Mar 13, 2012

ஈழமக்களுக்கு எதிராக செயல்படும் தினமலர்!

March 14: அமெரிக்காவிற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள்  ஆர்ப்பாட்டம் என்று ஒரு செய்தியை எழுதி தினமலர் தன் அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது.

நல்ல விஷயத்தை யார் செய்தாலும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதுதானே. கம்யூனிஸ்ட் என்றால் அமெரிக்க எதிர்ப்பு பேசி அதை காரணமாக வைத்து இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தையும் எதிர்க்க வேண்டுமா என்ன? அப்படி செய்யவேண்டும் என்பதே தினமலரின் எண்ணம்.

கூடங்குளம் அணு உலை விசயத்தில் ஜெயலலித்தாவை எதிர்க்கவும், கூட்டணியில் உள்ள மத்திய காங்கிரஸ் அரசை திருப்திபடுத்தவும் கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் பேசிவரும் தமிழர் துரோகி கருணாநிதி இப்பொழுது இந்தியா இலங்கையை ஆதரிக்க கூடாது என்று கடித யுத்தம் நடத்துகிறார்.

கருணாநிதியை தொடர்ந்து ஈழத்து பிரச்சனை முதல் கூடங்குளம் அணு மின் நிலய விவகாரம் வரை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்த போலி கம்யூனிஸ்ட்கள் இப்போதுதான் முதல் முறையாக மனம் திருந்தி ஒரு நல்ல விஷயத்தை முன் மொழிந்துள்ளார்கள் அதுவும் பிடிக்க வில்லை இந்த தினமலருக்கு.

வெளிநாட்டுகாரன் சிறுநீர் கழித்தால் அதையும் செய்தியாக போடும் தினமலம் தமிழகத்தை சேர்ந்த 60  லாரிகளை பீகார் அனல் மின்நிலய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் மக்கள் 57  நாட்களாக சிறை பிடித்து வைத்துள்ளதை பற்றி வாய்திறக்க வில்லையே ஏன்?  அப்படி திறந்தாள் அனல் மின் நிலையத்தையே! பீகார் மக்கள் எதிர்க்கிறர்களா? 

அப்படியானால் கூடங்குளம் மக்கள் நடத்தும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது நியாயம் தானே என்கிற எண்ணம் தமிழக மக்கள் மனதில் ஏற்ப்படும் அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என்கிற பயமே. இனி தொடர்ந்து தினமலரால் கூடங்குளத்தை எதிர்த்து செய்தி வெளியிட முடியாதே.

இன்றைய பத்திரிக்கைகள் மக்கள் பிரச்சனைகளை எழுதி நியாயத்தின் குரலாக ஒலிப்பதை விட்டு நடிகைகளின் விரச படங்களை போட்டு, கிசுகிசுப்புகளை, கள்ளக்காதல்களை எழுதி எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டன. இருந்தாலும் இடை இடையே மக்கள் பிரச்சனைகளையும் எழுத மறப்பதில்லை. 

ஆனால் இந்த  தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற சில பத்திரிக்கைகள் மட்டும் தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு எதிராக, தமிழர் விரோத எண்ணத்தோடு  செயல்பட்டு வருகின்றன. இது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலை. தமிழர்களிடமே பத்திரிகை விற்று பிழைப்பு நடத்தி கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
* மதிவதனி*

21 comments:

Anonymous said...

இது அவர்கள் இரத்தத்தில் ஊறியது அதை மாற்ற முடியாது சார். அவர்கள் பிறப்பே அப்படித்தான். BY; RAJA.

Anonymous said...

கருணாநிதி இப்பொழுதும் கடிதத்தில் தூது அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்.... அவரை கடிதப்புலி அல்லது காகிதபுலி என்று அழைக்கலாமே.

***** மன்மதன்.

Anonymous said...

//தமிழர் துரோகி கருணாநிதி//

அப்படியெல்லாம் எங்க தலைவரை சொல்லாதீங்க அவரு ரொம்ப நல்லவரு தெரியுமா???? எங்க தமிழ் நாட்டில் அவரு அளவுக்கு யாரும் யோக்கியர்கள் இல்லை தெரியுமா???

HOTLINKSIN.com திரட்டி said...

ஈழ மக்களுக்கு மட்டுமா...? தமிழக மக்களுக்கும் எதிராகதான் செயல்பட்டு வருகிறது தினமலர்... தமிழனைக் குறை சொல்லிக் கொண்டு தமிழனிடமே தன்னை விற்றுக் கொள்ளும் டெக்னிக்கை தெரிந்து வைத்திருக்கிறது தினமலர்.

Anonymous said...

Thirunthaatha thina malam... Azad .... Nellai

VANJOOR said...

click >>>>> தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! <<<<,

.
.

Anonymous said...

Very good article thank u .

Seeni said...

tinamar!
athu appadithaan!

Anonymous said...

அமெரிக்கா தான் உலகிற்கே வழிகாட்டி என்பதை கம்யூனிஸ்ட்டுகள் புரிஞ்சிட்டாங்க

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

Anonymous said...

தினமலர்(ம்) என்று ஒழியும் !!!!!!!

நல்ல செய்திகள் மக்களுக்கு என்று கிடைக்கும் ?????

பரமசிவம் said...

தினமலரைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்களே, அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும்.
அந்த நாள் எப்போது வரும்?

சாகித் said...

நம்மை போல இஸ்லாமிய மக்கள் வாசிக்க இஸ்லாமிய மலர் என்ற நாளிதழை உடனே தொடங்க வேண்டும்,

arunrajamani said...

நெத்தியடி

PUTHIYATHENRAL said...

//HOTLINKSIN.com திரட்டி said...ஈழ மக்களுக்கு மட்டுமா...? தமிழக மக்களுக்கும் எதிராகதான் செயல்பட்டு வருகிறது தினமலர்... தமிழனைக் குறை சொல்லிக் கொண்டு தமிழனிடமே தன்னை விற்றுக் கொள்ளும் டெக்னிக்கை தெரிந்து வைத்திருக்கிறது தினமலர்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே.

PUTHIYATHENRAL said...

Blogger // VANJOOR said...click >>>>> தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! <<<<,//

உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழரே.

PUTHIYATHENRAL said...

Blogger Seeni said...tinamar! athu appadithaan!

என்ன தோழரே சும்மா சாதாரணமா சொல்லிவிட்டு போயிட்டீங்கள். இருந்தாலும் அது அப்படித்தான் என்பதில் ஆயிரம் கருத்து எடுக்க முடியும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

//ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!//

வணக்கம் அருள் நலமா.. இது ஒன்றும் சிறிய பங்கு இல்லை... இது ஒரு நல்ல சிறப்பான ஒரு முயற்சி. உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள். உங்களது பங்களிப்பு சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிடலாம் என்று இருக்கிறோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

//தினமலரைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்களே, அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும்.
அந்த நாள் எப்போது வரும்?//

வணக்கம் பரமசிவம் தோழரே... மிக சரியாக சொன்னீர்கள்... உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி...

PUTHIYATHENRAL said...

//wesmob said...தினமலர்(ம்) என்று ஒழியும் !!!!!!! நல்ல செய்திகள் மக்களுக்கு என்று கிடைக்கும் ?????//

இதுதான் ஒவ்வொரு தமிழர்களின் ஆவலும் கூட. இப்படி பட்ட ஒரு கீழ்த்தரமான பத்திரிகை வெளிவர வேண்டுமா?

PUTHIYATHENRAL said...

//Blogger arunrajamani said...நெத்தியடி//

உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி தோழரே.