Feb 17, 2012

என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்!

உயிர்வதை பாவமென்ற புத்தனின் மண்ணில்
புதைந்து மடிந்தன பல்லாயிரம் உயிர்கள்..
ஈசலும் உயிர்தானே ...? ஈழவன் உயிரில்லையா ...?
பிஞ்சும் அஞ்சும் பத்தும் ...அம்பதும் அறுவதும் ..ஆணும் பெண்ணும் பேதம் தெரியவில்லை பிணக்குவியலில்
.
 
இனம் காக்க இறந்துபட்டீரே எம்உறவுகளே
மிஞ்சினோம் நாங்கள் உங்களின் தியாகத்தால் .
மாவீரர்கள் அஞ்சவில்லை ...சாவைக்கழுத்தில் கட்டிக்கொண்டும் சிரித்தனர் மக்களே ...வாழ்ந்த பொழுதிலெல்லாம் மானத்திற்கும் மரணத்திற்கும்
அஞ்சியஞ்சிச்செத்தீரே... உங்கள் உயிர்பட்டபாட்டை இப்போதுதான் அறிந்ததாய் அறிவிக்கின்றன ஊடகங்கள்.


 

கந்தக நெருப்பில் கருகிய எம்மக்களே...
கண்ணீர் சொரிகிறோம் உங்கள் காயங்கள் ஆறுதற்கு.
இனியொரு துயரம் எவர்க்கும் வேண்டாம்...உலகோரே வேண்டுகிறோம்.
உங்களின் ஒவ்வொரு துளிக்கண்ணீரும் கரைக்கக்க்கூடும் அகந்தை மனங்களின் கறைகளை நீங்கள் ஏற்றும் தீபத்தினொளியில் தெரியட்டும் யாவர்க்கும் எங்கள் இனத்தின் துயரம், விடியல் தேடிக்காத்திருக்கிறோம்...சுதந்திரம் வேண்டி போராடுகிறோம்.

ரௌத்திரம் பழகு 
...யாழினி...

9 comments:

Anonymous said...

கவலைப்படாதீங்கள் யாழினி நிச்சயம் ஈழம் கட்டி அமைக்கப்படும்.

நட்புடன் - மதிவதனி.

Seeni said...

kavalai nanntha-
kavithai!

Anonymous said...

அடிமைகளாய் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழ வழி சமைத்தார் எம் தலைவரும் அவர் வழி வந்த போராளிப் பிள்ளைகளும். அவர் தம் இலட்சியம் என்றும் தோற்காது.தோற்கவும் விட மாட்டோம். மறுபடி எழுவோம்.

Esther sabi said...

மீண்டும் எழுவோம் களை அறுப்போம்.....

PUTHIYATHENRAL said...

வணக்கம் எஸ்தர்.. நம்பிக்கையோடு காத்திருப்போம். மீண்டும் நமது தமிழ் ஈழ போராட்டங்கள் கட்டி அமைக்கப்படும். சிங்கள தேசம் வென்றான் தமிழன் என்கிற சொற்கள் வரலாற்றில் பதியப்படும் கூடிய விரைவில்.

PUTHIYATHENRAL said...

வாங்க தோழர் சீனி... நிச்சயமாக வலிகள் நிறைந்த வரிகள்தான்.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் வன்முறையால் பாதிக்கப்படும் அப்பாவிமக்களின் மீது உண்டாவட்டுமாக ...போர்க்களத்தில் ௬ட., பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மதபோதகர்கள்,,இவர்களை கொல்லுவது மானிதாவிமானம் அற்றவர்களின் செயல் என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்லுகின்றது ஆனால் அப்பாவிமக்களை பெண்களை குழந்தைகளை முதியவர்களை சர்வசாதாரணமாக கொன்று குவிக்கின்றார்கள் இவர்கள் மனிதவம்சத்தை சார்ந்தவர்கள்தானா அரசுபயங்கிரவாதிகள் அப்பாவிகளைத்தான் கொல்கின்றனர்..,,குழந்தைகளின் சடலத்தைக்கண்டும் கல்நெஞ்சக்காரர்களாக அரசு பயங்கிரவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர் தீவிரவாதம் தானாக வருவதில்லை வேறுவழி இல்லாமல் அப்பாவிகளினால் அறியாமல் கையில் எடுக்கும் ஆயுதம்தான் தீவிரவாதம் இதனால் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் இன்னல்கள்தான் மிஞ்சுகின்றது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதினால் மட்டுமே இதை முடிவுக்கு கொண்டுவரமுடியும்..,,, அரசுபயங்கிரவாதிகள் இப்படியிருக்க மறுபுரம் கலவரத்தை உண்டுபண்ணி அரசியல்வாதிகளும் உயர்சாதி ஓநாய்களும் அப்பாவிமக்களின் ரத்தம் குடிக்கின்றது...,, இந்திய நாட்டையாழும் மனிதாவிமானம் அற்ற சில கருங்காலிகளினால் குஜராத்திலும் இலங்கையிலும் அப்பாவிகளின் உயிர்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதற்க்கு கண்டிப்பாக காலம் பதில் சொல்லும் மோடிக்கும் ராஜபக்ஜியிக்கு மரணஅடி விழும்போது இந்த நாடு அதில் படிப்பினை பெரும் பொறுத்திருந்து பார்ப்போம் ....இப்படிக்கு..புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

//தீவிரவாதம் தானாக வருவதில்லை வேறுவழி இல்லாமல் அப்பாவிகளினால் அறியாமல் கையில் எடுக்கும் ஆயுதம்தான் தீவிரவாதம்//

தோழரே நலமா... சரியாக சொன்னீர்கள்..... உண்மையான வார்த்தை. மலர்விழியையும், யாழினியையும் இதுபோல் கருத்து பகுதியில் இருந்து எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்களே.. நீங்களும் எழுத வாருங்களேன் தோழரே. நேரம் இருந்தால் எழுதுங்கள் உங்கள் பதிவுகளை எழுத வேண்டிய முகவரி sinthikkavum@yahoo.com, puthiyathenral@gmail.com.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்து கருத்துக்கள் மூலம் எங்களுக்கு உற்ச்சாகம் கொடுத்து வருகிறீர்கள் நன்றி.

Anonymous said...

அரசாங்கம் செய்த அநியாயத்தை அரசு பயங்கரவாதம் என்கிறிர்கள் அனால் புலிகள் செய்த அநியாயத்தை ஏன் மறைகிறிர்கள் புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து சில மணி நேரங்களில் வெளிஎற்றினர்களே அதயும் பதிவில் இடுங்கள் மற்றது எத்தனையோ அப்பாவிகளை கொன்று குவித்தார்கள் முஸ்லிம்கள் மற்றும் அல்ல தமிழ் அப்பாவிகளையும் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் அது எல்லோருக்கும் பொருந்தும்
ரியாஸ் கத்தார்