Feb 23, 2012

நான் போலீஸ் இல்ல பயங்கரவாதி!

FEB 24: இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வங்கி கொள்ளையர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு பாராட்டு என்று செய்திகள். இது போலீஸ்காரர்களை பாராட்டும் விஷயம் இல்லை.     

இது போலீசாரின் கையாலாகாத தனத்தை, கோழைத்தனத்தை, பயங்கரவாதத்தையே காட்டுகிறது. வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அவர்களை சுட்டு கொல்லும் அளவுக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன?

எத்தனையோ வழிகள் இருக்கிறது அவர்களை மடக்கி பிடிக்க. மயக்க மருந்து கலந்த ஊசிகள் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தலாம்மனிதர்களை வேட்டையாடும் யானை, சிங்கம், புலி போன்றவற்றை யாரும் சுட்டு கொன்று விடுவது இல்லை. அதை பிடிக்க மயக்க மருந்து ஊசி கொண்ட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கிறார்கள். ஏனென்றால் அதை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கிறது.

மனித உயிர்கள் அவ்வளவு கேவலமாக போயிவிட்டது. வங்கிகளை கொள்ளையிடும் திருடர்களை சுட்டு உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே கோடிகணக்கில் மக்கள் சொத்துக்களை கொள்ளையிட்ட கனவான்களை எல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள். கள்ளச்சாரயமும், ரவுடிசமும் பண்ணும் உங்களின் கூட்டாளிகள் செய்த கொலைகள்தான் எத்தனை அதற்கெல்லாம் நீங்கள் துப்பாக்கி தூக்கியதுண்டா?  நாய்கள் மாதிரி நன்றியோடு அவர்களுக்கு வால் ஆட்டிநீர்களே.

நீங்கள் அடிக்காத மாமூல் கொள்ளையா?  அராஜகமா?  செய்யாத காவல் நிலைய கற்பழிப்புகளா ?  
பண்ணாத காவல் நிலைய கொலைகளா? இராமநாதபுரம் துப்பாக்கி சூட்டில் நீங்கள் கூலி படைகள் போல் வெறி கொண்டு பொதுமக்களை சுடும் படங்கள் பதிவாகி இருக்கிறதே. உங்களை போலீஸ் என்று சொல்ல முடியுமா? ஐரோப்பிய நாடுகளின் போலீஸ் என்றால் மக்களை பாதுகாக்க கூடியவர்கள். நீங்களோ மக்களின் உயிரை குடிக்கும் ஓநாய்கள்.

போலீஸ் என்கிற பெயரில் திருடர்களும், கொள்ளைகாரர்களும், பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், ஒளிந்திருக்கும் ஒரு நாடுதான் இந்தியா. நாம் தைரியமாக சொல்லலாம் ஒரு சிலரைத்தவிர பெரும்பான்மையானோர் மனசாட்சிகளே இல்லாத மிருகங்கள். கொள்ளையர்கள் தங்களை நோக்கி சுட்டதால், பொதுமக்களை பாதுகாக்கவும், தங்களை பாதுகாக்கவும் பதிலுக்கு சுட்டோம் என்று
இவர்கள கூறியுள்ளனர்.

பொதுமக்களை பாதுக்காக்க சுட்டது என்று சொல்வது எல்லாம் மாய்மாலம். இது போன்ற சம்பவங்களில் வீரதீரமாக செயல்பட்டோம் என்று காட்டி கொள்வதற்கும், பதவி உயர்வு கிடைக்கும் என்கிற நோக்கிலுமே இது செய்யப்பட்டது என்று சொல்லலாம். ரவுடிகளிடம் மாமூல் வாங்கிகொண்டு அவர்களை வளர்த்து விடும் இவர்கள்  அவர்களை என்கவுண்டர் செய்து பதவி உயர்வு அடைவது என்று ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கும் கயவர்கள். என்கவுண்டர் பண்ணினால் பதவி உயர்வு என்று இவர்களுக்கு ஒரு சலுகை இருக்கும் வரை இவர்கள் இதனையே செய்து குறுக்கு வழியில் முன்னேற துடிப்பார்கள்.
 
போலீசாரின் வழக்கமான என்கவுண்டர் முறையே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம் என்று சொல்லி இரண்டு போலீசாரை ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் படுக்க வைத்துவிடுவது. இதுவரை செய்யப்பட்ட எல்லா என்கவுண்டர்களுமே நீதிமன்றத்தில் போலி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்களை சுட்டு கொன்றதும் அதிலேயே அடங்கும். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளியே வரும். கொள்ளையர்கள் ஒன்றும் நவீன ஆயுதங்களோடு வந்திருக்கவில்லை. ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகளில் இருந்து இவர்கள் இதுபோன்ற கொள்ளைகளில் பொம்மை துப்பாக்கிகளையே பயன்படுத்தினர் என்று தெரியவருகிறது. இது ஒரு பகிரங்கமான போலீஸ் பயங்கரவாதம்.

21 comments:

தமிழ் மாறன் said...

சென்னை வேளச்சேரியில் நேதாஜி சாலையில் ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாறன் said...

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன், இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் இது சென்னை மாநகர காவல்துறையின் தரம் எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுன்றது. அவர்களை உயிருடன் பிடிக்க நினைத்திருந்தால் நிச்சயம் உயிரோடு பிடித்திருக்க முடியும்.

சம்பவம் நடந்து காலை 6 மணி வரைக்கும் பத்திரிகையாளர்களை அந்த பகுதிக்கு அனுமதிக்க படாதது காவல்துறை எதையோ மறைப்பதற்காக நடத்துகின்ற ஒரு நாடமாக தெரிகிறது என்று தெரிவித்தார்.

தமிழ் மாறன் said...

இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் நக்கீரன் இணையதளத்திற்கு கூறியதாவது,

கொள்ளையர்கள் 5 பேர் இருக்கிறார்கள். பெரிய போலீஸ் படை இருக்கிறது. ஒருத்தரைக் கூட உயிரோடு பிடிக்க முடியவில்லை என்று கூறுவதை நம்ப முடியாது.

Anonymous said...

police kaarargalukku sariyaana seruppadi. by: Raja

Seeni said...

uyir avvalavu kevalamaacha....

Unknown said...

வாருங்கள் தோழரே சீனி... உங்கள் கருத்துக்கு நன்றி. ஏழை, எளிய மக்களின் உயிர்தான் அவ்வளவு கேவலமா போச்சு..... பணக்காரன் திருடினா, கொள்ளையடித்தா இந்த துப்பாக்கி எல்லாம் சுடாது.

Anonymous said...

நல்ல சரியான பார்வை.... நிறைய பதிவர்கள் இந்த போலீஸ் பயங்கரவாதிகளை ஆதரித்து பதிவிட்டு இருக்கும் போது தைரியமாக சரியான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...

நட்புடன்------- மன்மதன்.

Anonymous said...

மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள். போலீஸாரின் நாடகம் இது. பலருக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி இந்த என்கவுண்டர். போலீஸ் பெரியார் அணையின் போது பட்டபாட்டினை மறந்து விட்டார்கள் போல. ஏமாளிகளை கொன்று போட்டிருக்கிறார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

Unknown said...

Ethu thittamitta kolai!

Anonymous said...

சவூதி அரேபியாவில் இதைவிட அதிகமாக கொடுமைகள் நடக்குதே.

Unknown said...

இதைவிட கொடுமைகள் பிற தேசங்களில் உள்ளதே....

Unknown said...

//Ethu thittamitta kolai!// ( இது திட்ட மிட்ட கொலை).

சரியாக சொன்னீர்கள் ஜபார்கான் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

//சவூதி அரேபியாவில் இதைவிட அதிகமாக கொடுமைகள் நடக்குதே.//

சவூதி அரேபியாவில் நடந்தால் இங்கும் நடக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்து நீங்கள என்ன சொல்ல வருகிறீர்கள்? இது சரி என்று சொல்கிறீர்களா? எங்கு நடந்தாலும் அநியாயம் நியாயமாகி விட முடியாதே.

Unknown said...

//இதைவிட கொடுமைகள் பிற தேசங்களில் உள்ளதே....//

சரியாகத்தான் சொன்னீர்கள் சபி வேறு நாடுகளிலும் நடக்கிறதுதான். இருந்தாலும் உலகிலே மோசமான காவல்துறையை கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு சீக்கிரம் முதலிடம் வந்து விடும் என்கிற அளவுக்கு இவர்களின் அத்து மீறல் இருக்கும். ஒவ்வொரு இந்தியனும் வாழ்க்கையில் ஒரு நாலாவது இவர்கள் விசயத்தில் அதிருப்தியும் கோபமும் கொள்ளாமல் இருந்திருக்க மாட்டான் என்றே சொல்லலாம். இவர்களை பற்றி ஒரு சர்வே நடத்தினால் தெரியும் இவர்களை ஆதரித்து இவர்கள் கும்பத்தில் உள்ளவர்களே கருத்து சொல்வார்களா என்பதே கேள்வி குறிதான்.

Unknown said...

உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்

kuppusamy said...

சில காலத்திற்கு முன்பு தென்மாவட்டத்தில் ஒரு போலீசை கொள்ளையர்கள் வெட்டுவதை அதிகாரிகளும் அமைச்சர் வழிக்காவல் வந்த போலீசும் வேடிக்கை பார்த்தார்களே தவிர அவருக்கு உடனே உதவிகள் செய்ய வில்லை உயிரை இழந்தார். அப்படிப்பட்ட போலீஸ்தானே. கேவலம்!

Unknown said...

வணக்கம் எஸ்தர் நலமா. உங்கள் விருத்துக்கு மிக்க நன்றி. ஊடகம் என்கிற ஆயுதம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க என்பதே எங்கள் நோக்கம். சிந்திக்கவும் ஆசிரியர் குழு சார்பாக உங்களுக்கு நன்றியை,தெரிவித்து கொள்கிறோம். சிறிய வயதில் கல்லூரியில் சாதனை பண்ணியதோடு மட்டுமல்லாமல் திரு நங்கைகள் குறித்து எழுதி வருவதும் ஒரு சிறப்பான விஷயம். இன்றைய இளஞசர்கள், யுவதிகள் சினிமா, பொழுது போக்கு என்று நேரங்களை செலவிடும் போது நீங்கள் எழுத்து பணிக்கு வந்திருப்பது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும். உங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க எங்கள் ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி: ஆசிரியர் புதிய தென்றல்.

Unknown said...

வணக்கம் ஐயா குப்புசாமி அவர்களே நலமா, சரியாக சொன்னீங்கள் தன்னோடு வேலை செய்யும் சக பெண் ஊழியர்களை செக்ஸ் டார்ச்சர் செய்வதும், கேவலமாக நடத்துவதும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்க்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாதவர்கள்தான் இந்த துறையில் வேலை செய்யும் பெரும்பான்மையினர். உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி ஐயா!

புனிதப்போராளி said...

ஏக இறைவன் நல்லருள் புரியட்டும்...தமிழ் நாட்டுப் போலிஸ் ரெம்ப நல்லவங்களாக இருக்கிறானுங்க ...அம்புகளை தட்டிவிட்டு அம்பைவிட்டவனை விட்டுருவானுங்க ..உசாராக இருக்கணும் பொதுமக்கள் .....தொடரும்

சிரிப்புசிங்காரம் said...

மனித உரிமை,மயிறு உரிமைங்கிற பேருல பயங்கரவாதிகளுக்கும்,தீவிரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்குற பொறுக்கிங்க இருக்குறவரைக்கும் அவனுங்கள சுட்டுத்தான் பிடிக்கணும்........................

சிரிப்புசிங்காரம் said...

மனித உரிமை,மயிறு உரிமைங்கிற பேருல பயங்கரவாதிகளுக்கும்,தீவிரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்குற பொறுக்கிங்க இருக்குறவரைக்கும் அவனுங்கள சுட்டுத்தான் பிடிக்கணும்........................