Nov 21, 2012

வெட்கப்படாத ஒரு தேசம்!


Nov 21: தடுமாறும் நீதி: சாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.

காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒரு பெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால்  தூக்கிலடப்பட்ட போது  நாம் இதுபோல் எதுவும் நடத்தவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு  பேஸ்புக்கில் இவரது தோழி ரேணுகா ‘லைக்’ கொடுத்தார்.

இதை காரணமாக வைத்து மும்பை போலீஸ் இந்த இரண்டு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனை பயங்கரவாதிகள் சூறையாடி இருக்கின்றனர். மும்பை போலீசாரை கண்டித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டே  இது பத்திரிகை சுதந்திரத்தின் குரலை நசுக்குவதாகும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

வர்களை அலங்கரிக்கும் தேசிய கொடி: மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தின் மூலம் வளர்க்கப்பட்ட மதவாத சிவசேனை இயக்கத்தின் தலைவர் பால்தாக்கரேவின் இறுதி சடங்கை அரசு மரியாதையோடு, தேசிய கொடி போர்த்தி நடத்தியது தேசிய அவமானம்.

தகுதியற்ற இரங்கல் அறிவிப்புகள்: வரது இறப்பிற்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், திராவிட கழகத்தின் கீ. வீரமணி உட்பட சகலமானவர்களும் ஏதோ தேசத்தின் ஒரு முக்கிய தலைவர், தியாகி இறந்து விட்டத்தை போல் இரங்கள் தெரிவித்திருப்பது அதைவிட கேவலம். நாட்டில் எத்தனையோ நல்லவர்கள், மக்கள் சேவை செய்தவர்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் அரசு மரியாதையும், தேசிய கொடி போத்தி இறுதி ஊர்வலமும் நடத்தப்பட்டது  இல்லை.

சிறந்த வெட்கம்: மும்பை கலவரத்தை முன்னின்று நடத்தியது பால்தாக்ரே என்று சொன்ன ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், சிவசேனா மற்றும் தாக்கரேவின் பங்களிப்பை ஆதாரத்தோடு நிரூபித்தது. இப்படிபட்ட ஒரு கிரிமினலுக்கு வெட்கம் இல்லாமல் தேசியக்கொடி போர்த்தி அரசுமரியாதை. ஆனால் கசாப் சடலத்தை வாங்கவே பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவன் என்பதால் அந்த சடலத்தை வாங்க ஒருநாடு வெட்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குற்றவாளிகளுக்கு அரசு மரியாதை.

4 comments:

Anonymous said...

dei mathaveri pudicha naaikala thirunthave maateengalada.

Anonymous said...

muddalakalin nadu idthu

Anonymous said...

ஒரு சஹோதரர் மறைந்த பால்தாக்கரே அவர்களை மதவெறியர் என்று குறிப்பிட்டுள்ளார் இறந்தவரை ஒரு போதும்
திட்டக்கூடாது அதுவும் நாய் என்று சொல்வதாக இருந்தால் உண்மைமையே சொல்லவேண்டும் .அவர் ஒரு நாளும்
மத வெறியராக இருக்கவில்லை .அவர் மராட்டிய வெறியராக தான் இருந்தார் .ஏன் என்றால் மும்பை கலவரத்தில்
எத்தனையோ தமிழ் ஹிந்துக்கள் கொல்லபட்டார்கள் .பாசிஸ்டுகளுக்கு மதம் கிடையாது .ஹிந்து மதம் என்பது வேறு,
ஹிந்துத்துவா என்பது வேறு என்பதை கருத்து கண்ணப்பன் புரிந்து கொள்ளவேண்டும் .

Anonymous said...

சிந்திக்கவும்.. இங்கு மத வெறியர்கள் மட்டுமே படிக்கவும் ... தீவிரவாதி இஸ்லாமியத்தை தழுவி இருந்தால் அவன் பாவம் அறியாத நல்லவன். இந்தியா துரோகிநாடு. அதே வேறு மதத்தை தழுவினால் அந்த மதமே தீவிரவாத கூட்டம். மறுபடியும் சிந்திக்கவும்..