Sep 24, 2012

கார்பசேவ் போல் வாக்கெடுப்பு நடத்துவாரா? மன்மோகன் சிங்!

Sep 25: எக்காரணத்தைக் கொண்டும், எந்த நேரத்திலும், தமிழகத்துக்கு தண்ணீர் விடும் முடிவை, கர்நாடகா மேற்கொள்ளக் கூடாது' என, மாநில அரசை வற்புறுத்தி, பா.ஜ.க.வினர் பெங்களூரில் போராட்டம் நடத்தினர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி இதற்க்கு என்ன சொல்லப் போகிறது. ஒன்று தண்ணீர் விட வேண்டும் என்று போராட்டம் நடத்துவார்கள், இல்லை என்றால் நம்ம ஆள் சொல்லி விட்டானே என்று மவுனம் காப்பார்கள்.

காவேரி நதி நீர் பிரச்சனையில் இதுவரை வந்த தீர்ப்புகள் அனைத்தையும் கர்நாடகா அரசு காலில் போட்டு மிதித்தே வந்துள்ளது.  தமிழ் நாட்டில் இருந்து தயாராகும் மின்சாரத்தை மட்டும் மத்திய அரசு பிடுங்கி கர்நாடகா, கேரளா, ஆந்திரா எல்லோருக்கும் தாரைவார்த்து கொடுக்கிறது.

ஆனால் நமக்கு தேவையான தண்ணீரை மட்டும் அவர்களால் பெற்று கொடுக்க முடியவில்லை. இதற்க்கு எதற்கு நடுவண் அரசு என்று ஒன்று தேவையா? தமிழ் நாட்டில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பதிலாக நாம் பண்ட மாற்று என்கிற அடிப்படையில் தண்ணீரை பெற்று கொள்ள முடியும். கையாலாகாத மத்திய அரசால் நமக்கு என்ன பிரோஜனம்.

மீண்டும் பழைய காலங்களில் அரசர்கள் பண்ட  மாற்று முறையில் வளங்களை பகிர்ந்து கொண்டது போல் பகிர்ந்து நாம் சிறப்பாக வாழ முடியும். மன்னர் காலங்களில் இருந்த செழிப்பு கூட இப்போது இல்லை. இதற்க்கு ஏன் மத்திய அரசு என்ற ஒன்றின் கீழ் நாம் வாழவேண்டும்? இதற்க்கு எதற்கு ஒருதேசம்? மாநிலங்களுக்குள் சமநிலை பேணாத ஒரு அரசின் நிழலில் வாழ்வதால் நமக்கு என்ன நன்மை?

ரஷ்யாவில் கார்பசெவ் செய்தது போல் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ரஷ்ய குடியரசை விட்டு பிரிந்து போக விருப்பம் கொண்டவர்கள் போக அனுமதி அளித்ததுபோல்,  இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு தெரியும் எத்தானை மாநிலங்கள் தனிநாடாக பிரிந்து போகிறது என்று. போலி சித்தாந்தங்கள் மூலம் மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கு பதிலாக இப்படி மக்களின் உண்மையான விருப்பத்தை அறிந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வாக்கெடுப்பு நடத்துவாரா?

8 comments:

Anonymous said...

சோவியத் அதிபர் கார்பசேவுக்கு உலக சமாதானத்திற்கான 1990 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப் பட்டது. அணு ஆயுதக் குறைப்பு, ரஷ்யாவில் ஏற்படுத்திய மாபெரும் சீர்திருத்தம் கிழக்கு ஐரோப்பிய சமாதான முயற்சிகள் ஆகியவற்றிற்கு கார்பசேவ் ஆற்றியுள்ள பங்கு பணி மகத்தானது. உலக மாமனிதராக விளங்கும் கார்பச்சேவ் அமைதியிலும் சமாதானத்திலும் மக்களின் உரிமைகளைக் காப்பதில் பெரிதும் நாட்டங்கொண்டு தம் நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்காக உழைத்தவர்.

Anonymous said...

1991: Gorbachev resigns as Soviet Union breaks up
Mikhail Gorbachev, leader of the Soviet Union for almost seven years and executive president for nearly two, has stepped down from office.

He announced his resignation in a 10 minute speech, broadcast live on television, as the Soviet Union passed into history.

It has been replaced by the Commonwealth of Independent States (CIS).

Anonymous said...

முதலில் காவரி நதியே கர்நாடகாவிற்கு சொந்தமில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இப்படித்தான் காவேரி கர்நாடகாவிற்கு சொந்தமானது.

Anonymous said...

We have to think our Tamil people.

Anonymous said...

Tamilanukku yenna sonnaalum mandaiyil yeraathu samiyoo...

Anonymous said...

You guys want to broke India we know that. U can't do nothing.

Anonymous said...

Tamil tiggers, seeman, vaiko, nedumaran, and u want to broke India.

Anonymous said...

Nalla yosanai thaan...