Mar 23, 2012

தமிழர்களை உறவாடி கெடுத்த இந்தியா?

March 24: ஐக்கிய நாடுகளின் சபையில் இலங்கையின் போர் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த  தீர்மானத்துக்கு ஆதரவு கோரி ஐ. நா.வின் மனித உரிமைகள் குழு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

47 நாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்த விவாதத்தில் 24நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்கு அளித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.

இந்தியாவின் சதி: இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் நிருபிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.

தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.

இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைக்காரனின் ஆலோசனையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதா பிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது.

இது விசாரணை சரியான திசையில் முன்னெடுக்காமல் தடுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இதுவரை நடந்த போரில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசை இறையாண்மைக் காரணம் காட்டி காப்பாற்ற முயல்வது தமிழினத்திற்குச் செய்யும் அப்பட்டமான துரோகமாகும். இதுநாள் வரை தமிழனுக்கு எதிராக செயல்பட்டுக் கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தீர்மானமே மிக மென்மையானது. அதனையும் முடக்கும் வேலையை இந்த திருத்தங்களின் மூலம் இந்திய அரசு செய்துள்ளது   தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல் இந்த தீமானத்துக்குள் நுழைந்து  உறவாடி கெடுத்துள்ளது.

9 comments:

பரமசிவம் said...

இந்திய அரசு என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அரசு இயந்திரத்தை இயக்கிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தக்க தருணத்தில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.

Anonymous said...

உறவாடிக் கெடுப்பதில் இஸ்லாமியர்களை மிஞ்ச முடியுமா? இலங்கையிலே தமிழர்களை காட்டிக்கொடுத்த கூட்டமாச்சே.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்லவர்களின் மிது உண்டாவட்டுமாக....சிந்திக்கவும் இணையத்திற்குள் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி கருத்திடும் [ இப்னு ஷாகிர்][ pagadu ]என்ற பெயரில் இருந்து கொண்டு Anonymous யில் வரும் நீ [ கள்ளத்தனமாக விமர்ச்சனம் செய்யும் கயவன் உனது முகவரியுடன் விமர்சனம் பண்ணினால் கண்ணியமான முறையில் பதில் தரப்படும் ] கண்டிப்பாக உன்னை கண்டுபிடிப்போம் பொறி வைத்து விட்டோம் சிக்குவாய் சிதரப்போகின்றாய் .....இவன் ....புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழர் பரமசிவம் அவர்களே நலமா. நிச்சயமாக காலம் அவர்களுக்கு தகுந்த பதில் சொல்லும்.

PUTHIYATHENRAL said...

நண்பர் புனித போராளிக்கு இப்னு ஷாகிர்][ pagadu ] இவர் நாகரிகம் இல்லாதவராக இருப்பார் என்று நினைக்கிறன். பதிவுக்கு தொடர்புடைய கருத்துக்களை வெளியிடுங்கள் என்று சொன்னால் ஒரே லிங்கை திரும்ப திரும்ப எல்லா பதிவுகளிலும் வந்து கொடுக்கிறார். இதுபோல் அநாகரிகம் வேறு எதுவும் இல்லை. ஏன் இந்த கேவலமான வேலையை செய்கிறார் என்று புரியவில்லை. இவரது கருத்துக்களை தினமும் பார்த்து நீக்கி கொண்டிருப்பது என்பது சாத்தியம் இல்லை. ஆகவே கருத்துக்கள் நமது பார்வைக்கு வந்த பின்னால் வெளியடலாம் என்று நமது சிந்திக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் சிந்திக்கவும் இணையதள நிர்வாகத்தினர் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக....சிந்திக்கவும் இணையதளத்தில் வரும் [ கருத்துக்கள் நமது பார்வைக்கு வந்த பின்னால் வெளியடலாம் என்று நமது சிந்திக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.]இந்த முடிவிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்....இவன்...புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளும் நல்லவர்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக....[[[[உறவாடிக் கெடுப்பதில் இஸ்லாமியர்களை மிஞ்ச முடியுமா? இலங்கையிலே தமிழர்களை காட்டிக்கொடுத்த கூட்டமாச்சே.]]]]..மடத்தனமாய் கருத்திடும் முட்டாள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தவரையும் குற்றம் சொல்லுவதும் கொலை செய்வதும் மனித இனத்தின் பண்பல்ல..,,கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் ரத்த தானம் செய்பவர்களை பற்றி அறிந்திருந்தால் இஸ்லாமியர்களின் மனிதாபிமானம் சகோதரத்துவம் மனித உயிருக்கு இஸ்லாமியர்கள் காட்டும் நல்லவைகள் உன்கண்ணில் பட்டிருக்கும் ..,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .என்ற அமைப்பு தமிழகத்தில் ரத்த தானம் செய்வதில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகின்றது இந்த அமைப்பினருடன் போட்டி போட்டுக்கொண்டு பல சமுதாயத்தை சார்ந்த அமைப்பினர்கள் ரத்த தானம் பண்ணுகின்றார்கள் இருந்த போதிலும்., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போட்டி போட விரும்பும் அமைப்புகள் [[ த மு மு க ]] [[ I N T J ]] [[ S D P I ]] போன்ற இஸ்லாமியர்களின் அமைப்புகளுடன் தான் இதில் இரண்டு விஷயம் அமைந்திருக்கின்றது ..,,,ஒன்று சுயநலம் மற்றது பொதுநலம் ..,,சுயநலம் எனபது [ இஸ்லாமியர்களுக்குள்] அமைப்புகளில் நாங்கள்தான் சிறந்த அமைப்பு என்பதற்காக..,,,பொதுநலம் தமிழகத்தில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தங்களின் ரத்தத்தை கொடுப்பது ...உயிருக்காக போராடும் தமிழ் இனமே உனக்கு ரத்தம் கொடுக்க இஸ்லாமிய சகோதரன் நாங்கள் இருக்கின்றோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் சொல்கின்றது சமுகசேவையில் இவர்களை மிஞ்ச யாராவது இருக்கின்றார்களா.. மடத்தனமாய் கருத்திட்ட மடையா உனக்கு இஸ்லாமிய எதிப்பு சிந்தனையை ஊட்டிவிட்டார்கள் அதுதான் வரலாறு தெரியாமல் உழலுகின்றாய் உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவை என்றால் இஸ்லாமிய அமைப்புகளை தொடர்பு கொள் பிறகு சொல் இஸ்லாமியர்களைப்பற்றி ....,,,இவன்..புனிதப்போராளி

புனிதப்போராளி said...

INTJ ,TMMK. மற்றும் மீனவர் கூட்டமைப்புக்கள் பங்கு பெறும்
'அணு உலைகளுக்கு எதிரான மாபெரும் ஆர்பாட்டம்'.
இன்ஷா அல்லாஹ் நாளை 26.3.12 திங்கள் மாலை 4 மணிக்கு கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு உலைகளை மூடக் கோரியும், அணு உலைகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்கு முறையை நிறுத்தக் கோரியும்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் INTJ ,TMMK. மற்றும்
மீனவர் கூட்டமைப்புக்கள் பங்கு பெறும்
'அணு உலைகளுக்கு எதிரான மாபெரும் ஆர்பாட்டம்'.
அழிவு சக்தியான அணு சக்திக்கு எதிராக அனைவரும் வருக!.....இவன் ....புனிதப்போராளி

anandan said...

INDHA KATTURAI PADIKKAVUM

ஐ.நா தீர்மானம்: தமிழர்களை ஏமாற்றிய இந்திய, அமெரிக்க அரசுகள்!

SUTTI : http://writervijayakumar.blogspot.com/2012/03/blog-post_25.html
.