Jan 17, 2012

பசுமை வீடுகளா இல்லை பற்றி எறியும் வயிறுகளா!

JAN 18:  சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில்,  50 குடிசைகள் எரிந்து நாசமாகின.

சிந்திக்கவும்: இந்தியா சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள் முடிந்து விட்டது. இருந்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வு மட்டும் இன்னும் உயரவில்லை. நமது பொருளாதார சூரப்புலிகள் இந்தியாவை ஹைடெக் சிட்டியாக மாற்ற போவதாக கொக்கரிகின்றனர்.

கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.


நாடு முழுவதும் குடிசைகள், குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் சாலை ஓரங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும்
மலம், ஜாலம் கழிக்கின்றனர். மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை.

மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சேரிகளில் வாழும் மக்கள் இப்படியாக மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். ஓவ்வொரு ஊர்களிலும்,  நகரகளிலும்  பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையிலும், குடிசைகளிலும் வாழ்கின்றனர். போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

இதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் கூடங்குளத்திற்கு பசுமை வீடுகளாம்! சத்திஷ்கர் மலையில் வாழும் மக்களுக்கு உயர்தர வீடுகளாம்! அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கூடங்க
ளாம்! ஏன் இந்த தீடீர் அக்கறை? கூடங்குளத்தில் அணு மின்நிலையத்தை எப்படியேனும் திறக்க வேண்டும். அது போல் சத்தீஸ்கர் மலைகளில் உள்ள கனிம வளங்களை தோண்டி எடுத்து  வெளிநாட்டு வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்க வேண்டும்.

இப்போது விளங்குகிறதா
எவ்வளவு கேவலமானவர்கள் நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசு இயந்திரங்கள்  என்று. பெரும்பான்மையான மக்கள் குடிசைகளில் வசிக்க, இன்னும் பலர் ரோட்டோரம் வசிக்க இவர்கள் என்னவோ கூடங்குளத்தை பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று தங்க நகரமாக மாற்ற போகிறார்களாம்.

உலக வங்கியில்  அதிகம் கடன் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது. எடுப்பதோ என்னவோ பிச்சை அந்த பிச்சையை சரிசமமாக எல்லா குடிமக்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கூட இவர்கள் எல்லாம் குடிசைகளில் வாழும் நிலை வந்திருக்காது. சிந்திப்பார்களா.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

5 comments:

Anonymous said...

Very good article .... Thank u. By:RAJA

Anonymous said...

India arasiyal vaathigal. Rombavum cheep...

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் குடிசைகளில் வாழும் ஏழைமக்களின் மீதும் அனைத்து நன்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக .... மனிதனின் ரத்த நானங்களில் அனைத்திலும் சைத்தான் குடிபுகுந்துள்ளான் இதை உணர்ந்தவன் சைத்தானை வெற்றி கொள்கின்றான் நல்லவனாக இருக்க முயலுகின்றான் நமது நாட்டை ஆழ்பவர்கள் சிந்திக்கும் திறனை முதலில் இழந்து விடுகின்றனர் ஒரு நல்ல ஆட்சியாளன் பின்தங்கியமக்களை முன்னுக்கு கொடுவர நினைத்தானால் இந்த நாட்டில் குடிசைகள் மாறும் அனைத்து மக்களும் சமமானவர்கள் யன்று உணர்ந்தான் என்றால் தீண்டாமை இல்லாமல் போகும் இலவசங்களை தவிர்த்து நல்லதிட்டங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் நாடு வளம்பெரும் அனைத்து மக்களுக்கும் தொழில்கல்வியை இலவசமாக மிடியாவழியாக கற்றுக்கொடுத்தால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும் அன்னிய நிறுவனங்களை குறைந்த அளவு அனுமதித்து உள்நாட்டு மக்களின் தயாரிப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படனும் இப்படி எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் நாட்டை ஆழ்வதற்கு வந்தால்தான் இந்த நாட்டில் ஏழை மக்கள் நலமுடன் வாழமுடியும் குடிசையில் பிறந்தவன் கஷ்டத்தை உணர்ந்தவன் பசியை அறிந்தவன் தன் கண்முன் தன் குடும்பம் பட்டினியில் இருப்பதை கண்டவன் இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கணும் அப்பதான் ஏழைகளின் கண்ணீரை அவன் அறிவான் மக்களுக்காக இந்த நாட்டை வழிநடத்துவான் இப்ப இருக்கிரவர்களினால் ஒருபோதும் இந்த நாட்டை புல்லரசாக௬ட மாற்ற முடியாது அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள் சுயநலனுக்காக வாழக்குடியவர்கள் பல அரசியல் கட்சியில் இருக்கும் ஏழை மக்கள் உணரனும் நாம் காணும்[அரசியல்வாதிகள் நம்மை நல்லநிலைக்கு கொண்டுவருவார்கள்]என்ற கனவை மாற்றியமைக்கணும்...,,,,,,திட்டமிடுவோம் .... BY ....ஏழைகளின் சகோதரன் புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

தோழர் புனித போராளியே நலமா, தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள். கருத்து என்பது சும்மா பெயருக்கு சொல்லாமல் அதில் நிறைய செய்திகளை சொல்லி எல்லோரையும் ஊக்கப்படுத்துறீங்கள். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி.

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.