Apr 26, 2013

கில்மா நடிகரின் பரவச முத்தம்!

ஏப்ரல் 27: விஜய் TVயில் நடிகர் பிரகாஷ்ராஜ் வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' நிகழ்ச்சியில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்து சாதனை படைத்தார் உலக நாயகன்.

கமல்ஹாசன் கவுதமியோடு LIVING TOGETHER அதாவாது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்கிற மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்ந்து வருகிறார்.

முறைப்படி திருமணம் செய்யாமல் கவுதமியை சேர்த்து வைத்திருக்கும் இந்த முறையை நம் தமிழர் கலாச்சாரத்தில் வைப்பாட்டி வைத்திருக்கிறான் என்று கேவலமா சொல்வார்கள். 

ஆனால், இதையே விஷயத்தை கமல்ஹாசன் செய்தால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கிறது ஒரு கூட்டம். இது போதாதென்று இவரது இந்த வாழ்க்கை முறையை இலவசமாக விளம்பரம் செய்கின்றன சில கேடுகெட்ட தொலை காட்சிகளும், பத்திரிக்கைகளும். 

இன்னும் சில கிறுக்கு கூட்டம் இவரை உலக நாயகன், காதல் மன்னன், எங்களின் உயிரினும் மேலானான தலைவன் என்று போற்றுகின்றன. தலைவர்கள் என்றால் யார்? தலைமை துவத்துக்கு உண்டான பண்புகள் என்ன? என்பதை கூட தெரியாத ஒரு கூட்டம் ரசிகர்கள் என்ற பெயரில் அலைகின்றது. இந்த கூட்டத்தினர் தன்னை பெற்ற தாயை உயிரினும் மேலானவர் என்று போற்றியதில்லை.

படிக்காத, பொது அறிவு இல்லாதவர்கள்தான் இப்படி என்றால் படித்த மக்களும், வெகுஜன ஊடகங்களும் கூட இப்படி கேவலமான விசயங்களை பரப்புகின்றன. புன்னகை மன்னன் படத்தில் உதட்டோடு உதடு வைத்து ஆங்கில படம் போல நிஜமாகவே நடிகை ரேகாவின் உதட்டை உறிஞ்சியவர்தான் நமது கில்மா நாயகன். ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்து தனது ஆணாதிக்க மேலாண்மையை நிரூபித்தவர்தான் இந்த உலக நாயகன்.

நடிகைகள் எல்லாம் பாடல் காட்சிகளில் வேறு வழியில்லாமல் இவரது சில்மிசங்களை பொறுத்து கொள்ள வேண்டும். இப்படி கில்மா நாயகனாக வலம் வந்த கமலகாசன் இப்பொழுது குடும்ப பெண்களையும் கில்மா செய்ய ஆரம்பித்து விட்டார். நிர்வாண நடிகர் பிரகாஷ் ராஜ் கூட்டி கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் தனது  பொண்டாட்டியை இந்த நிகழ்ச்சிக்கு கூட்டி வந்து கமலுக்கு முத்தம் கொடுக்க வைத்திருக்கலாம். 

அதை விட்டு அடுத்தவன் வீட்டு பெண்களிடம் இப்படி கேள்வி கேட்பதும் அவர்களது அறியாமையை பயன்படுத்தி கில்மா நாயகனுக்கு முத்தம் கொடுக்க வைத்திருப்பது அருவருப்பை உண்டாக்குகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல் இலகுவாக கிடைக்கும் பணம் இவர்களை இதுபோன்ற கில்மா வேலைகளில் இறங்க வைக்கிறது. எழை, எளிய உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை உணராதவர்களே இதுபோன்ற கேவலமான வக்கிர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

வறுமையின் காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் காவல்துறை பணக்கார திமிரில் கொழுப்பெடுத்து மேல்தட்டு வர்க்கம் செய்யும் விபச்சாரங்களை கண்டு கொள்வதில்லை. பார்டி என்கிற பெயரிலும், சுற்றாலா தளங்களில், கடற்கரை பீச் ஓரங்களில் கட்டி வைத்திருக்கும் உல்லாச பங்களாக்களிலும் இதுபோன்ற ஆயிரம் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. வசதி படைத்தவன் தவறிழைக்கும் பொழுது இந்த சமூகம் அதை அங்கீகரிக்கிறது அதே நேரம் ஏழை தவறு செய்தால் அதை உலகமகா தீமை போல் சித்திகரித்து எழுதுகிறது, அவர்களை சமூகத்தில் இருந்து ஓதுக்கி வைக்கிறது.  

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இந்த செயலை சிந்திக்கவும் வன்மையாக கண்டிக்கிறது! தமிழ் கலாசாரத்தை கெடுக்கும் இதுபோன்ற கயவர்களை சமூகம் புறம் தள்ள வேண்டும்! 

10 comments:

Seeni said...

sema adi..!

Anonymous said...

செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டேங்கிறாங்களே. என்ன செய்ய.

Anonymous said...

கமலகாசன் ஒரு மா மனிதர் அவரை பற்றி இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

Anonymous said...

அவர் தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.

வெற்றிவேல் said...

இவுனுக்கு கோடி பிடிக்கவே ஒரு கூட்டம் சுத்துது.... இவனலாம் நாடு கடத்தணும்...

WWW.TAMILGNN.COM said...

..."பிரகாஷ் ராஜ் தனது பொண்டாட்டியை இந்த நிகழ்ச்சிக்கு கூட்டி வந்து கமலுக்கு முத்தம் கொடுக்க வைத்திருக்கலாம். .:"


Nethi Adi......நிலாமகள் said...

அந்தப் பெண்கள் கூச்சமில்லாமல் கேட்டு அல்லவா வாங்கிக் கொண்டார்கள்...!

'அப்பாவை போகச் சொல்லு, நான் கமலோடு வாழ்ந்து விடுவேன்' என்று தன் மகனிடமே சொல்லும் ப்ரியாவின் பிரேமை ஸ்தம்பிக்கச் செய்தது. என்ன கலாச்சார இழிவு இது?

Anonymous said...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கன்னியமாக கலந்துக்கொண்ட கமல்ஹாசனை பற்றி அவதூறு கூறுவதை தவிர்க்கவும்..புத்தியை அடகு வைத்துவிட்டு எழுதாமல் நுனி நாக்கில் மற்றொரு பாஷையை பேசிக்கொண்டு தமிழை கொச்சை படுத்திக்கொண்டும் நான் இன்றைய நவநாகரிக நாயகிகளாக(நாதாரிகளாக) தம்மை அவதரிக்க ஆசைப்படும் பெண்கள் கமல் என்ற நாயகனிடம் கேட்டு வாங்கிக்கொன்டது. குறை கூறுவதாக இருந்தால் இதை நடத்தும் நிகழ்ச்சியை கூறலாம்.மேலும் காலச்சீரழிவுக்கு வழி வகுக்கும் இதை போன்ற பெண்கள் மீது உம் சாடல்கள் இருக்கட்டும்.

Unknown said...

உருப்படியா எதாவது வேலை பார்க்கலாமே ,

குப்பையை கிளறாமல்

Anonymous said...

தமிழர் பண்பாடு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லபடுகிறது. சில அரசியல் தலைவர்கள் 2, 3 என்று மனைவி, துணைவி என்று வைத்துள்ளர்கள் அவர்களை என்ன சொல்ல போறீங்க