்று அமர்களம் செய்வார்கள். அதுமட்டும் இல்லை அந்த படத்தை நூறு நாள் ஓடவைக்க இவர்களே தினம்தினம் அந்த படத்தை பார்த்து செஞ்சுரி அடிப்பார்கள்.  ரஜினியை கடவுள் என்று சொல்பவர்கள் அப்பாவிகள், படிப்பறிவு இல்லாத மக்கள் என்று நீங்கள் எண்ணிவிட கூடாது இதை சொல்பவர்களில் நிறைய படித்த முட்டாள்களும் உண்டு.


அதில் ஒரு முட்டாள்தான்  ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர் விஜய் TV சூப்பர் சிங்கர் 3  நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ரஜினி சுற்றில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ரஜினி உங்களுக்கு யார் என்று? அதற்க்கு  ஸ்ரீனிவாஸ்  "அவர் ஒரு கடவுள்" என்று பதில் அளித்தார். ரஜினி உடல்நலம் சரியில்லாத போது தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள், மொட்டை அடித்தவர்கள், அங்கப் பிரதட்சணம் செய்தவர்கள் என்று இந்த பட்டியல் கிழக்கு கடல்கரை சாலைபோல் நீண்டு கொண்டே போகிறது. 

இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலையும் தமிழ் ரசிகர்கள் புத்தியில் ஆணிதான் அடிக்கவேண்டும். ஓராயிரம் பெரியார்கள் வேண்டும் பகுத்தறிவையும், தன்மானத்தையும் இவர்களுக்கு கற்றுக்கொடுக்க. தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு  அது மானமும், அறிவும், விவேகமும் நிறைந்தது. உலகில் நாகரிகம் தோன்றும் காலத்தில் நாகரிகமாக வாழ்ந்த ஒரு மூத்த இனம். தமிழர்கள் தங்களது வரலாற்று பெருமைகளை உணரவேண்டும். தங்களை மீண்டும் ஒரு மீள் பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே எனது கனிவான வேண்டுகோள்.
*மலர்விழி*  

14 comments:

mundagakkannan said...

vanakkam thamizhargalai pagaththarivodu vaazha purindhdhukolla ippadippatta padhivugalai thodarndhdhu ezhudhavendum vaazhththukkal nandri

பொன் மாலை பொழுது said...

செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டோம். நாங்கள் "தன்மான தமிழர்கள்'

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் ...தமிழனின் தலைகுனிவு உடல் மண்ணுக்கு உயிர் எங்களின் கடவுள் ரஜினிக்கு அடி செருப்பால கழுதைக்கு தெரியுமா கர்ப்பூரவாசனை .........தொடரும்

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் ...தமிழனின் தலைகுனிவு உடல் மண்ணுக்கு உயிர் எங்களின் கடவுள் ரஜினிக்கு அடி செருப்பால கழுதைக்கு தெரியுமா கர்ப்பூரவாசனை ரஜினியை கடவுள் யன்று சொல்லும் முட்டாபயல்களுக்கு உங்களின் தாய் தந்தையர்களின் ஒரு மயிருக்கு௬ட சமமானவன் கிடையாது இந்த கழிசடை ரஜினி மற்றும் நடிகர்கள் .........தொடரும்

Anonymous said...

வணக்கம் தோழி நல்லபதிவு. ....அதுதானே பார்த்தேன்!!! என்ன திடீர் என்று ரஜினிக்கு அன்னா ஹசாரே மேல பாசம் வந்து பொங்கி வழியுதே என்று.

...மாலதி...

தமிழ் மாறன் said...

முல்லை பெரியார், காவேரி நதி நீர், ஈழமக்கள் படுகொலை, தமிழக மீனவர்கள் படுகொலை எல்லாத்தையும் வேடிக்கைபார்த்த பொய் கடவுள் ரஜினிகாந்த் இப்போது மவுனம் கலைத்ததற்கு காரணம் புரிகிறது. எல்லாம் தனக்கு தனக்கு எனும்போது இதயம் படக்கு .... படக்கு என்று அடிக்குது என்கிற நமது கிராமத்து பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்ட ஒரு பதிவு. வாழ்த்துக்கள் மலர்விழி. உங்கள பணிகள் தொடரட்டும்.

நன்றி! முருகன்.

தமிழ் மாறன் said...

உங்கள் அறிவில் ஆணியடிக்க என்று நல்லா சொன்னீங்கள்.... தமிழ் சொந்தங்களே சினிமாவை பாருங்கள் அத்தோடு முடித்து கொள்ளுங்கள். திரையில் நடப்பது எல்லாம் உண்மை என்று நம்பி கூத்தாடிகளை மீண்டும் மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற சிந்தனையை ஒழித்து விடுங்கள்.

தமிழ் இனம் புத்திஜீவிகளும், படித்த பண்புள்ள மக்களும் நிறைந்த ஒரு இனம். உங்களுக்கு தலைமை ஏற்க இந்த கூத்தாடிகள்தான் கிடைத்தார்களா? புரிந்து கொண்டு திருந்துங்கள் மக்களே.

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் .. வாழ்த்துக்கள் மலர்விழி. உங்கள பணிகள் தொடரட்டும்.
,,,.ரஜினி ரசிகனாகிய மூடர்களே ..உன் தாய் தந்தைக்கு ஒரு வாய் உணவு அளிக்காத மடையர்கள் ரஜினிக்காக அன்னதானம் வழங்குகின்றாய் உன் குழந்தைக்கு ஒரு சொட்டு பால் வாங்கிக்கொடுக்காத நீ ரஜினி கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் பன்னுகின்றாய் உனக்காக ஒரு குடும்பம் இருக்கும் போது ரஜினிக்காக நீ தற்கொலை முயற்சி பன்னுகின்றாய் உனது பணத்தை வினாக்கினாய் காலத்தை விரையமக்கினாய் இன்னும் ரஜினிதான் எங்கள் கடவுள் என்கின்றாய் உனக்காக ரஜினி என்ன செய்தான் என்று சிந்தித்துப்பார் உண்மை உனக்கு புரியும் உன்னை மடையனக்கினான் உன்னைவைத்து பல கோடிகளுக்கு அதிபதியனான் இழிச்சவாயன் நீ ஒரு வாய் சோற்றுக்கு அல்லல் படுகின்றாய் உன் இனம் உன்குடும்பம் உன் உறவுகள் இவைகளை நினைத்துப்பார் உண்மையான ஏ௧ இறைவனின் அன்பு புரியும் கண்ட கழுதைகளை தலைவனாக நினைக்காமல் உனது தாய் தந்தையரை தலைவர்களாக மாற்றிக்கொள் உனது கஷ்ட நஷ்டத்தில் உனது மனைவியுடன் பகிர்ந்துகொள் உனது எதிர் காலமாக உனது குழந்தைகளை நினைத்துக்கொள் இந்த உலகில் உன் வாழ்நாளில் உன்னைசார்ந்தவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் நீ என்ன செய்தாய் என்பதை உணர்ந்து உனது வாழ்க்கையை அமைத்துக்கொள் தமிழினம் தலை நிமிரும் நீ நாளை தமிழகத்தையாழ்வாய் உன் சந்ததிகள் உன்னை வாழ்த்தும் [ குறிப்பாக==ஒவ்வொரு மனிதனும் மரணத்தை அடைந்தே ஆகணும் நாம் உயிருடன் வாழும்காலத்தில் என்ன நன்மையான காரியங்கள் பன்னியிருக்கின்றோம் என்று சிந்திப்போமையானால் இப்படிபட்ட கழிசடைகளுக்கு பின்னால்போகமாட்டோம் அப்படிப்பட்ட நன்மக்களாக ஏ௧ இறைவன் நாம் அனைவர்களையும் ஆக்குவானாக என்று பிராத்திக்கின்றேன் by ..புனிதப்போராளி

கறுத்தான் said...

ரஜினி மட்டும் அல்ல iswarya ராய்இல் இருந்து சச்சின் வரை அனைவரும் ஆளும் இந்திய பார்பனிய ஊடகங்களால் உருவாக்க பட்ட பிம்பங்கள் இவர்களையும் இவர்களை சர்ந்தவர்களையும் தூக்கிபிடிகும் வேலையை (சமிபத்தில் தனுஷின் கொலைவெறி பாடலுக்கு பார்பனஇந்து பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியட்டது வரை )தான் செய்கின்றன ஆகவே நாம் தான் நமக்கான ஊடகங்களையும் கலைங்கர்களையும் உறுவாக்க வேண்டும்

Hotlinksin.com said...

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

suvanappiriyan said...

கலக்கலான பதிவு. சினிமா மோகம் என்று அகலுமோ அன்று தான் தமிழன் தலை நிமிர முடியும்.

RMY பாட்சா said...

அவரை பொறுத்தவரையில் அவர்இனத்துக்கும் மொழிக்கும் விசுவாசமாகதான் இருக்கிறார்.நாம்தான் நீருக்கும் கானல்நீர்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறோம்.
புதுவருடஉறுதிமொழி எடுப்போம்.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.இனியாவது நாம் தமிழன்னாக இருப்போம்.வாழ்கதமிழ்

Anonymous said...

முண்டங்களின் பூமியிலே
முட்டாளின் ராஜாங்கம்

மூத்தவர்கள் சொல்லிவைத்த
சாத்திரங்கள் பொய்யடா

ஒவ்வொரு கடவுளுக்கும்
பல நூறு கதைகள்

ரஜினிக்கும் இன்று இருநூறு
கதைகள்

இவறும் பின்னாளில் ஒரு
அவதாரம் ஆகலாம்.

ஆயிரம் ஆண்டுகளாயினும் இந்தியன்
திருந்த வாய்ப்புகளே இல்லை

பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும்
இந்திய புத்தி திருந்தவே இல்லையே

நாம் பார்த்து போதைக்கு
அடிமையான ரஜினி

நடிகையின் போதையில்
போதையில் மயங்கி விழுந்த ரஜினி

இன்று கடவுளாகிப் போனது
இந்திய கடவுள் நம்பிக்கை காலாவதி
ஆகிப்போனது

THAMEEM