Dec 5, 2012

இலங்கை மீது இந்தியா? யுத்த பிரகடனம்!


Dec 06: மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தென் மேற்கே இருக்கும் தீவுத்தொகுப்பு. இது 300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் 3.2 லட்சம் மக்கள் தொகை கொண்டது.

இந்த நாட்டின் பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியாவின் GMR நிறுவனத்திடமிருந்து மீட்டு அரசே நடத்தப் போவதாக அந்நாட்டு புதிய அதிபர் முஹம்மது வாஹித் ஹசன் அறிவித்துள்ளார்.

‘ஒரு வாரத்துக்குள் மாலத்தீவு விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டும்’ என்றும் ’30 நாட்களுக்குள் தனது பெட்டி, படுக்கை எல்லாத்தையும் சுருட்டி எடுத்துக் கொண்டு வெளியேறி விட வேண்டும்’ என்று மாலத் தீவு அரசு GMR நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது இதுதான் செய்தி.

இப்போ பிரச்சனை என்னவென்றால் மாலத்தீவின் முன்னாள் அதிபர், உலக வட்டிகடைகாரன் அதான் "நம்ம உலக வங்கி" இந்த கொள்ளைகாரனிடம் கடன்வாங்கி இருக்கிறார். நம்ம மெட்ராஸ் சேட்டு கடனை சரியா கெட்ட முடியலைனா  என்ன செய்வார்? வண்டியை தூக்குவார் இல்லையா? அதுமாதிரித்தான் இதுவும்.

நம்ம உலக வட்டிகடை சேட்டு , கடனை எப்படி கெட்டலாம் என்று ஆலோசனை எல்லாம் கொடுப்பாரு. எவன் தாலியையாவது அறுத்து வட்டி கடனை புடுங்கனும் இல்லையா. இப்படித்தான் மாலத்தீவு பான்னாட்டு விமான நிலையம் இந்தியாவை சேர்ந்த  GMR நிறுவனத்திற்கு கைமாறியது.

நம்ம இந்திய கார்பரேட் கொள்ளைகாரர்கள் நுழைந்தால் நாடு என்னத்துக்கு ஆகும். 25 ஆண்டுகளுக்கு விமான நிலையத்தை நடத்தி சம்பாதித்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் நம்ம கார்பரேட் கொள்ளையர்கள் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் $25 விமான நிலைய சேவைக் கட்டணம் என்று வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த சின்ன தீவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருக்கிறது. இந்நிலையில் அது அரசுக்கு ஒரு பெரும் சுமையாக மாறியது. தனியார் நிறுவனங்கள் திறமையாக செயல்பட்டு, செலவுகளைக் குறைத்து வரவை அதிகரிக்கும்’ என்று சொல்லப்பட்டுத்தான் மாலத்தீவு விமான நிலையம் GMR நிறுவனத்திற்கு குத்தகை கொடுக்கப்பட்டது. கடைசியில் மாலத்தீவு அரசு இவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டியதாகிப் போனது.

இதனால் மாலத்தீவு அரசு இதுவரை GMR நிறுவனம் செய்த மொத்த முதலீடு $270 மில்லியனை திருப்பி கொடுப்பதாக சொல்லிவிட்டது. உடனே நமது மானம், ரோசம் உள்ள இந்திய அரசு ‘மாலத்தீவு இப்படி நடந்து கொண்டால் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருகிறது.

சிந்திக்கவும்: இப்படித்தான் உலக வட்டிகடை சேட்டிடம் அதான்யா உலக வங்கியிடம் இந்தியா கடனை வாங்கிவிட்டு வால்மார்ட், முதல் பெப்சி, கொக்க கோலா வரை எல்லோரையும் நுழைய விட்டு இந்தியாவை கூறுபோட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அரசு தனது நாட்டு விமான நிலையத்தை திரும்ப கேட்டதற்கு நமது பாயும் புலி மண்ணு மோகன் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்று மிரட்டினால்! தினம் தினம் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காக இலங்கையோடு யுத்தமே செய்திருக்க வேண்டுமே! இலங்கை மீது இந்தியா யுத்த பிரகடனம் செய்யுமா?

7 comments:

Anonymous said...

என்ன தலைவரே தலைப்பை பார்த்ததும் இந்தியாவுக்கு ரோசம் வந்து இலங்கை மீது போர் தொடுக்க ஆயத்தம் ஆகிவிட்டதோ என்று நினைத்தேன்.

Anonymous said...

அட இந்தியாவுக்கு மான ரோசமும் இருக்கா? சுண்டைக்காய் நாட்டின் காலில் வீழ்ந்து நக்கிக் கொண்டிருப்பவருக்கு அப்படியும் ஒன்று இருக்கிறதா?

Anonymous said...

மாலத்தீவுகள் அரசு, நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக ஏர்போர்ட் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலத்தீவுகள் அரசு எடுத்துக்கொண்டது

Anonymous said...

பின்னணியில் சீனா? சுமார் 1190 தீவுகளைக் கொண்ட மாலத்தீவுகள் பிராந்திய ரீதியாக, இந்திய பெருங்கடலில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய கடற்படை தற்போது மாலத்தீவுகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, மாலத்தீவுகளில் தனது காலடியை பதிப்பதற்காகவே இந்த வேலைகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாலத்தீவுகள் அதிபர் முகமது வாகித் சீனா சென்ற போது, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா முன்வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்க ஒன்றுமில்லை. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பர்மா என இந்தியாவைச் சுற்றி பல இடங்களில் தனது தடத்தை பதித்துள்ள நிலையில், மாலத்தீவுகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை பரவவிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Anonymous said...

சைனாவின் ஒரு மயிரை கூட புடுங்க முடியாது.

அ.ஐ. சுரேந்திராராஜன்/ ஜெர்மன் said...
This comment has been removed by the author.
அ.ஐ. சுரேந்திராராஜன்/ ஜெர்மன் said...

இலங்கையின் ஒரு மயிரை கூட புடுங்க முடியாது.நன்றி / ஜெர்மனி / நியூரம்பெர்க்