Mar 5, 2012

பெண்களை அவமதிக்கும் பேய்களா ஆண்கள்!

மனம் வரைந்த கோலங்களை சிதைத்து விடுகிறது
சிலருக்கு  மணக்கோலம்

காதலித்த தவறுக்கு பனிஷ்மென்ட் டிரான்ஸ்பர்
உடனே திருமணம்

கருத்தில் முரண் படுபவனோடு  கட்டிலில் உடன்பாடு ....பரிதாப ஜீவனாய் கற்புக்கரசிகள்.

மனம் நிறைய கணம்  கை நிறைய பணம்
ATM எந்திரமாய் சம்பாதிக்கும் பெண்கள்

மணவரை நுழைந்து  கருவரையை  நிறைத்து கொண்டதால்
கலாச்சார கல்லறைக்குக்  கால்வாய் இன்றும் பெண்கள்

பச்சையாய்  உனைக் கண்னோடு   தின்னும் காமிராக்களுக்கு
இறையாகி போன திரை  துறை பெண்கள்

சொந்த காலில் நின்றாலும் கழுகுகால்களுக்கு அஞ்சி
பதுங்கிகுழி தேடும் கோழி குஞ்சிகளாய் பெண்கள்

சாபமாய்  வாழ்க்கை  சலித்த இதயம் சாய்ந்துக்கொள்ள
வரம் தரும் பிசாசுகளைத் தேடி ஓடும்  அபலையாய் பெண்கள் 

நற்   குணங்களைக்  கொன்று  கண்டவர்  பேஎன்றலாரா
குலம் அழிக்கும் கோடரியாகவும் சில பெண்கள்

மாதவம் செய்து மாதராய்ப்  பிறந்து
மடிந்து போகும் புஞ்சையா பெண்கள்

நல்லன ஆக்கவும் தீயென அழிக்கவும்
ஒருங்கே தீரண்ட  ஓட்றை சக்தி நாம் பெண்கள்

நேர்மை கொண்ட நெஞ்சே நீ அச்சத்தை அழித்துவிடு
மடைதிறந்த வெள்ளமே உன் மடமைகளை உடைத்துவிடு
சிகரம் நீ, நிமிரிந்து நில், துணிந்து செல்
உலகம் உன்னது உணர்ந்தே நடைபோடு
உன் வாழ்க்கை  உன் கையில் நீயே தேர்ந்து எடு
பெண்ணைத் தன்மானத்துடன் வைக்கும் நல்ரவுத்திரம்  பழகிவிடு.


ரௌத்திரம் பழகு
...யாழினி...

21 comments:

HOTLINKSIN.com திரட்டி said...

பெண்களை புதுமைப் பெண்களாக்கிட அழைக்கும் கவிதை... அருமை...

tamilan said...

.
CLICK AND READ

>>>> பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??

,
.

Anonymous said...

விஸ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆரிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம் பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் .அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?
ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப் படுத்தப்பட்டவர்களிடம் இருந்து தமது பெண் துணைகளைப் பெற்றதாலும், பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்த முனைந்ததாலும், இந்த கருத்தை ஆரிய இந்துமதம் உருவாக்கியது

Anonymous said...

விஸ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆரிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம் தமிழன் கொடுத்துள்ள லிங்குக்கு சென்று படித்துப்பாருங்கள் ..தமிழர்கள் கோபம் கொள்வீர்கள்

MURUGANANDAM said...

women are always soft and they have to be handled very decently. Only Men should avoid extra marital/premarital/sex perversions. If women are respected and treated in a such way, we are blessed by them and Women will have a relief from men's ugly watching. But at the same time women are also having the responsibility not to evoke dirty feelings, by their ultra modern dress sense and makeup.

Anonymous said...

பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??
பெண்களை புதுமைப் பெண்களாக்கிட அழைக்கும் கவிதை..எழுதி பலன் கிடைக்கப்போவதில்லை சமுக கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் பெண்களைகாப்பதில் இந்த சமுகத்தில் நல்ல நிலையில் உள்ள பெண்கள் முன்னுக்கு வரணும் வருவார்களா...

Esther sabi said...

பாரதி கூக்குரல் இட்டதன் பயன் இன்று ஓரளவு நிம்மதி... உங்கள் கூக்குரலுக்காவது முழுதும் கிடைக்குமா பார்ப்போம்

Anonymous said...

superunga annaa ...
kalakuruiinga ...

kavi ezutha theriyathu endu kathaichcha kavi mannarin kavithai superuuuuuuuuuuuuuuu

PUTHIYATHENRAL said...

//பெண்களை புதுமைப் பெண்களாக்கிட அழைக்கும் கவிதை... அருமை... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே...

PUTHIYATHENRAL said...

தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

//women are always soft and they have to be handled very decently.//

வணக்கம் முருகானந்தம் நலமா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் எஸ்தர் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..... யாழினியின் வரிகள் என்றும் சிந்திக்க வைக்க கூடியவை. வருகை புரிந்த உங்களுக்கும்.. பதிவு எழுதிய யாழினிக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தங்கை கலை நலமா இருக்கீங்களா... ஐயோ... இது நான் எழுதின கவிதை இல்லை இது யாழினி எழுதியது. நான் இன்னும் ஒரு கவிதை கூட எழுதியது இல்லை முயற்ச்சிக்கிறேன்.

Seeni said...

Kavithai kalakkala!
Kalkkiyathu kankalai!

Arumai !
Kavithai!

Seeni said...

Kavithai kalakkala!
Kalkkiyathu kankalai!

Arumai !
Kavithai!

PUTHIYATHENRAL said...

சீனி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே.

tamilan said...

பயிற்சி முகாம் என்ற பெயரில் பெண்களுக்கு அவமதிப்பு-மதவெறிக் கும்பல் ஆர்.எஸ்.எஸ்சின் அட்டகாசம்

செவ்வாய், 06 மார்ச் 2012 15:52

மீசையை முறுக்கிக் கொண்டு, மன்னரைப் போலவிறைப்பாக அமர்ந்து கொண்டிருக்க, பழங்குடியினப் பெண்கள் சிலர் அவரது கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

அருகில் ஆர்.எஸ். எஸ்.சின் முக்கியமான தலைவர்களும் தங்களின் முறை எப்போது வரும் என்றுகாலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்தது அயோத்தியாவில் தான்.

கம்பீரமாக அமர்ந்து கொண்டு தனது கால்களைப் பழங்குடிப் பெண்கள் கழுவுவதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் மத வெறிக் கும்பலான ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்.

பழங்குடியினப் பகுதிகளில் தங்கள் மதவெறிப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல அண்மைக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் தாய் மதத்திற்கு பழங்குடி மக்களை அழைத்து வருகிறோம் என்று கூறி பல்வேறு முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கலவர பூமியாக மாற்றப் பட்டிருக்கும் அயோத்தியாவில் பயிற்சி முகாம் நடந்துள்ளது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்க வந்திருந்தார். அவரைத் திருப்திப்படுத்த நினைத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராமர் ஜானகி கோவிலில் வைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த பழங் குடிப்பெண்களை தலைவர்களின் கால்களைக் கழுவி விடச் செய்தனர்.

கால்களைக் கழுவி விட்ட பெண்கள் அஸ்ஸாம் மற்றும் ஜார்க் கண்டு ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பழங்குடியினத்தவராவர்.

ராமாயணக் கதைகளை எப்படிச் சொல்வது என்பதற்கான பயிற்சி தருகிறோம் என்று அவர்களை அழைத்து வந்திருந்தார்கள்.

விஸ்வ இந்து பரிசத்தின் வேதாந்தியோ, உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் மோகன் பாகவதுதான் தலைவராவார். அதனால் அவரது கால்களைக் கழுவுவதில் தவறில்லை என்கிறார்.

- நன்றி : தீக்கதிர்
6.3.2012

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாகவே கருதி வருகிறது என்று சாதுக்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

அதனால்தான் பெண்களைத் தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ். சேர்த்துக்கொள்வதில்லை.

ஆண்களோடு சரிநிகர் சமமாக அவர்கள் இருக்க முடியாது என்று கருதப்படுவதுதான் இதற்குக் காரணமாகும்.

ராஜ் கோபால் கோவிலின் பூசாரியான கவுசல் கிஷோர் சரண் கூறுகையில், மதம் என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு ஏராளமான மோசடிகளை ஆஅர்.எஸ்.எஸ். செய்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இந்த பாவம் நீண்ட நாட்களுக்கு ஆர்எஸ்.எஸ்.காரர்களை விடாது என்று குறிப்பிட்டார்.
http://www.viduthalai.in/e-paper/29395.html

மலர்விழி said...

பெண்கள் மன வேதனைகளையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் நன்றாக சொல்லியிருக்கிறாய் தோழி நன்றி.

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

எந்த ஊரில் இருக்கீங்கன்னு தெரியல....இதையெல்லாம் தாண்டி பல மைல் வந்து வெற்றி பெற்றுகொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதுவும் இல்லாமல் நீங்க சொல்லி இருக்கிற ஒவ்வொரு விஷயமும் ஆண்களுக்கும் பொருந்தும்.

"மனம் வரைந்த கோலங்களை சிதைத்து விடுகிறது
சிலருக்கு மணக்கோலம் "

ஆண்களுக்கு, தான் பெற்ற தாய் தந்தையராய் முதியோர் இல்லம் துரத்தச் செல்வதும் இந்த மணக்கோலம் தாங்க.

"மனம் நிறைய கணம் கை நிறைய பணம்
ATM எந்திரமாய் சம்பாதிக்கும் பெண்கள் "

சரி.. அப்போ ஆண்கள் யாரு ?

"கருத்தில் முரண் படுபவனோடு கட்டிலில் உடன்பாடு ....பரிதாப ஜீவனாய் கற்புக்கரசிகள்."

சரி. இதே மாதிரி கருத்தில் முரண்பட்டவங்களை, ஆண்கள் எவ்வாறு சமாளிக்கிறாங்க ?


சாதாரண மனிதனின் வாழ்க்கைத் துயரங்களை ஆண் பெண் என்று பிரித்து சொல்லாதீங்க. சொன்னது எல்லாருக்கும் பொது. மற்றவர்களை உசுப்பேத்தி இன்பம் காண்கின்ற வகையாகத் தான் இந்தப் பதிவை பாக்குறேன். தலைப்பு கண்டனத்திற்குரியது.

மதுரை சரவணன் said...

vaalththukkal..