Mar 12, 2012

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!


March 13: பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60  லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.

பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா? இருப்பாய் தமிழாய் நெருப்பாய். 
*மலர்விழி*   

17 comments:

Anonymous said...

naalla naakka pudunggara maathirithaan kekkuringga intha jaathiikku soodu soranai irunthaa thaane,aana rajini sonnal ooooooh....
mugilan.

Esther sabi said...

சிந்திக்க வேண்டிய தலைவர்களுக்கு இக்ட்டுரை போய் சேர்ந்தால் மிக சந்தோஷம். இக்கட்டுரைக்கான படத்தில் எப்படி இசைப்ரியா அக்கா சேர்ந்தார் என்பதுதான் தெரியவில்லை

Anonymous said...

தமிழர்கள்களுக்கு சூடு, சுரணை சுத்தாமாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

PUTHIYATHENRAL said...

//இக்கட்டுரைக்கான படத்தில் எப்படி இசைப்ரியா அக்கா சேர்ந்தார்//

வணக்கம் எஸ்தர் நலமா.... இக்கட்டுரையில் நாம் ஈழத்து சொந்தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும் நமது தமிழ் மக்கள் இப்படித்தான் மவுனம் காத்தார்கள் என்பதை சொல்லி இருப்பதால் அதில் இருந்து சிலவற்றை படமாக போட்டிருக்கிறோம். தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயதே ஆனா மகனை சுட்டு கொன்றது. இசைபிரியாவை நாசம் செய்து கொடூரமாக கொன்றது போன்றவைகளை அதில் அடங்கும். ஈழத்து துயரங்களை அந்த சிறிய படத்திற்குள் கொண்டு வந்து விட முடியாது. அதனால் ஒரு சிறிய துளியே அது.

Anonymous said...

தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது.//
வேண்டாம் எல்லா தமிழக உறவுகளையும் இப்படி குறிப்பிட வேண்டாம். எமக்காய் உயிர் துறந்த தமிழரும் மானமுள்ள தமிழரும் அங்கு இருக்கின்றார்கள். போராட்ட குணம் கொண்டவர்களும் அங்கு உள்ளார்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் அனானி அப்படி சொல்வது தவறுதான்.... நிச்சயமாக தமிழர் ஆதரவு சிந்தனை படைத்த மக்கள் மனம் வருந்த மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நிச்சயமாக அது உண்மை தமிழர்கள் யாரையும் குறிப்பிடாது. வார்த்தையால் ஜாலம் செய்து ஆண்டாண்டுகளாய் தமிழர்களை ஏமாற்றிவரும் ஏமாற்றுகாரர்களையும், யாருக்கோ நடக்கிறது நமக்கு நடக்கவில்லைதானே என்று பாராமுகமாக இருக்கும் உணர்வு அற்ற ஜடங்களையுமே இது குறிக்கும். பொதுவாக சொன்னதற்காக மற்றைய தமிழ் உள்ளங்கள் மன்னிக்கவும்.

Anonymous said...

தமிழர்களா வாய்ப்பே இல்லை ?????

Anonymous said...

“என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள்.”

ராமநாதபுரம் அருகே நடந்த விபத்தில் வடமாநில வாலிபர் பலி:
``என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள்; காப்பாற்றுங்கள்''

3 குழந்தைகளுடன் போலீசில் பெண் தஞ்சம்


ராமநாதபுரம், மார்ச்.13-


ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேரும், வேனில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் லகன்சிங், பீபல்சிங் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியில் பீபல்சிங் இறந்தார்.

இவர் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தான மாவட்டம் நகோடு தாலுகா சித்துபுராவை சேர்ந்த நிக்குசிங் என்பவரின் மகன் ஆவார். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருடைய மனைவி வீராபதி (வயது27), மகன் அனில்(3), 5 மாத குழந்தை பாதல், மகள் பூனம்(7) ஆகியோர் காயமடைந்தனர்.

பீபல்சிங்கின் உடலை பெற அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் பீபல்சிங்கின் உடலை பெற்றுக்கொண்டு வீராபதி மற்றும் குழந்தைகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

ஆனால் வீராபதி தனது குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டு வரமுடியாது என கூறினார். அவர்கள் வீராபதியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவே கதறி அழுதார்.

பின்னர் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அழுதுகொண்டே ராமநாதபுரம் டவுன் போலீஸ்நிலையத்துக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்தார். அங்கு, "போலீசாரிடம் காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள்'' என்று இந்தியில் அலறினார்.

போலீசார் அவரை ஆறுதல் படுத்தி விசாரித்தனர்.

"ஏன் கணவர் வீட்டாருடன் செல்ல மறுக்கிறாய்?'' என்று அவரிடம் போலீசார் கேட்டபோது வீராபதி கூறிய பதில் போலீசையே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-


"எங்கள் குல வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும். இறந்த கணவருடன் சேர்த்து வீட்டின் பின்புறம் என்னையும் உயிரோடு புதைத்து விடுவார்கள். குழந்தைகள் இருந்தால் கணவரின் பெற்றோர் தான் அவர்களை வளர்ப்பார்கள். என்னையும் என் கணவரோடு புதைக்கவே வருமாறு வற்புறுத்தி அழைக்கிறார்கள்.

எனது கணவர் இறந்தாலும் எனது பிள்ளைகளை நான்தான் வளர்ப்பேன். அவர்களுக்காக நான் உயிர்வாழ வேண்டும். எனவே என்னை அவர்கள்பிடியில் இருந்து காப்பாற்றுகள். நான் எனது தந்தை ராம்ஜிலாலுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார்.''

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை அடுத்து வீராபதியை அவருடைய மாமனார் குடும்பத்தினருடன் அனுப்ப போலீசார் மறுத்துவிட்டனர்.மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=715630&disdate=3/13/2012

அர அல said...

மானங் கெட்ட இந்து பயங்கரவாதிகளுக்கு த்மழன்கள் செத்தா என்ன,இருந்தா என்ன?அவா மட்டும் சுபிட்சமா இருந்தா போறும்.

Anonymous said...

தமிழர்களை இவ்வளவு கேவலமாக திட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.


தமிழர்கள்...தமிழ்நாட்டில்

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

dondu(#11168674346665545885) said...

எது எப்படியானாலும் சிறையெடுக்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்கள் மாட்டிக் கொண்டிருப்பது பற்றி ஒப்புக்குக் கூட வருந்தாத நீங்களும் மானம் கெட்ட தமிழர்தான் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

டோண்டு ராகவன்

MPR T said...

Apuram current ila nu yethuku govt kurai solrenga!!!

PUTHIYATHENRAL said...

//எது எப்படியானாலும் சிறையெடுக்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்கள் மாட்டிக் கொண்டிருப்பது பற்றி ஒப்புக்குக் கூட வருந்தாத நீங்களும் மானம் கெட்ட தமிழர்தான் என்பதை நிரூபிக்கிறீர்கள்.//

வணக்கம் டோண்டு ராகவன் சார் நலமா, நீங்கள் ஒப்புக்கு கூட என்கிற வார்த்தையை சொல்வது மூலம் உங்களுக்கும் புரிந்திரிக்கிறது இதை ஒப்புக்குத்தான் சொல்ல முடியும் என்று. ஏன் என்றால் இதில் வருத்தம் தெரிவித்தால் அங்கு போராடும் மக்களை இழிவுபடுத்துவதாக அமையும் மேலும் அந்த லாரி டிரைவர்கள் கிளினர்கள் அந்த மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் சார்பாக கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு வழியே கிடைத்திருக்கிறது என்று கொள்வோமே.

அவர்கள் விடுதலை ஆக வேண்டும் என்பதில் மாற்று கருத்து எங்களுக்கும் இல்லை யாருக்கும் இருக்க முடியாது. தினமலர், தினமணி, போன்ற பத்திரிக்கைகள் கேவலமா சொல்வதாக இருந்தால் வெளிநாட்டுகாரன் சிறுநீர் கழித்தாலும் செய்தியாக போடும்போது இதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பதேன். மத்திய அரசு மவுனம் காப்பதேன் இந்த செய்தி வெளியே வந்தால் அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு சாதகமாக முடியும் என்பதே. உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா.

PUTHIYATHENRAL said...

Apuram current ila nu yethuku govt kurai solrenga!!!

வணக்கம் தோழரே............. நமக்கு மின்சாரம் வேண்டும் என்று கூடங்குளம் மக்கள் தலை மேல் மெழுகுவர்த்தி ஏற்றக்கூடாது என்பதே நமது வேண்டுகோள். மின்சாரம் வேண்டும் அணு உலை கட்டுங்கள் என்று கூடங்குளம் மக்கள் கேட்கவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே

Anonymous said...

கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல், அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது.

தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்
பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.

கடுமையானதொரு மின்பற்றாக் குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.

“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.

மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம் இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.

Anonymous said...

“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை.

மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.