Jan 28, 2012

அணு மின்நிலையத்தின் சாவி முதல்வர் ஜெ கையிலா?

தூத்துக்குடி: ""முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்''என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர்.

இதில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி அணுஉலை ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்டோர் பேசினார்.

சிந்திக்கவும்: என்னவோ கூடங்குளம் அணு மின்நிலையத்தின் சாவி ஜெயா கையில் இருப்பதுபோல் பேசுகிறார்கள். மத்திய அரசு ஏவி விடும் அடியாட்கள் இவர்கள். ரப்பர் ஸ்டாம்ப் அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கின்றனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தால் பாதிக்கப்பட போவது அந்த பகுதியை சுற்றி வாழும் நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த மக்களே. வேலை வெட்டி இல்லாத இந்த ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் குஷ்புக்கு கோவில் கட்டுவதை பற்றி சர்ச்சை செய்யட்டும். அதை விட்டுவிட்டு உலகமே திரும்பி பார்க்கும் ஒரு அணு எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்த வேண்டாம்.

கூடங்குளம் அணுவுலை வேண்டும் என்று சொல்பவர்கள் முதலில் இந்த  வீடியோவை  பார்க்கட்டும்.
 
12 comments:

மலர்விழி said...

உலகம் முழுவதும் அனுவுலைகளை மூட வேண்டும் என்ற ஒரு கருத்தாக்கம் உண்டாகி வருகின்றது. பிரான்ஸ் இனிமேல் தங்கள் நாட்டில் அனுவுலைகள் கட்ட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்பவர்கள் நிச்சயமாக அழிவு சிந்தனை படைத்தவர்களே. மக்கள் விரோதிகளே.

தமிழ் மாறன் said...

உலக பணக்கார நாடுகளின் குப்பை தொட்டி இனி இந்தியாதான். கூடங்குளம் அணு மின் நிலையத்தோடு நிற்காது உலக கார்பரேட் முதலாளிகள் எல்லாம் காத்து கொண்ட்டிருக்கிரார்கள் இந்தியாவில் அணு உலைகளை திறக்க.

இருதயம் said...

Please Visit my latest Post

"கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு" - http://naanoruindian.blogspot.com/2012/01/blog-post_28.html .

Thank You.

PUTHIYATHENRAL said...

தோழரே நீங்கள் திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாத கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள்... நீங்கள் சொல்வது போல் ஜப்பானில் அணு உலை கழிவுகளை கடலில் கரைக்கவில்லை. மேலும் சகோதரர் முத்து கிருஷ்ணன் பேசி இருக்கும் வீடியோவுக்கு பதில் கொடுக்காமால் அணு என்றால் என்ன வென்று அறிந்து கொள்ளாமலேயே அதை ஆதரிக்கும் ஒரு ஆள் நீங்களாகத்தான் இருக்க முடியும். அணு கழிவுகளின் வீரியம் போக குறைந்தது இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகும் அதன் கதிர்வீச்சு போக என்பதே விஞ்சான உண்மை/. உங்களை இந்தியன் என்கிற தேசிய மாயை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.முதலில் மனிதன் என்கிற நிலையில் இருந்து பேசுங்கள் அப்புறம்தான் நாடு மதம் மொழி எல்லாம்.

Anonymous said...

தோழர் முத்து கிருஷ்ணன் பேசியிருப்பதில் இருந்து பல உண்மைகளை தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே... ராஜா.

தமிழ் மாறன் said...

நம்ம மக்களுக்கு என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்...

Sculpture Collector said...

கூடங்குளம் அல்லது கல்ப்பாக்கம் ...எது அதிக ஆபத்துக்கான வாய்ப்பு? பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த மாநகருக்கு அருகில் அமைந்த கல்ப்பாக்கம்....இந்த போர்ரளிகள்/பொறுக்கிகள் முதலில் போராட வேண்டிய இடம் கல்ப்பாக்கம் அல்லவா?

தமிழ் மாறன் said...

//முதலில் போராட வேண்டிய இடம் கல்ப்பாக்கம் அல்லவா?//

கல்பாக்கம் அணு உலையை எதிர்ப்பு போராட்ட குழுக்கள் இருகின்றன அவைகள் இன்றும் அதன் பாதிப்புக்களை எடுத்து பேசியும் எழுதியும் வருகின்றன. இதற்கும் அதற்க்கு என்ன வித்யாசம் என்றால் கல்பாக்கம் அமையும் போது மக்களிடம் அணு உலைகள் பற்றி போதிய விளிபுணர்வுகள் இருக்க வில்லை என்பது ஒரு காரணம் அடுத்து கல்பாக்கம் அணு மின்நிலைய போராட்டத்தில் மக்கள் போதிய அளவு இணைந்து நடத்த வில்லை. கூடங்குளம் பகுதி மக்கள் ஜப்பானை பார்த்ததும் அங்கு அணு உலையால் ஏற்ப்பட்ட ஆபத்தை உணர்ந்ததும் இந்த போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து போராடுகிறார்கள். இது கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டம். யாரும் அணு உலைகளை ஆதரிக்க முடியாது அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமை பல நூறு ஆயிரம் வருடங்களுக்கு தொடரும்.

ஆனந்த் said...

1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை. 4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான் ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002 கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். ( நன்றி: பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.)

HOTLINKSIN.COM திரட்டி said...

வளர்ந்த நாடுகளை விட நாம் மிகவும் பின் தங்கி உள்ளோம். அதனால்தான் அவர்கள் பயன்படுத்திப் பார்த்துவிட்டு ‘அய்யய்யோ வேண்டாம்பா...’ என்று அலறி ஓடும் போது நாம் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.