Mar 20, 2013

இந்தியாவை அதிரவைக்கும் ரா & மொசாத் கூட்டணி!

மார்ச் 22: இந்திய உளவுத்துறையான ராவுக்கும் இஸ்ரேலின் உளவு அமைப்பான  மொஸாதிற்கும் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
டெல்லியில் RAWவுக்கு சொந்தமான இரண்டு ப்ளாட்டுகளில் இஸ்ரேலிய உளவு அமைப்பான  மொசாத்தின் உளவாளிகள் தங்கி இருந்து பல்வேறு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மொசாத் அமைப்பு பணத்துக்காக எதையும் செய்யும். உலக அளவிலான வர்த்தகம், பணம், இஸ்ரேலின் எதிர்காலம், ஆகியவைதான் இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள். இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தின மக்களுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் குழப்பங்களை உண்டாக்கும். 
அரசியல் ரீதியாக தங்களது பாசிச சிந்தனைக்கு ஒத்த கருத்துடையவர்களை ஆட்சியில் அமர்த்த சம்மந்தப்பட்ட நாடுகளில் பல்வேறு சதி வேலைகளை அரங்கேற்றும். அது மட்டுமல்லாது இரு நாடுகளுக்கிடையே சண்டையை உண்டாக்கி அதன் மூலம் தனது ஆயுத வியாபாரத்தை நடத்தும். உலக அளவில் செயல்படும் பல்வேறு ஆயுத கம்பனிகளின் முகவர்களாவும் மொசாத்  செயல்பட்டு வருகின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.                   

1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை ’ரா’ வின் தலைவராக பதவி வகித்த ஆன்ந்த் குமார் வர்மா நாட்டின் தலைநகரிலேயே ஒரு ரகசிய இடத்தை மொசாதிற்கு வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத உளவு அமைப்பை இந்தியாவில் இருந்து செயல்பட அனுமதி அளித்ததே ராஜீவ் காந்தி படுகொலை, நாடாளுமன்ற தாக்குதல், தாஜ் ஹோட்டல் தாக்குதல் போன்றவைகள் நடக்க வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறது.                                               
எந்த ஒரு நாடும் வெளிநாடுகளின் உளவு நிறுவனங்களை தங்களது நாட்டில் செயல்பட அனுமதிப்பதில்லை. அப்படி இருக்க ‘ரா’வின் தலைவர் வர்மா 2 போலி கம்பெனிகளின் பெயரில் டெல்லியில் பிளாட் வாங்கி இருக்கிறார். அந்த போலி கம்பனிகளுக்கு ’ரா’வின் முன்னாள் ஸ்பெஷல் செயலாளர் வி.பாலச்சந்திரன் மற்றும் கூடுதல் செயலாளர் பி.ராமன் ஆகிய அதிகாரிகள்தான்  இயக்குனர்களாக இருந்து செயல்பட்டுள்ளனர். இந்த பிளாட்டுகள்தான் மொசாத்தின் உளவாளிகள் தங்கி இருந்துள்ளனர்.
அன்றைய காலக்கட்டத்தில் இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லை என்பதால் உளவாளிகளை இஸ்ரேல் குடிமகன் என்ற உண்மையை மறைத்து அர்ஜெண்டினா நாட்டு பாஸ்போர்ட்டை கொடுத்து தங்கவைத்துள்ளனர். 1989-ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு வரை இஸ்ரேலிய உளவாளிகள் மொஸாதிற்காக இந்தியாவில் தங்கி இருந்து பல்வேறு ரகசிய  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ராவின் அதிகார வரம்பு மற்றும் அத்துறைக்கு செலவு செய்யப்படும் பணத்திற்கான வரவு, செலவு பற்றி யாருக்கும் காட்ட தேவையில்லை. இதை பயன்படுத்திதான்  ராவின் தலைவரான வர்மா சட்ட விரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதே துறையை சேர்ந்த R.K. யாதவ் 17 ஆண்டுகள் போராட்டம் நடத்தி உள்ளார். வர்மாவுக்கு 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இறுதியாக அவர் மீது CBI விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படி அதிக்கப்படியான அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையாக செயல்படும்  ரா சொல்லவதை நம்பித்தான் இந்தியாவின் பாதுக்கப்பும்  மற்றும் வெளிநாட்டு கொள்கைகளும் அமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கேவலங்கள் அரங்கேறும், நம்பிக்கையற்ற ஊழல் நிறைந்த ஒரு துறைதான் ஈழப்போரில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டி பல்லாயிரக் கணக்கில்  தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பல்வேறு அநீதிகளுக்கு பின்னணியில் இவர்களே இருந்து செயல்படுகின்றனர்.

4 comments:

ruban said...

என்ன நடக்குது இங்க..... இதுல இருந்து என்ன தெரிகியது என்றால், எந்த ஒரு அரசாங்கமும் மக்களுக்காக இல்லை என்று தெரிகிறது............போடுங்க ஒட்டு, போடுங்க ஒட்டு....ஒட்டு போட்டு போட்டு இன மக்களை கொன்னு, தமிழ் மக்களை கொன்னு, தமிழ் மீனவர்களை கொன்னு...நாட அடுத்த பண முதளிகளுக்கு வித்து போங்க ப............

maharavi said...

இந்தியா முன்னேற வாய்ப்பே இல்லையோ

சிரிப்புசிங்காரம் said...

அவர்கள் நல்லவர்கள்...முஸ்லீம்களைவிட நல்லவர்கள்...நம்பிக்கையானவர்கள்,அன்னிய நாட்டிலிருந்து வந்து இந்திய முஸ்லீம்களின் துணையோடு குண்டு வைக்க வந்திருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதற்காகத்தான் இங்கே வந்து தங்கியிருப்பார்கள்...

ASHAK SJ said...

சிப்பு சிங்காரம், போன வருடம் மொசாத் தமிழ்நாடு போலிசுக்கு ட்ரைனிங் கொடுத்தது பின்னர் தமிழ்நாடு காவல் மதுரையில் டிபன் பாக்ஸ் குண்டுவைத்தது அதை தெளிவுபடுத்தியது எஸ் டி பி ஐ என்ற அரசியல் கட்சிதான்