Nov 19, 2012

மும்பை நகரை ஆட்டிப்படைத்த இரட்டை ஆளுமைகள்!


Nov 19: மும்பையை ஆட்சி செய்தது, ஆட்டிப்படைத்தது பால்தாக்ரே, தாவூத் இப்ராஹிம் என்கிற இரு துருவங்கள்.

தாவூத் இப்ராஹீம்: நிழலுலக தாதா, கடத்தல், கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து, என்று மும்பையில் கொடிகெட்டி பறந்தவர் தாவூத் இப்ராஹீம். இவர் பெயரை சொன்னால் மும்பையே, இன்னும் சொல்லப்போனால் மொத்த இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகபெரிய தாதா, பயங்கரவாதி.

தாவூத் உடைய ரவுடிஷம் நாட்டை கொள்ளையடிக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும், சாக்கடை அரசியல்வாதிகளுக்கும் தேவையாக இருந்தது. இதனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாவூதுடைய ரவுடிசத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராக இல்லை.

முடிவாக மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று தேடப்பட்டதால் நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் மும்பை நகரம் ஓரளவுக்கு அமைதி அடைந்தது, மக்கள் நிம்பதி பெருமூச்சு விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

பால்தாக்ரே: சாதாரண கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையை தொடங்கிய பால்தாக்ரே, பிற்காலத்தில் வர்த்தக நகரமாக மும்பையில் "குடியேறிய வெளிமாநிலத்து மக்களை" குறிவைத்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

பிராந்திய வெறியை கிளறிவிட்டு மஹராஷ்ட்ராவில் சிவசேனா என்கிற வன்முறை அமைப்பை தொடங்கினார். மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று மராட்டிய மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் நடத்தினார்.

பிழைப்புக்காக குடியேறிய தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள், குஜராத்திகள், மார்வாடிகள் எல்லாம் பெரிய அளவில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கத்தினரிடம் ஏற்பட்ட நெருக்கத்தின் பயனாக இவரது HATE POLICY
அரசியல் முஸ்லிம்களை நோக்கி திரும்பியது.

இவர்மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் மற்றும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் சட்டத்தை மதிக்காமல் என்னை கைது செய்தால் மும்பை நகரமே பற்றி எறியும் என்று தனது சம்னா பத்திரிகை மூலம் அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். இப்படிப்பட்ட ஒருவரின் இறப்பிற்கு அரசு மரியாதை அளிப்பதன் மூலம் வன்முறை மற்றும் மதவாத, ரவுடிச அரசியலுக்கு மகாராஷ்டிர அரசு துணைபோயி இருப்பது வருந்ததக்கது. மற்றபடி தாவுதும், பால்தாக்ரேயும் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்களே!

பால்தாக்ரேயின் பிரிவு சிவசேனை இயக்கத்துக்கு வேண்டுமானால் பேரிழப்பாக இருக்கலாம், மற்றைய மக்களுக்கு இல்லை என்பதில் கருத்து வேறுபாடில்லை.

தேசிய கொடியை கொண்டு அவரது உடலை மூடி இருப்பது தேசிய கொடியை அவமதிப்பதாகும்.

6 comments:

Anonymous said...

சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இதனை விமர்சித்து மும்பையை சேர்ந்த ஒருவர் பேஸ் புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். 'பால் தாக்கரேவை போன்ற பலர் தினமும் பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். இதற்கெல்லாம் கடையடைப்பு செய்யக்கூடாது' என அவர் கூறியிருந்தார்.

அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த கருத்தை ஆமோதித்து 'லைக்' கொடுத்த இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய பெண் கைது செய்யப்பட்டதை கண்டித்து மகாராஷ்ட்ரா முதல்வருக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரும்,முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மகாராஷ்ட்ரா முதல்வர் பிரித்வி சவாணுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பந்த்க்கு எதிராக கருத்து தெரிவித்தால்,அது மத உணர்வை புண்படுத்துவதாக கூறுவது என்னை பொறுத்த வரையில் அபத்தமானது.

Oz said...

Great Blog my friend, congratulations from:
http://el-blog-de-bruce-lee.blogspot.com/

Follow me.

tc said...

ஒரு மராத்தி வரலாறு, 50 ஆண்டு மராத்தி மக்கள் குரல். மராத்தி மக்கள் மும்பை வேலை நிலையை உருவாக்க வேண்டும். 50 ஆண்டு மராத்தி மக்கள் ஒற்றுமையாக குரல் பால்தாக்கரே. நம்ம அரசியல் இல்லை :(
 
அடுத்த மராத்தி தலைவர் ராஜ் தாக்கரே. மராத்தி histroy :) வாசிக்க

tc said...

Shiv sena Tiger ....no more...sorry to hear and after Shivaji, he made maharashtra presence in the map...he lived as real Tiger...!!!

He is not CM,MP,MLA post but tiger for maharashtra.

Anonymous said...

Yes, by ruling Bombay for decades these two criminals made the city unsafe for both residents and thousands of migrant workers from other parts of the country. Laying the national flag on his body? it's a shame!

tc said...

http://in.news.yahoo.com/video/era-ends-different-shades-bal-124500558.html