Aug 30, 2012

கசாபுக்கு தூக்கு! மோடிக்கு எப்பொழுது?

Aug 30: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது  என்று திமிராக  பதில் அளித்தான்.

தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை
பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணை பிறபித்தான்.

இதனால் 10
ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி  ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண்களின் வயிற்ரை கிழித்து குழந்தையை எடுத்து தீயில் இட்டு கொளுத்தி "உலகிலேயே நாங்கள்தான் கொடூரமானவர்கள்" என்று ஹிந்துத்துவாவினர் நிரூபித்தனர்.


இந்நிலையில்
குஜராத் இனப் படுகொலையின் மிகப்பெரிய கூட்டுப்படு கொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது. அதில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண் கவுஸர் பானுவின் வயிற்றை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திரிசூலத்தால் குத்திக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை தீயில் பொசுக்கிய மிகக்கோரமான சம்பவம் நரோடாபாட்டியாவில் தான் நிகழ்ந்தது.

இந்நிலையில் தினமலர் பயங்கரவாதி "கசாப்" கடைக்கு போகிறார் என்று செய்தி வெளியிட்டது அதே நேரம் நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்என்று பிட்டு செய்தியாக போட்டது.
இந்த 32 பேரும் பயங்கரவாதிகள் இல்லையா? அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற கொடியவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுமா தினமலர்.

கசாப்புக்கு தூக்கு என்றால் குஜராத் இனப்படுகொலையை நடத்திய சூத்திரதாரி நரந்திரமொடிக்கு
என்ன தண்டனை? இவனுக்கு யார் தூக்கு தண்டனை கொடுப்பார்கள். பயங்கரவாதம், தீவிரவாதம் மனித குலவிரோத செயல்களை யார் செய்தாலும் பாராபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். பல்வேறு இனப்படுகொலைகளை நடத்திய மோடி, அத்வானி, பால்தாக்ரே போன்றோருக்கு தூக்கு எப்போது? இதுவே நடுநிலையாளர்கள் கேட்க்கும் கேள்வி.
 நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

8 comments:

Anonymous said...

கலவரத்தை தடுக்க தவறியதற்காக மற்றும் கலவரத்தை மேலும் ஊக்கபடுதியத்ரக்காக ராஜினாமா செய்ய வேண்டும்.

சில இஸ்லாமிய பெயர் தாங்கிகள் உன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதால் சமூகம் உன்னை மதிக்கிறது அல்லது மன்னிகிறது அல்லது மறந்து விட்டது என்று அர்த்தம் இல்லை .

Anonymous said...

1) 2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
by- AZAD - NELLAI

Anonymous said...

2) கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.

BY -AZAD- NELLAI

Anonymous said...

3) சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.

BY- AZAD - NELLAI

Anonymous said...

4) பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.

இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.

மாயா ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் சேய் நல மருத்துவர். 2002 இல் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மாயாவை அமைச்சராக்கி அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கினார் மோடி.

BY -AZAD NELLAI

Anonymous said...

5) அமைச்சராக இருந்த மாயாவை போலீசு பாதுகாப்புடன் தலைமறைவாக அனுப்பி வைத்தார் மோடி. தன்னை மவுன்ட் அபுவில் தங்க வைத்து மோடி பாதுகாத்தாரென்று தெகல்கா வீடியோவில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான் பஜ்ரங்கி. நரோதா பாட்டியா வெறியாட்டம் நடக்கும்போது, அங்கிருந்தபடியே மாயா கோத்னானி பலமுறை முதல்வர் அலுவலகத்துடன் தொலைபேசியில் பேசி, தங்கள் சாதனைகளை லைவ் ரிலே செய்திருக்கிறார்

BY- AZAD - NELLAI

Anonymous said...

6)சாட்சி சொல்லிய பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், நீதி பெறுவதற்காக தம் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த வழக்கில் சாட்சி சொன்ன முசுலீம் மக்கள். இன்னமும் மோடியின் குஜராத்தில், அதே நரோதா பாட்டியாவில் குடியிருந்தபோதிலும், எள்ளளவும் அச்சமின்றி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பெண்களின் தைரியம்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் வழக்குரைஞர் தீஸ்தா சேதல்வாத்.

அதுமட்டுமல்ல, கலவரத்தில் ஈடுபட்ட காலாட்படையினரை மட்டுமின்றி, அதற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களையும் தண்டித்திருப்பது இத்தீர்ப்பின் சிறப்பம்சம் என்கிறார் வழக்குரைஞர் தீஸ்த சேதல்வாத்.

AZAD - NELLAI

Anonymous said...

ஒரு நடு நிலை பத்திரிகையா மாருங்க சார், நங்கள் வேலை செயுர இடத்தில் நெறய முஸ்லிம் நண்பர்கள் உண்டு. எல்லாருமே நல நண்பர்கள் அவர்கள் யார்க்கும் தொந்தரவு தரமாடர்கள்.. நீங்கதான் எங்கள் மத்தியில் பிரிவு உண்டாக்ககுறிகள். நீங்க மறுமை மேல நம்பிக்கை வைத்ருகிரிகள் கண்டிப்பாக அல்லா தப்பு செய்தவர்களுக்கு தண்டனை குடுப்பான். இபோதிக்கு நாட்டுக்கு தேவையானது என்ன. அதை மட்டும் மகள் மத்தியில் விதையுங்கள்… சுமா எபோ பதாலும் மோடி மோடி மோடி இன்னு பேசுறிங்க , கண்டிப்பா மோடிக்கு நரகம்தான் அல்லா கைல அவனுக்கு கிடைக்கும்… தமிழ்நாட்டுல எதனை முஸ்லிம் வாலிபர்கள் கல்வி இளமை இருகாங்க முடிச்ச அவங்களுக்கு உதவி செயுங்க… நலத்தே விதயுங்க நல்ல அறுவடை கிடைக்கும்.. தவறாக எழுதி இருந்தால் மனிக்கவும்