Feb 29, 2012

களவாணி அரசியல்வாதிகளும் அவதிப்படும் மக்களும்!

தினமலர் விஷப்பாம்பு : மலத்தை மலர் என்று சொல்லி விற்கும் ஒரு இழி பிறப்புத்தான் தினமலர் கூட்டம். இந்த விஷம் கக்கும் பாம்பு கூட்டம் சொல்வதெல்லாம் பொய், புரட்டுகள்தான். உளவுத்துறை என்பது மத்திய மாநில அரசுகளின் எடுபிடிகள் என்பது மக்கள் அறிந்த உண்மை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்க  சுய உதவிக்குழுக்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,  இதனாலேயே  தினம் தினம்  3000  பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக உளவுத்துறை எடுபிடிகள் சொன்னதாகவும், இதனால்  உதயகுமார் கும்பல் பீதியில் இருப்பதாகவும் எழுதி தன் அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது தினமலம்.

சகுனி கருணாநிதி:  அணுமின் நிலையமே கூடாது என நடக்கிற போராட்டத்தை, மாநில அரசு அனுமதிக்கிறதா? அவர்களை பின்னால் இருந்து தூண்டி விடுகிறதா? கூடங்குளம் அணு மின்நிலயம் அமைந்தால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமா? உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. உண்மை தெரிந்தவர்கள், மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக, ஊரு சொத்தை கொள்ளையடித்து குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதி கூடங்குளம் விசயத்தில் திருவாய் மலர்ந்துள்ளார். தமிழ், தமிழ் இனம், திராவிடம் என்று பேசுவது எல்லாம் ஓட்டு பிச்சை எடுக்கத்தான். தேர்தல் நேரத்தில் மட்டும் பிச்சைகாரன் மாதிரி ஊர், ஊராய் பிச்சை எடுக்க கிளம்பிவிடும் இந்த சகுனி.

இதற்கெல்லாம் நாட்டு நலனை பற்றி, மக்கள் நலனை பற்றி ஏதாவது கவலை இருக்கவா போகிறது.  சாக போகிற நேரத்திலும் நாற்காலியை படித்து கொண்டு அலையும் கேவலமான ஒரு பிறவிதானே இவர். ஆட்சி வேண்டும் என்று இந்த கோமாளி கொடுத்த டிவிகளின் எண்ணிக்கை  7 லட்சத்து 48 ஆயிரம். புதிதாக 7 லட்சத்து 48 ஆயிரம் வீடுகளில் டிவியை பயன்படுத்தினால் எப்படி மின்சார தட்டுபாடு ஏற்படாமல் போகும்.

போலி கம்னிஸ்ட்கள்: இவர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்தை வேண்டும் என்றும் மேற்கு வங்கத்திலும், மகாராஷ்டிராவிலும் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்றும் இரட்டை வேடம் போடும் மோசடிக்காரர்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தை கட்ட ஒப்பந்தம் போட்டவன் ரஷ்யாகாரன் என்பதாலா? மக்களை ஏமாற்றும் மோசடி கம்னிஸ்ட்கள்.

மன் (மண்) மோகன் சிங்: உதயகுமார் மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவுக்கு  வெளிநாட்டு நிதி வருவதாகவும், வட ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டு, அன்னிய சக்திகள் போராட்டப் பின்னணியில் உள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுல வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவின் கைக்கூலி மண் மோகன் சிங் போராட்டகாரர்களை அமெரிக்க இயக்குகிறது என்று சொல்வதுதான்.

புண்ணாக்கு சிதம்பரம்: இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை இன்னும் தடை செய்ய தெம்பில்லை, திராணியில்லை கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஜெர்மனியில் இருந்து உதவியாம். ஜெர்மனிகாரனுக்கு வேற வேலையே இல்லை. ஏன் இதுவரை பாகிஸ்தானை இதில் சேர்க்கவில்லை ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்ல வேண்டியதுதானே. அதுவும் சரிதான் எத்தனை வருசத்துக்குத்தான் அந்த கதையை ஓட்ட முடியும். சத்தீஸ்கர் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கை எடுத்த உள்துறை புண்ணாக்கு அமைச்சர்தானே இவர்.

ஜெயலலிதா:  மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வராக இருந்தால் மின்சார பற்றாக்குறையை தீர்க்க அறிஞசர் பெருமக்கள் பரிந்துரை செய்த மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பார். அதை விட்டு விட்டு இவர் ஒரு நிபுணர் குழு அமைத்து கொண்டு என்ன செய்யப்போகிறாரோ தெரியவில்லை. முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் குண்டு பல்புகளை எல்லாம் மாற்றி விட்டு குழல் விளக்குகளை போட்டால் பாதி மின் பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

அது போல் பொது நிகழ்சிகளுக்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு அவர்களை ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டும் என்று பணித்தால் இந்த பிரச்சனையின் பெரும்பகுதியை சமாளிக்க முடியும். கிராம மக்கள் சுகாதாரமாக அம்மி கல்லில் அரைத்து கொண்டு இருந்ததை கெடுத்து ஓட்டு வேண்டும் என்று மிக்சியை கொடுத்தவர் ஏன் குழல் விளக்கை கொடுக்க மறுக்கிறார்.

இந்த களவாணிகளை நம்பி எந்த பிரோஜனமும் இல்லை. மக்கள் சக்திகள் எல்லாம் ஒன்று திரள வேண்டும். இந்த கொடுமைகாரர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் இல்லையேல் இவர்கள் நம்மை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

7 comments:

STALIN said...

அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டும் பதிவு

Seeni said...

unmai !
unmai !
unmaiyai thavira verillai!
neenga ezhuthiyathu!

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஸ்டாலின் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழர் சீனி, நலமா, இந்த கலுசடை அரசியல்வாதிகளை பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் அவர்கள் பேச்சும் நடிப்பையும் பார்த்தால் எரிகிறது. வேலை மெனக்கெட்டு இந்த லூசுகளை பற்றி பதிவு எழுதவேண்டி இருக்கே என்று ஒருபக்கம் எரிச்சலாக இருக்கு...

Anonymous said...

good article. thank you.

Esther sabi said...

சிந்திக்க வேண்டிய கருத்து முதலில் இதை இத்தலைவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.......

PUTHIYATHENRAL said...

வணக்கம் எஸ்தர் நலமா? உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.