Oct 4, 2012

"சென்னை உயர் நீதி மன்றத்தின்" தமிழர் விரோத போக்கு!


Oct 05: சிலவாரங்களுக்கு முன்பு 14 ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது.

இப்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு அமுலில் இருக்கும் நேரத்தில், சிலதினங்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருப்பது, தமிழக நீதிதுறையின் நேர்மையின்மையை காட்டுகிறது.

இதை எதிர்த்து சமூக சேவகர் சுந்தர் ராஜன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று பரிசீலனை செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எற்பார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து சரியான விளக்கம் தரவேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுள்ளது.

1989ல் தெளிவில்லாத ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2010 அணுப் பாதுகாப்புச் சட்டப்படி விபத்து நடந்தால் இழப்பீடாக 1500கோடி ரூபாய் அளிக்க வேண்டும். ஆனால் கூடங்குளம் திட்டம் 1989ல் ஆரம்பிக்கப்பட்டதால் இந்த சட்டம் அதை கட்டுபடுத்தாது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அரசுத் தரப்பு வாதம் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தை மதிக்காமல் இப்படி ஒரு தீப்பை கொடுத்திருப்பது, நீதி துறையில் அரசியல் செல்வாக்கு என்பது நிரூபனம் ஆகிறது.
 
தண்ணீரில் இறங்கி, மணலில் புதைந்து, உண்ணாவிரதம் இருந்து என்று மக்களின் சத்தியாகிரக போராட்டங்கள் தொடரும் நிலையில் அணுமின் நிலைய உற்பத்திகளை உடனே துவங்குவது என்பது எளிதான காரியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்ற வாரம் மத்திய அரசைக் கண்டித்து, அணுமின் நிலையத்திற்காக செலவு செய்த பணம் முக்கியமில்லை, அங்கே மக்களின் பாதுகாப்புதான் முக்கியம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லையெனில் அணு உலையை மூட உத்தரவிட வேண்டியது வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் சென்னை உயர்நீதி மன்றத்தை சிந்திக்கவும் இணையம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

6 comments:

Ayesha Farook said...

மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாத வரையில் அணுவுலை தொடங்ககூடாது.

தமிழ் காமெடி உலகம் said...

அணு உலையில் என்ன தான் பாதுகாப்பு என்கிற பெயரில் எதை கொண்டு வந்தாலும் நாம் அதை அனுமதிக்க கூடாது........

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Tamil Breaking News said...

நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அணுகியமைக்கு ஆறுதல் தீர்ப்பு வந்துள்ளது.
முழுமையான நீதி எப்போது கிடைக்குமோ?

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழி அயிஷா பாருக் நெத்தியில் அடித்த மாதிரி கருத்து சொன்னதற்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழர் காமடி உலகம்.... உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தமிழ் ப்ரேக் நியூஸ்,,, முழுமையான நீதி எப்போது கிடைக்குமோ? சரியான கேள்விதாங்கோ.