Sep 23, 2012

இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலிகளா?

SEP 24: முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால்  செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான  ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்  டெல்லி உள்ள  சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்  இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள்,  உளவுத்துறையான ‘ரா’வின்  முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள்,  முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகின. ஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளை கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான் அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின் அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளே. த்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது.
 *மலர்விழி*

7 comments:

Easy (EZ) Editorial Calendar said...

\\" உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது. "//

உண்மை தான்...பகிர்வுக்கு நன்றி..........

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

நீங்கள் கூற்வது உண்மைதான்..பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Sri Lanka Tamil News said...

There must be an awareness created among the people.That is the only solution.

Anonymous said...

Innum ethanai naal than ethu maathiri sollikitte erupingalo theriyala. Naatta alikkira sakthila intha mala vizhium oru nabar. naattai olikkum sakthikale nalla erunga. ungaludaya mathasarpinmaiku vazhthukkal.

Anonymous said...

ஏண்யா ஆர். எஸ். எஸ் ஸை ஒழிக்க சொன்னா நாட்டை ஒழிக்கிறோம் என்று எழுதி இருக்கே. ஆர். எஸ். எஸ் க்காரன் என்றைக்கு ஒழிகிறார்களோ, அன்றுதான் நாடு சுபிச்சம் அடையும். அதோடு பார்ப்பனனும் அழிந்துவிடுவான். பார்ப்பானியத்தை காப்பாற்றுவதுதானே ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளின் வேலை.

Anonymous said...

I don't bleive vivekananthar genthira doing all thinks..... I can't.....

- கரையில் இருந்து ... said...


யாரடா தமிழன் ! யாரடா இந்தியன் !!!

வெளளிகிழமை வெடித்த குண்டுகளுக்காக எங்களை
சிறையில் அடைத்தீர்கள் .....பலியிலும் நாங்கள் ,பழிலும் நாங்கள் !!!

இருந்தும் நீங்கள் தேசா துறவிகள் , நாங்கள் துரோஹிகள் !!!

ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் முதலில் குரல் கொடுத்தோம் !
அதற்கு பரிசாக எங்களை பள்ளிவாசலில் புகுந்தது சுட்டிகள் !!!!

இருந்தும் நீங்கள் தமிழ் போராளிகள் ,நாங்கள் தமிழ் துரோகிகள் !!!!

உள் இருந்து எரிந்து பெட்டிகளுக்காக எங்களின் உயிர்களையும் ,மானத்தையும்
தீயிட்டு ஏரிதீர்கள் ......!!

இருந்தும் நீங்கள் முதல் மந்தீரிகளாக ...நாங்கள் முதேவிகளாக !!!

எங்கள் பழம் பேரும் கட்சியை நீங்கள் பிரித்தீர்கள் ,முரிதீர்கள் ,சிதைதீர்கள் ,பழிதீரிகள்!!!!
இருந்தும் நீங்கள் சிம்மாசனத்தில் நாங்கள் சாக்கடையில்....!!!

சமுதாய போராளியை கொண்டு கட்சியை நீங்கள் வளர்த்தீர்கள் , பலபடுதினிர்கள்,திடபடுத்துநீர்கள் ...பிறகு எங்களை முதுகில் குத்துநீர்கள்
இருந்தும் நீங்கள் மேடையில் ...நாங்கள் தரையில் !!!!!

திரையிலும் ,திரை அரங்களிலும் எங்களை தீவிரவாதியாக சித்தரித்து !!
மாற்று மத சஹோதரனிடம் எங்களை பகைவனாக காண்பித்தீர்கள் ....!!!

இருந்து நீங்கள் இயக்குனர்களாக ...நாங்கள் பர்ர்பவர்களாக !!!!

ஒரு காலம் வரும் அன்று கல்லும் ,பாறையும்
சாட்சி சொல்லும் .....

யார் உண்மையாளர் என்றும் ,
யார் தமிழர் என்றும் ,
யார் இந்தியர் என்றும்.......

தெரிந்து கொள் துரோஹியே தெரிந்து கொள் ....
பிறப்பால் - இஸ்லாமியன்
இனத்தால் - திராவிடன்
மொழியால் - தமிழன்
தேசத்தால் - இந்தியன்


- கரையில் இருந்து ...